உங்க வண்டில இது இருந்தா அவ்ளோதான்! 6 மாசம் ஜெயிலில் போட கோர்ட் அதிரடி உத்தரவு! போலீஸ்காரங்க வேட்டையாட போறாங்க!

வாகன உரிமையாளர்களுக்கு 'செக்' வைக்கும் அதிரடி உத்தரவு ஒன்றை நீதிமன்றம் பிறப்பித்துள்ளதால், காவல் துறையினர் வேட்டைக்கு தயாராகி வருகின்றனர். இது குறித்த விரிவான தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

இந்தியாவில் கார், பைக் உள்ளிட்ட வாகனங்களை மாடிஃபிகேஷன் (Modification) செய்வது சட்ட விரோதம் ஆகும். ஆனால் வாகன உரிமையாளர்கள் பலர் இதனை கொஞ்சம் கூட பொருட்படுத்தாமல், தங்கள் வாகனங்களில் பல்வேறு விதமான மாடிஃபிகேஷன்களை செய்து வருகின்றனர்.

உங்க வண்டில இது இருந்தா அவ்ளோதான்! 6 மாசம் ஜெயிலில் போட கோர்ட் அதிரடி உத்தரவு! போலீஸ்காரங்க வேட்டையாட போறாங்க!

Image used for representation purpose only

குறிப்பாக மஹிந்திரா தார் (Mahindra Thar) போன்ற எஸ்யூவி (SUV) ரக கார்கள் மற்றும் ராயல் என்பீல்டு பைக்குகள்தான் (Royal Enfield Bikes) மிகவும் அதிகமாக மாடிஃபிகேஷன் செய்யப்படுகின்றன. சாலையில் மற்றவர்களின் கவனத்தை ஈர்க்கும் வகையில் வாகனம் மிகவும் அழகாக தெரிய வேண்டும் என உரிமையாளர்கள் நினைப்பதுதான் இதற்கான முதல் காரணம். வாகனத்தின் செயல்திறனை அதிகரிக்க வேண்டும் என்பதற்காகவும் கூட ஒரு சிலர் மாடிஃபிகேஷன்களை செய்து வருகின்றனர்.

இப்படி விதிமுறைகளை மீறி வாகனங்களை மாடிஃபிகேஷன் செய்பவர்களை எல்லாம் எச்சரிக்கும் விதமாக அதிரடி உத்தரவு ஒன்றை நீதிமன்றம் தற்போது பிறப்பித்துள்ளது. சட்டத்திற்கு புறம்பாக தனது மஹிந்திரா தார் எஸ்யூவி காரில் மாடிஃபிகேஷன்களை செய்திருந்த உரிமையாளர் ஒருவருக்கு, ஜம்மு காஷ்மீர் நீதிமன்றம் தற்போது 6 மாத சிறை தண்டனையை விதித்து உத்தரவிட்டுள்ளது. அடில் ஃபரூக் பட் என்பவர்தான் மாடிஃபிகேஷனுக்காக தற்போது தண்டனைக்கு ஆளாகியுள்ளார்.

அவர் தனது மஹிந்திரா தார் எஸ்யூவி காரில் செய்திருந்த மாடிஃபிகேஷன்கள் மோட்டார் வாகன சட்டம் 1988-ன் பிரிவு 52-ன்படி, விதிமுறைகளை மீறியது ஆகும். மாடிஃபிகேஷன்கள் செய்யப்பட்டது பழைய தலைமுறை மஹிந்திரா தார் எஸ்யூவி கார் என்பது குறிப்பிடத்தக்கது. பெரிய டயர்கள் மற்றும் சைரன் உள்ளிட்டவற்றின் மூலமாக இந்த கார் மாடிஃபிகேஷன் செய்யப்பட்டிருந்தது. இந்த மாடிஃபிகேஷன்களை எல்லாம் அகற்ற வேண்டும் என அதிகாரிகளுக்கு நீதிமன்றம் தற்போது உத்தரவிட்டுள்ளது.

அதாவது ஆர்சி எனப்படும் பதிவு சான்றிதழில் (RC - Registration Certificate) குறிப்பிட்டுள்ளபடி பழைய நிலைக்கு இந்த மஹிந்திரா தார் எஸ்யூவி காரை அதிகாரிகள் கொண்டு வர வேண்டும். இதற்கிடையே வாகன உரிமையாளர்கள் மாடிஃபிகேஷன் விதிமுறை மீறல்களில் ஈடுபடுவதற்கு 2 முக்கியமான காரணங்களை நீதிமன்றம் தெரிவித்துள்ளது. விழிப்புணர்வு இல்லாதது முதல் காரணமாக கூறப்பட்டுள்ளது. அதிகாரிகள் கடுமையான நடவடிக்கைகளை எடுக்காமல் இருப்பது 2வது காரணமாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனவே விதிமுறைகளை மீறி மாடிஃபிகேஷன் செய்ய கூடாது என்ற விழிப்புணர்வை வாகன உரிமையாளர்கள் மத்தியில் அதிகாரிகள் ஏற்படுத்த வேண்டும் என நீதிமன்றம் தெரிவித்துள்ளது. அத்துடன் வாகனங்களை மாடிஃபிகேஷன் செய்பவர்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் எனவும் காவல் துறை அதிகாரிகளுக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. எனவே இனி வரும் நாட்களில் மாடிஃபிகேஷன் செய்யப்பட்ட வாகனங்களுக்கு எதிரான வேட்டையை அதிகாரிகள் நடத்தலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

நாடு முழுக்க அனைத்து மாநிலங்களிலும் இந்த வேட்டை நடைபெறுவதற்கான வாய்ப்புகள் உள்ளன. ஏற்கனவே அவ்வப்போது காவல் துறை அதிகாரிகளும் மற்றும் போக்குவரத்து துறை அதிகாரிகளும் மாடிஃபிகேஷன் செய்யப்பட்ட வாகனங்களுக்கு எதிராக நடவடிக்கைகளை எடுத்து கொண்டுதான் உள்ளனர். இந்த நடவடிக்கை வரும் நாட்களில் தீவிரப்படுத்தப்படலாம். எனவே உங்கள் வாகனங்களில் மாடிஃபிகேஷன்களை செய்திருந்தால், உடனடியாக அதனை அகற்றி கொள்வது நன்மை பயக்கும்.

Most Read Articles
மேலும்... #ஆஃப் பீட் #off beat
English summary
Mahindra thar suv owner gets 6 months imprisonment for illegal modifications
Story first published: Monday, November 21, 2022, 18:32 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X