ஷோரூம்ல இருந்து டெலிவரி எடுத்த கையோட தனி தனியா பிரிச்சு போட்ட உரிமையாளர்! புது காருக்கு ஊர்ப்பட்ட செலவு!

இந்திய வாடிக்கையாளர்களின் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் மஹிந்திரா தார் ராக்ஸ் (Mahindra Thar Roxx) கார் சமீபத்தில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டது. இந்த முரட்டுத்தனமான காரை, வாடிக்கையாளர்களுக்கு டெலிவரி செய்யும் பணிகளை மஹிந்திரா நிறுவனம் தற்போது விறுவிறுப்பாக மேற்கொண்டு வருகிறது. இது மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வந்துள்ள கார் என்பதால், மஹிந்திரா நிறுவனத்தின் ஷோரூம்கள் திருவிழா கோலம் பூண்டுள்ளன. ஒட்டகத்தில் வந்து டெலிவரி பெற்று செல்வது, டெலிவரியின்போது உண்மையான துப்பாக்கியால் வானத்தை நோக்கி சுட்டு மகிழ்ச்சியை வெளிப்படுத்துவது என வாடிக்கையாளர்கள் பலர் கொண்டாட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

அத்துடன் ஷோரூமில் இருந்து டெலிவரி பெற்ற உடனேயே, மாடிஃபிகேஷன் செய்யும் ஒர்க் ஷாப்களுக்கு, நிறைய பேர் மஹிந்திரா தார் ராக்ஸ் காரை கொண்டு சென்று விடுகின்றனர். அங்கு தங்கள் விருப்பத்திற்கு ஏற்ற வகையில், மஹிந்திரா தார் ராக்ஸ் காரை மாற்றம் செய்து கொள்கின்றனர்.

Mahindra Thar Roxx SUV Converted Into Jeep Wrangler Rubicon

இந்த வரிசையில் மஹிந்திரா தார் ராக்ஸ் காரின் உரிமையாளர் ஒருவர், அதை ஜீப் வ்ராங்லர் ரூபிகான் (Jeep Wrangler Rubicon) காரை போல் மாற்றம் செய்துள்ளார். இந்திய சந்தையில் தற்போதைய நிலையில் மஹிந்திரா தார் ராக்ஸ் காரின் ஆரம்ப விலை வெறும் 12.99 லட்ச ரூபாய் மட்டுமே.

அதே நேரத்தில் இந்த காரின் டாப் வேரியண்ட்டின் விலையும் கூட 22.49 லட்ச ரூபாயாக மட்டுமே இருக்கிறது. இவை எக்ஸ்-ஷோரூம் விலை (Ex-Showroom Price) ஆகும். ஆனால் ஜீப் வ்ராங்லர் ரூபிகான் காரின் விலையோ 71.65 லட்ச ரூபாயாக உள்ளது. இதுவும் எக்ஸ்-ஷோரூம் விலைதான்.

Mahindra Thar Roxx SUV

எனவேதான் மஹிந்திரா தார் ராக்ஸ் காரை வாங்கி, ஜீப் வ்ராங்லர் ரூபிகான் காரை போல், அதன் உரிமையாளர் மாற்றம் செய்து கொண்டுள்ளார். மாடிஃபிகேஷன் மூலமாக மஹிந்திரா தார் ராக்ஸ் கார், கிட்டத்தட்ட உண்மையான ஜீப் வ்ராங்லர் ரூபிகான் காரை போன்ற தோற்றத்திற்கு வந்து விட்டது என்றே சொல்லலாம்.

இது தொடர்பான வைரல் வீடியோ (Viral Video), இன்ஸ்டாகிராம் தளத்தில் பதிவிடப்பட்டுள்ளது. இந்த வைரல் வீடியோவில், மஹிந்திரா தார் ராக்ஸ் காரின் முன் பகுதியில், உண்மையான ஜீப் வ்ராங்லர் ரூபிகான் காரின் பம்பர் பொருத்தப்பட்டிருப்பதை நம்மால் பார்க்க முடிகிறது. அத்துடன் 2 எல்இடி ப்ரொஜெக்டர் பனி விளக்குகளும் பொருத்தப்பட்டுள்ளன.

மேலும் உண்மையான ஜீப் வ்ராங்லர் ரூபிகான் காரின் ஃபெண்டரையும், இந்த மஹிந்திரா தார் ராக்ஸ் காரில் பொருத்தியுள்ளனர். மேலும் உண்மையான ஜீப் வ்ராங்லர் ரூபிகான் காரின் 17 இன்ச் அலாய் வீல்களையும், இந்த மஹிந்திரா தார் ராக்ஸ் பெற்றுள்ளது. மஹிந்திரா தார் ராக்ஸ் ஆஃப் ரோடு சாகச பயணங்களுக்கு ஏற்ற கார்களில் ஒன்றுதான்.

இருப்பினும் மஹிந்திரா தார் ராக்ஸ் காரின் ஆஃப் ரோடு திறன்களை மேம்படுத்தும் வகையில், யோகஹாமா ஜியோலேண்டர் ஆல்-டெர்ரெயின் டயர்களை (Yokohama Geolander All-terrain Tyres) பொருத்தியுள்ளனர். அதே நேரத்தில் இந்த மஹிந்திரா தார் ராக்ஸ் காரின் பின் பகுதியில் ஜீப் வ்ராங்லர் ரூபிகான் காரை போன்ற எல்இடி டெயில்லைட்கள் பொருத்தப்பட்டுள்ளன.

வெளிப்புறம் மட்டுமல்லாது, மஹிந்திரா தார் ராக்ஸ் காரின் உட்புறத்திலும் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. இதன்படி டோர்கள் மற்றும் டேஷ்போர்டில் ஆம்பியண் லைட்டிங், மெர்சிடிஸ் பென்ஸ் ஜி-வேகன் (Mercedes Benz G-Wagen) காரை போன்ற ஏசி வெண்ட்கள் ஆகிய அம்சங்களை எல்லாம் உட்புறத்தில் பொருத்தியுள்ளனர். அத்துடன் கருப்பு நிற லெதர் சீட் கவர்களையும் வழங்கியிருக்கின்றனர்.

டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: ஒட்டுமொத்தத்தில் இந்த மஹிந்திரா தார் ராக்ஸ் கார், கிட்டத்தட்ட ஜீப் வ்ராங்லர் காரின் தோற்றத்தை பெற்றுள்ளது என்று சொல்லலாம். இதுதான் இந்தியாவில் தற்போதைய நிலையில் ஜீப் வ்ராங்லர் ரூபிகான் காராக மாற்றம் செய்யப்பட்டுள்ள முதல் மற்றும் ஒரே மஹிந்திரா தார் ராக்ஸ் என இந்த வீடியோவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கு முழுமையாக எவ்வளவு செலவானது? என்பது உறுதியாக தெரியவில்லை. நிச்சயமாக அதன் உரிமையாளர் பெரும் தொகையை செலவு செய்திருப்பார் என நாங்கள் கருதுகிறோம். ஆனால் ஜீப் வ்ராங்லர் காரின் விலையுடன் ஒப்பிட்டால், அதை போல் மாற்றுவதற்கு செலவிடப்பட்ட தொகை மிகவும் குறைவாகவே இருக்கும்.

More from DriveSpark

Article Published On: Friday, November 22, 2024, 14:17 [IST]
English summary
Mahindra thar roxx suv converted into jeep wrangler rubicon viral video all details
மேலும்... #car modification #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+