மாருதி தயாரிப்பு என்றால் சும்மாவா!! மஹிந்திரா வாகனத்தால் கூட முடியல - தார் ஓனர்கள் இந்த வீடியோவை பார்க்காதீங்க

மஹிந்திரா தார் (Mahindra Thar) வாகனம் சிக்கிய சேற்று பாதையில், மாருதி சுஸுகி ஜிம்னி (Maruti Suzuki Jimny) வாகனம் அசால்ட்டாக கடந்து சென்றுள்ளது. எங்கு இந்த சம்பவம் நடந்துள்ளது? இந்த சம்பவத்தின்போது தார் மற்றும் ஜிம்னி வாகனங்களின் எந்த வேரியண்ட்கள் பயன்படுத்தப்பட்டன? என்ற கேள்விகளுக்கான பதில்களாக இதுகுறித்து இணையத்தில் வெளியிடப்பட்டுள்ள வீடியோவை இனி பார்க்கலாம்.

மஹிந்திரா தார் 2020ஆம் ஆண்டின் இறுதியில் அறிமுகப்படுத்தப்பட்ட போது அப்படியொரு வரவேற்பு இருந்தது. அறிமுகத்தின்போது தார் வாகனத்தை புக் செய்தவர்கள் கூட அடுத்த பல மாதங்கள் கழித்து டெலிவிரி எடுக்க வேண்டிய நிலைமை இருந்தது. அந்த அளவிற்கு மிகுந்த டிமாண்டில் இருந்த தாருக்கு போட்டியாக மாருதி சுஸுகி நிறுவனம் கடந்த ஜனவரியில் ஜிம்னியை ஆட்டோ எக்ஸ்போவில் வெளியீடு செய்தது.

maruti suzuki jimny easily crossed

ஆனால், முன்பதிவு செய்த வாடிக்கையாளர்களுக்கு ஜிம்னி வாகனங்கள் டெலிவிரி செய்யும் பணிகள் சமீபத்தில்தான் துவங்கப்பட்டன. தார், ஜிம்னி இரண்டும் சகதி மற்றும் கரடு முரடான பாறைகளை கொண்ட ஆஃப்-ரோடுகளை கையாளுவதற்கு ஏற்ற எஸ்யூவி வாகனங்கள். இதனாலேயே இவை இரண்டில் எது சிறந்தது? என்கிற விவாதம் அவற்றின் உரிமையாளர்களிடையே சமீப வாரங்களாக இருந்து வருகிறது.

இதனை அறிய, தார் மற்றும் ஜிம்னியை சிலர் நிஜ உலகில் ஆஃப்-ரோட்டிற்கு கொண்டு சென்று சோதித்துவருவது போல், கேரளாவில் சிலர் தங்களது மஹிந்திரா தார் மற்றும் மாருதி சுஸுகி ஜிம்னி வாகனங்களை சகதி மிகுந்த காட்டு பாதையில் டிரைவ் செய்து பார்த்துள்ளனர். இதுகுறித்து ஆர்.டி ஆட்டோ கேட்டலிஸ்ட் என்ற இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ள வீடியோவை கீழே காணலாம்.

சில நிமிடங்கள் மட்டுமே ஓடக்கூடியதாக உள்ள இந்த வீடியோவில், முதலில் சிவப்பு நிறத்திலான மஹிந்திரா தார் வாகனம் ஏற்ற இறக்கங்களை கொண்ட சகதியான பாதையில் கொண்டு செல்லப்படுகிறது. வாகனத்திற்கு வழிக்காட்டுவதற்காக அதற்கு முன்பாக ஒருவர் இருப்பதை வீடியோவில் பார்க்க முடிகிறது. பாதையில் பள்ளங்கள் மிக ஆழமாக இருப்பது போல் தெரியவில்லை. இருப்பினும், அந்த தார் வாகனம் ஒரு கட்டத்தில் சேற்றில் சிக்கி கொண்டது. ஒருவேளை சேற்றில் சகதிகள் மிகவும் இலகுவானதாக இருந்திருக்கலாம்.

பெரிய மண் மேட்டை தார் கடக்க வேண்டும். ஆனால் அதில் ஏற முடியாமல் சேற்றில் தார் நன்றாக சிக்கி கொண்டது. அதன்பின், அந்த தார் வாகனத்தை எவ்வாறு அங்கிருந்து அகற்றினால் என்பதெல்லாம் வீடியோவில் காட்டப்படவில்லை, நேராக சொல்ல வந்த விஷயத்திற்குள் வந்துவிட்டனர். அதாவது, அதன்பின் அதே பாதையில் மாருதி சுஸுகி ஜிம்னி வாகனம் ஒன்று கொண்டுவரப்படுகிறது.

maruti suzuki jimny easily crossed

முன்பு அதே பாதையில் சென்ற தாரை போல் சிவப்பு நிறத்தில் இருந்த இந்த ஜிம்னி வாகனமும் ஆரம்பத்தில் சேற்றில் சிக்கிக் கொள்வது போன்றுதான் இருந்தது. ஆனால் ஜிம்னியை இயக்கியவர் வாகனத்தை மீண்டும் ரிவர்ஸில் கொண்டுவந்து, சாமர்த்தியமாக யோசித்து பாதையின் இடதுப்பக்கத்தில் சென்றுள்ளார். ஏனெனில் பாதையில் வலது பக்கத்தில்தான் ஆழமான பள்ளம் இருந்தது. இதன் வழியாக சென்றதினாலேயே தார் சிக்கி கொண்டது என்று கூட சொல்லலாம்.

இந்த சம்பவத்தில் பயன்படுத்தப்பட்ட தார் மற்றும் ஜிம்னி வாகனங்களில் ஆஃப்டர் மார்க்கெட்டில் வாங்கப்பட்ட ஆஃப்-ரோடு அலாய் சக்கரங்கள் மற்றும் டயர்கள் பொருத்தப்பட்டுள்ளன. மஹிந்திரா தாரை பெட்ரோல் அல்லது டீசல் என்ஜின் தேர்வுகளில் மேனுவல் அல்லது ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் உடன் பெறலாம். ஆனால் ஜிம்னி பெட்ரோல் என்ஜின் உடன் மட்டுமே கிடைக்கிறது. ஆனால் இந்த வாகனத்தையும் மேனுவல் அல்லது ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸில் பெறலாம். ஆனால், சோதனையில் உட்படுத்தப்பட்டவை பெட்ரோல்-ஆட்டோமேட்டிக் வேரியண்ட்கள் ஆகும்.

டிரைவ்ஸ்பார்க்கின் கருத்து: இந்த சம்பவத்தில், தாரை விட ஜிம்னி சிறப்பாக செயல்பட்டதற்கு, ஜிம்னியின் சிறிய அளவிலான தோற்றமும், குறைந்த எடையையும் முக்கிய காரணமாகும். இருப்பினும், டிரைவர் சாமர்த்தியமாக யோசித்து ஓட்டினால் தாரிலும் இவ்வாறான பாதையை கடக்க முடியும். ஆதலால் நிச்சயமாக, இவை இரண்டின் ஆஃப்-ரோடு திறனை இந்த ஒரு சம்பவத்தை வைத்து மட்டும் கணிக்க முடியாது.

More from DriveSpark

Article Published On: Monday, July 17, 2023, 15:51 [IST]
English summary
Mahindra thar stuck maruti suzuki jimny esaily crossed same terrain
மேலும்... #ஆஃப் பீட் #off beat
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+