பள்ளத்தில் கவிழ்ந்த தமிழக அரசு பஸ்! கட்டி இழுத்த மஹிந்திரா தார் கார்! கடைசில் நடந்தது தான் ட்விஸ்ட்!
மழையில் சாலையில் இருந்து வழுக்கி அருகில் உள்ள பள்ளத்தில் கவிழ்ந்த அரசு பஸ் ஒன்றை மஹிந்திரா தார் கார் ஒன்று கட்டி இழுக்க முயன்ற சம்பவம் சமீபத்தில் ஒட்டன்சத்திரம் பகுதியில் நடந்துள்ளது. இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாக பரவி வருகிறது. இது குறித்த விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்.
தற்போது தமிழகம் முழுவதும் ஆங்காங்கே வெப்ப சலனம் காரணமாக மழை பெய்து வருகிறது. இதனால் சாலையில் செல்லும் வாகன ஓட்டிகள் நீண்ட நாட்களுக்குப் பிறகு மழையை சந்தித்து வருவதால் ஆங்காங்கே விபத்துகளையும் சந்தித்து வருகின்றனர். சில நாட்களாக இந்த பிரச்சனை தமிழக முழுவதும் பல்வேறு இடங்களில் இருந்து வருகிறது.

இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் யூடியூப்பில்
Monk's Ecstacy என்ற பெயரில் சேனல் நடத்தி வரும் ஒருவர் சாலையில் பயணம் செய்து கொண்டிருந்தபோது விபத்தில் சிக்கிய அரசு பஸ் ஒன்றை தனது கார் மூலம் கட்டி இழுக்க முயற்சி செய்த சம்பவத்தில் ஈடுபட்டுள்ளார். இந்த சம்பவம் முழுவதும் அவர் வீடியோவாக எடுத்து தனது யூடியூப் சேனலில் வெளியிட்டுள்ளார்.
இந்த வீடியோ படி இவர் கோவைக்கு சென்று விட்டு தனது மஹிந்திரா தார் காரில் சொந்த ஊருக்கு திரும்பிக் கொண்டிருந்த போது கார் ஒட்டன்சத்திரம் பகுதிக்கு அருகே வந்து கொண்டிருந்தது. அப்பொழுது சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. இவர் எதற்காக இந்த நெரிசல் ஏற்பட்டுள்ளது என முன்னே சென்று பார்த்துள்ளார்.

அப்பொழுது அந்த சாலை வழியாக சென்ற அரசு பஸ் ஒன்று மழையால் சாலையில் ஏற்பட்ட வழுக்கல் காரணமாக சாலையிலிருந்து தவறி அருகே உள்ள பள்ளத்தில் கவிழ்ந்து நின்றது. பஸ்ஸில் உள்ள பயணிகள் எல்லாம் பஸ்ஸில் இருந்து கீழே இறங்கி மழையில் நின்று கொண்டிருந்தார்கள். இதை பார்த்ததும் இவர்களுக்கு உதவி செய்ய நினைத்தார்.
உடனடியாக அவர் பஸ் மற்றும் கண்டக்டரிடம் பேசி தன்னிடம் வாகனத்தை கட்டி இழுப்பதற்கான பொருள் இருப்பதைக் கூறி தனது மஹிந்திரா தார் கார் மூலம் இந்த பஸ்சை கட்டி இழுக்க முயற்சி செய்தார். பொதுவாக பஸ் என்பது சுமார் 10,000 கிலோவிற்கும் அதிகமான எடை கொண்டதாக இருக்கும். அதுவும் மழை நேரத்தில் சகதியில் சிக்கி இருக்கும் பஸ்சை மஹிந்திரா தார் காரில் கட்டி இழுப்பது என்பது சாதாரண காரியம் இல்லை.
இதை அவர் ஏற்கனவே உணர்ந்து இருந்தாலும் , ஒரு முயற்சி செய்து பார்ப்போம் முடிந்தால் பஸ்ஸை கட்டி இழுத்து விடலாம் என நினைத்தார். அதற்கு அங்கிருந்த பொதுமக்களும் உதவி செய்தார்கள். இவர்கள் பல்வேறு விதமாக முயற்சி செய்தும் பள்ளத்தில் சிக்கிய பஸை இவர்களால் மீட்க முடியவில்லை. பள்ளத்தில் சிக்கிய பஸை மீட்க டிராக்டர் ஜேசிபி போன்ற அதிக இழுவை திறன் கொண்ட வாகனங்களால் மட்டுமே முடியும் என்ற சூழ்நிலை ஏற்பட்டுவிட்டது.
இதற்கு முக்கியமான காரணம் மழை நேரத்தில் பஸ் பள்ளத்தில் சிக்கும் போது அந்த மண்ணிற்குள் அதிகமாக பஸ்ஸின் வீல் பதிந்து விட்டதால் அதை இழுப்பது கடினமாக இருந்தது. மஹிந்திரா தார் காரை பொறுத்தவரை 4வீல் டிரைவ் கார் என்பதால் அதிக இழுவை திறன் இதற்கு இருக்கும். அதேபோல ஆஃப் ரோடு வேலைகளிலும் இது அதிகம் ஈடுபடும் என்பதால் இந்த முயற்சியை அவர் செய்தார்.
இருந்தாலும் கடைசி வரை முயற்சி செய்தும் இது பலனளிக்காததால் அவர் வேறு வழியில்லாமல் அங்கிருந்து கிளம்பி சென்று விட்டார். இவரது முயற்சிக்காக அங்கு இருந்த பொதுமக்கள் பஸ்ஸின் டிரைவர் மற்றும் கண்டக்டர் உள்ளிட்ட பலர் இவருக்கு பாராட்டுக்களை தெரிவித்தார்கள். இந்த காட்சிகள் எல்லாம் வீடியோவில் பதிவாகியுள்ளது. இந்த வீடியோவை யூடியூபில் அவர் பதிவிடும் போது மற்றவர்கள் பயன்படுத்தக்கூடாது என பதிவிட்டுள்ளதால் இந்த வீடியோவை இங்கு இணைக்க முடியவில்லை.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: சாலையில் செல்லும் போது சாலையில் பிரச்சனையில் இருக்கும் மற்ற வாகன ஓட்டிகளுக்கு சக வாகன ஓட்டியாக உதவி செய்வது என்பது நல்ல பண்பாக இருக்கிறது. இன்று பலரிடம் அந்த பண்பு இருப்பதில்லை. தனக்கு ஏதாவது பிரச்சனை ஏற்பட்டும் என்ற நோக்கத்தில் அவர்கள் உதவி செய்யாமல் சென்று விடுகிறார்கள். இப்படியாக இவர் செய்த உதவி நிச்சயம் பாராட்டத்தக்கது தான். இந்த வீடியோவை முழுமையாக காண இவரது பக்கத்தில் பாருங்கள்


Click it and Unblock the Notifications








