2 கோடி ரூபாய் காரை காப்பாற்றிய 11 லட்ச ரூபாய் கார்! எல்லாரயும் மூக்கு மேல் விரல் வைக்க வைத்த இந்திய தயாரிப்பு!

கடற்கரை மணலில் வாகனங்கள் சிக்கி கொண்ட நிகழ்வுகளை இதற்கு முன்னர் நீங்கள் பலமுறை கேள்விபட்டிருக்கலாம். டிரைவ்ஸ்பார்க் தமிழ் தளம் கூட, இது தொடர்பான செய்திகளை வாசகர்களுக்கு பல முறை வழங்கியுள்ளது. ஆனால் இதன் ஆபத்தை உணராமல் இன்னமும் பலர், கடற்கரைகளில் வாகனங்களை மிக அலட்சியமான முறையில் இயக்கி கொண்டுதான் இருக்கின்றனர்.

ஆஃப் ரோடு திறன்கள் மிகுந்த வாகனங்கள் கூட, கடற்கரை மணலில் சிக்கி கொள்வதற்கான வாய்ப்புகள் உள்ளன. இதை நிரூபிக்கும் வகையிலான சம்பவம் ஒன்று தமிழ்நாட்டில் (Tamil Nadu) உள்ள கிழக்கு கடற்கரை சாலையில் (East Coast Road) நடைபெற்றுள்ளது. இது குறித்த தகவல்களின் தொகுப்புதான் இந்த செய்தி.

Mahindra Thar

சமூக வலை தளங்களில் தற்போது வைரல் வீடியோ (Viral Video) ஒன்று வேகமாக பரவி வருகிறது. இதில், கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள கடற்கரை ஒன்றில், மிகவும் விலை உயர்ந்த லேண்ட் ரோவர் டிஃபெண்டர் (Land Rover Defender) கார் சிக்கி கொண்டிருப்பதை நம்மால் பார்க்க முடிகிறது. ஆனால் நீண்ட நேரமாக போராடியும், அந்த காரை மீட்க முடியவில்லை.

இந்த லேண்ட் ரோவர் டிஃபெண்டர் காரின் விலை (Price) சுமார் 2 கோடி ரூபாய் என கூறப்படுகிறது. அதற்கு ஏற்ப ஆஃப் ரோடு சாகச பயணங்களை மேற்கொள்வதற்கு ஏற்ற பல்வேறு வசதிகள், இந்த காரில் வழங்கப்பட்டுள்ளன. ஆனால் ஆஃப் ரோடு சாகச பயணங்கள் மிகவும் சவாலானவை. எந்த வாகனமாக இருந்தாலும், திடீரென ஆபத்தில் சிக்கி கொள்ளலாம்.

Mahindra Thar Rescues Land Rover Defender

அதேதான் இந்த லேண்ட் ரோவர் டிஃபெண்டர் காருக்கும் நடந்துள்ளது. ஆனால் இங்கே கவனிக்க வேண்டிய மற்றொரு விஷயம் என்னவென்றால், கடற்கரை மணலில் சிக்கிய லேண்ட் ரோவர் டிஃபெண்டர் காரை மீட்டது, மஹிந்திரா தார் (Mahindra Thar) ஆகும். லேண்ட் ரோவர் டிஃபெண்டர் காரை சங்கிலி மூலமாக இணைத்து, கடற்கரை மணலில் இருந்து வெளியே எடுத்து அசத்தியிருக்கிறது மஹிந்திரா தார்.

அதுவும் மஹிந்திரா தார் அதிக நேரம் எல்லாம் எடுத்து கொள்ளவில்லை. அதிக எடை கொண்ட லேண்ட் ரோவர் டிஃபெண்டர் காரை மிக எளிதாகவே மீட்டுள்ளது. இதன் காரணமாக இந்த வீடியோ சமூக வலை தளங்களில் தற்போது மிக வேகமாக பரவி வருகிறது. மஹிந்திரா தாரும் கூட, ஒரு ஆஃப் ரோடு வாகனம்தான்.

ஆபத்தில் சிக்கி கொண்ட வாகனங்களை மீட்பது, மழை மற்றும் வெள்ள பாதிப்புகளை பார்வையிடுவது போன்ற பல்வேறு சவாலான வேலைகளுக்கு மஹிந்திரா தார் பயன்படுகிறது. ஆனால் லேண்ட் ரோவர் டிஃபெண்டர் உடன் ஒப்பிடும்போது, மஹிந்திரா தார் காரின் விலை மிக மிக குறைவு.

இந்திய சந்தையில் தற்போதைய நிலையில் மஹிந்திரா தார் காரின் ஆரம்ப விலை வெறும் 10.98 லட்ச ரூபாயாக மட்டுமே உள்ளது. அதே நேரத்தில் இதன் டாப் வேரியண்ட்டின் விலை வெறும் 16.94 லட்ச ரூபாயாக மட்டுமே உள்ளது. இவை எக்ஸ் ஷோரூம் விலை (Ex-showroom Price) என்பது இங்கே குறிப்பிடத்தக்க விஷயம் ஆகும்.

டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: ஆஃப் ரோடு சாகச பயணங்கள் உற்சாகம் அளிக்க கூடியவைதான். ஆனால் அதில் ஆபத்தும் இருக்கிறது. எனவே நீங்கள் ஆஃப் ரோடு பயணங்களை மேற்கொள்கிறீர்கள் என்றால், கூடவே மீட்பு வாகனமும் வருவது நன்மை பயக்கும் என்பது எங்கள் கருத்து.

More from DriveSpark

Article Published On: Thursday, December 21, 2023, 18:07 [IST]
English summary
Mahindra thar rescues land rover defender viral video
மேலும்... #ஆஃப் பீட் #off beat
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+