சேற்றில் போராடிய ஜீப் விராங்கலர், அலேக்காக மீட்டெடுத்த மஹிந்திரா தார்: ஒரு சாகச சாதுர்யம்..!!

சேற்றில் போராடிய ஜீப் விராங்கலர், அலேக்காக மீட்டெடுத்த மஹிந்திரா தார்: ஒரு சாகச சாதுர்யம்..!!

By Azhagar

இந்தியர்கள் பலருக்கும் கனவு வாகனமாக உள்ள ஜீப் விராங்கலர் சேற்றில் சிக்கி தவிக்க, விரைந்து வந்த மஹிந்திரா தார், அதை வெற்றியோடு மீட்டெடுத்துள்ளது.

சேற்றில் போராடிய ஜீப் விராங்கலரை விடுவித்த மஹிந்திரா தார்..!

பணத்தை விட நமக்கு இருக்கும் நற்குணம் தான் உயரிய சொத்து என்பதை உணரும் வகையில் சில சம்பவங்கள் நம் வாழ்க்கையில் அவ்வப்போது நடக்கும்.

சேற்றில் போராடிய ஜீப் விராங்கலரை விடுவித்த மஹிந்திரா தார்..!

அதுபோன்ற சம்பவம் தான், கேரளாவில் நடந்தது. சகதியில் சிக்கி தவித்த ஜீப் விராங்கலர் காரை, எவ்வளவு பணம் செலவும் செய்தும் உரிமையாளரால் மீட்டெடுக்க முடியவில்லை.

Recommended Video

2017 Skoda Octavia RS Launched In India | In Tamil - DriveSpark தமிழ்
சேற்றில் போராடிய ஜீப் விராங்கலரை விடுவித்த மஹிந்திரா தார்..!

அமெரிக்காவை சேர்ந்த பிரபல ஜீப் நிறுவனம் 2016ல் இந்தியாவில் அதிகாரப்பூர்வமாக தனது விற்பனையை தொடங்கியது.

சமீபத்தில் அதன் விராங்கலர் மாடல் கார் இந்தியாவில் பலத்த எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் விற்பனைக்கு வந்தது.

சேற்றில் போராடிய ஜீப் விராங்கலரை விடுவித்த மஹிந்திரா தார்..!

அதிகளவிலான பணம் என்ற தடுமாற்றம் இருந்த போதிலும், ஜீப்பின் விராங்கலர் மாடலுக்கு இந்திய வாடிக்கையாளர்கள் மத்தியில் வரவேற்பு தொடர்ந்து குவிந்தது.

சேற்றில் போராடிய ஜீப் விராங்கலரை விடுவித்த மஹிந்திரா தார்..!

ஆஃப்-ரோடு தேவைகளுக்கான பிரத்யேக மாடலான இந்த கார், சமீபத்தில் சகதியில் சிக்கி தவிக்க அதை மஹிந்திரா தார் கார் வந்து மீட்டெடுக்கும் வீடியோ வெளியாகி உள்ளது.

சேற்றில் போராடிய ஜீப் விராங்கலரை விடுவித்த மஹிந்திரா தார்..!

மிகவும் சவாலான பயணத்தையும் சாதுர்யமாக கடக்க உதவும் விராங்கலர் வாகனத்தை ஜீப் நிறுவனம் விளம்பரம் செய்த நிலையில்,

அந்த கார் சேற்றில் சிக்கி தவித்த வீடியோ இணையத்திலும் பகிரப்பட்டு, மிகவும் வைரலாகி வருகிறது.

சேற்றில் போராடிய ஜீப் விராங்கலரை விடுவித்த மஹிந்திரா தார்..!

அந்த வீடியோவில் சேற்றில் சிக்கிய விராங்கலர் காரை வெளியே கொண்டு வர ஓட்டுநர் படாதபாடு படுகிறார். ஆனால் ஒன்றும் நடக்கவில்லை.

இதற்கிடையில் மஹிந்திராவின் தார் மாடல் காரை ஓட்டி வரும் ஒருவர், பிரச்சனையில் சிக்கிய விராங்கலர் காரை அலேக்காக மீட்டெடுக்கிறார்.

சேற்றில் போராடிய ஜீப் விராங்கலரை விடுவித்த மஹிந்திரா தார்..!

சேற்றில் சிக்கிய விராங்கலர் மாடல் கார், டீசல் தேர்வுக்கொண்ட 2.8 லிட்டர் வி.எம் மோடோரி டர்போ எஞ்சினைக் கொண்டது.

இதனால் அதிகப்பட்சமாக 197 பிஎச்பி பவர் மற்றும் 460 என்.எம் டார்க் திறனை வழங்க் முடியும்.

சேற்றில் போராடிய ஜீப் விராங்கலரை விடுவித்த மஹிந்திரா தார்..!

விராங்கலர் மாடலை மீட்டெடுத்த மஹிந்திராவின் தார் மாடல் காரில் 2.5 லிட்டர் திறன் மட்டுமே கொண்ட சிஆர்டீ எஞ்சின் உள்ளது.

இது அதிகப்படியாக 105 பிஎச்பி பவர் மற்றும் 247 என்.எம் டார்க் திறனை வழங்கும்.

சேற்றில் போராடிய ஜீப் விராங்கலரை விடுவித்த மஹிந்திரா தார்..!

இந்த சம்பவத்தில் ஆபத்பாந்தவனாக வந்த தார் மாடல் கார் திறனில் சிறியளவில் இருந்தாலும், அந்த வாகனத்தில் பல்வேறு மாடிஃபிகேஷன் செய்யப்பட்டு இருந்தது.

சேற்றில் போராடிய ஜீப் விராங்கலரை விடுவித்த மஹிந்திரா தார்..!

விபத்தில் சிக்கிய விராங்கலர் காரை உரிமையாளர் எப்படி வாங்கி இருந்தாரோ அவ்வாறே வைத்திருந்தார்.

இருந்தாலும் விராங்கலரை காப்பாற்ற தாருக்கு மாடிஃபிகேஷன் பணிகள் மட்டும் காரணமல்ல.

சேற்றில் போராடிய ஜீப் விராங்கலரை விடுவித்த மஹிந்திரா தார்..!

மஹிந்திரா தார் ஏற்கனவே சிறந்த உராய்வு கட்டுப்பாட்டு திறனை பெற்றிருக்கும் மாடல். அதனால் அவ்வளவு வலிமையான விராங்கலர் காரை எளிதாக வெளியே கொண்டு வர முடிந்தது.

சேற்றில் போராடிய ஜீப் விராங்கலரை விடுவித்த மஹிந்திரா தார்..!

இதுபோன்ற சம்பவங்கள் நடைபெற்றால், விராங்கலர் போல பல லட்சம் மற்றும் விற்பனை திறனை பெற்றுள்ள காரை மீட்க, அதிகளவில் செலவுப்பிடிக்கும்.

சேற்றில் போராடிய ஜீப் விராங்கலரை விடுவித்த மஹிந்திரா தார்..!

ஆனால் மஹிந்திரா தார் ஓட்டுநரின் சாதுர்யமான செயல்பாட்டால், விராங்கலருக்கு அதுபோன்ற நிலைமை ஏற்படாமல், உரிமையாளரின் பணமும் தப்பியது.

இந்த சம்பவம் பற்றிய வீடியோவை மஹிந்திரா நிறுவனம் தான் வெளியிட்டுள்ளது. இதன்மூலம் பல ஆஃப்-ரோடு விரும்பிகளுக்கு மஹிந்திரா தார் காரும் விருப்பத்தின் கீழ் வந்துள்ளது.

Most Read Articles
மேலும்... #ஆஃப் பீட் #off beat
English summary
Read in Tamil: Mahindra Thar Rescuing A Jeep Wrangler Stuck in The Mud Is Proof Money Can't Buy You Skills. Click for the Details...
Story first published: Wednesday, September 6, 2017, 15:53 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X