பஸ், லாரிகளை அசால்டாக மீட்டு திறமையை நிரூபித்த மஹிந்திரா தார்... பிரம்மிக்க வைக்கும் வீடியோக்கள்...

மஹிந்திரா தார் தனது திறமையை நிரூபித்து காட்டிய நிகழ்வுகளின் காணொளிகளை இந்த செய்தியில் பார்க்கலாம்.

பஸ், லாரிகளை அசால்டாக மீட்டு திறமையை நிரூபித்த மஹிந்திரா தார்... பிரம்மிக்க வைக்கும் வீடியோக்கள்...

வலுவான எஸ்யூவி ரக கார்களை தயாரிப்பதில் இந்தியாவின் மஹிந்திரா நிறுவனம் நிபுணத்துவம் பெற்று விளங்குகிறது. இதற்கு தார் (Mahindra Thar) ஒரு உதாரணம். இந்தியா முழுவதும் உள்ள ஆஃப் ரோடு ஆர்வலர்கள் பலரின் முதன்மையான தேர்வாக மஹிந்திரா தார் திகழ்ந்து வருகிறது. மஹிந்திரா தாரின் மகத்தான சக்தியே அதற்கு காரணம்.

பஸ், லாரிகளை அசால்டாக மீட்டு திறமையை நிரூபித்த மஹிந்திரா தார்... பிரம்மிக்க வைக்கும் வீடியோக்கள்...

இந்தியாவிற்கு பெருமை சேர்க்க கூடிய தயாரிப்புகளில் ஒன்றான மஹிந்திரா தார் எஸ்யூவி பலமுறை தனது திறமையை நிரூபித்து காட்டியுள்ளது. அப்படி நடந்த நிகழ்வுகளைதான் இந்த பதிவில் காணொளிகளுடன் தொகுத்து வழங்கியுள்ளோம். இந்த செய்தியின் இறுதியில், மஹிந்திரா தாரின் லட்சக்கணக்கான ரசிகர்களில் நீங்களும் ஒருவராக இணைந்து விடுவீர்கள் என்பது உறுதி.

பஸ், லாரிகளை அசால்டாக மீட்டு திறமையை நிரூபித்த மஹிந்திரா தார்... பிரம்மிக்க வைக்கும் வீடியோக்கள்...

லாரியை மீட்ட மஹிந்திரா தார்

மழை பெய்தால் சாலை வழுக்கும் தன்மை கொண்டதாக மாறிவிடும். இதன் காரணமாக வாகனங்கள் சில சமயங்களில் கட்டுப்பாட்டை இழந்து விடுகின்றன. இதன்படி மழை பெய்ததால் மிகவும் ஈரமாக இருந்த சாலையில் சென்ற லாரி ஒன்று, திடீரென கட்டுப்பாட்டை இழந்து, சாலையோராமாக இருந்த குழியில் எதிர்பாராதவிதமாக சிக்கி கொண்டது.

Source: Shantonil Nag/YouTube

ஆனால் அந்த லாரியை, மஹிந்திரா தார் பத்திரமாக மீட்டது. இந்த மீட்பு பணியில் மஹிந்திரா தார் எவ்வித சிரமத்தையும் எதிர்கொள்ளவில்லை. இத்தனைக்கும் மஹிந்திரா தாருடன் ஒப்பிடும்போது லாரியின் எடை மிகவும் அதிகம். இருந்தபோதும் லாரியை வெற்றிகரமாக இழுத்து, மீட்பு பணியை கனகச்சிதமாக முடித்து விட்டது மஹிந்திரா தார்.

Source: Go Boundless/YouTube

பேருந்தை மீட்ட மஹிந்திரா தார்

அதிக எண்ணிக்கையிலான சுற்றுலா பயணிகளை ஏற்றி வந்த பேருந்து ஒன்று எதிர்பாராதவிதமாக மணலில் சிக்கி கொண்டது. எனவே அந்த பேருந்தை மீட்க மஹிந்திரா தார் வந்தது. பேருந்தை மீட்கும் பணிகளில் ஆரம்பத்தில் மஹிந்திரா தார் தடுமாறவே செய்தது. எனினும் இறுதியில் மஹிந்திரா தார், பேருந்தை வெற்றிகரமாக மீட்டு விட்டது.

பஸ், லாரிகளை அசால்டாக மீட்டு திறமையை நிரூபித்த மஹிந்திரா தார்... பிரம்மிக்க வைக்கும் வீடியோக்கள்...

டிப்பர் லாரியை மீட்ட மஹிந்திரா தார்

மணல் போன்றவற்றை ஏற்றி செல்வதால், பொதுவாக டிப்பர் லாரிகள் மிகவும் சக்தி வாய்ந்தவையாகதான் வடிவமைக்கப்படுகின்றன. இங்கே ஒரு டிப்பர் லாரி ஈரமான நிலப்பரப்பில் சிக்கி கொண்டது. எனவே அந்த டிப்பர் லாரியை மீட்க மஹிந்திரா தார் எஸ்யூவி வந்தது. எப்போதும் இந்த டிப்பர் லாரியையை மஹிந்திரா தார் வெற்றிகரமாக மீட்டு விட்டது.

பஸ், லாரிகளை அசால்டாக மீட்டு திறமையை நிரூபித்த மஹிந்திரா தார்... பிரம்மிக்க வைக்கும் வீடியோக்கள்...

இந்த காணொளியை பார்க்கும்போது, டிப்பர் லாரியில் லோடு எதுவும் இல்லை என்பது போல் தெரிகிறது. இதன் காரணமாக மீட்பு பணியின் போது மஹிந்திரா தார் எஸ்யூவிக்கு எந்தவிதமான சிக்கல்களும் ஏற்படவில்லை. வேலை சுலபமாக முடிந்து விட்டது. லோடு இருந்திருந்தால் மீட்பு பணியில் ஒரு சில சிரமங்களை மஹிந்திரா தார் எஸ்யூவி சந்தித்திருக்கும்.

Source: Bhargav R

மஹிந்திரா தார் எஸ்யூவி கார் எவ்வளவு சக்தி வாய்ந்தது? என்பதை மேற்கண்ட நிகழ்வுகளின் மூலம் புரிந்து கொள்ளலாம். இதுபோன்ற சவாலான காரியங்களையும் சர்வ சாதாரணமாக செய்வதன் காரணமாகதான் கரடு, முரடான ஆஃப் ரோடு பயணங்களுக்கு உகந்த வாகனங்களில் முதன்மையானதாக மஹிந்திரா தார் எஸ்யூவி திகழ்கிறது.

Most Read Articles

மேலும்... #ஆஃப் பீட் #off beat
English summary
Mahindra Thar Rescue Operations: Videos. Read in Tamil
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X