பல கோடி ரூபாய் சொத்து வைத்திருக்கும் மல்டி-மில்லியனர்! குழந்தை போல் மஹிந்திரா காருக்கு வெயிட் பண்றார்
மஹிந்திரா (Mahindra) நிறுவனத்தில் இருந்து புதிய எலக்ட்ரிக் கார்கள் (Electric Cars) ஆக சமீபத்தில் அறிமுகம் செய்யப்பட்ட பிஇ 6 மற்றும் எக்ஸ்இவி 9இ கார்களுக்கு அறிவிக்கப்பட்ட படி இன்று (பிப்ரவரி 14) காதலர் தினத்தில் முன்பதிவுகள் துவங்கப்பட்டுள்ளன. கடந்த ஆண்டு டிசம்பர் மாதத்தில் அறிமுகம் செய்யப்பட்ட இந்த எலக்ட்ரிக் கார்களுக்கான முன்பதிவுகள் எப்போது துவங்கப்படுமோ என நிறைய பேர் ஆவலாக காத்துக் கொண்டிருந்ததால், புக்கிங் துவங்கிய உடன் பல பெரும் புள்ளிகள் கூட முதல் நாளிலேயே ஆர்வத்துடன் காரை முன்பதிவு செய்துள்ளனர்.
இசைபுயல் ஏஆர் ரகுமான் மஹிந்திரா எக்ஸ்இவி 9இ எலக்ட்ரிக் காரை புக் செய்துள்ளதாக சமீபத்தில்தான் நமது செய்தித்தளத்தில் கூட பார்த்திருந்தோம். அந்த வரிசையில், பிரபல இணைய வழி பணப்பரிவர்த்தனை செயலியான பேடிஎம் (Paytm)-இன் நிறுவனர் விஜய் சேகர் சர்மா (Vijay Shekhar Sharma)-உம் எக்ஸ்இவி 9இ எலக்ட்ரிக் காரை புக் செய்துள்ளார்.

பேடிஎம் பிராண்ட் ஆனது ஒன்77 கம்யூனிகேஷன் (One77 Communication) என்கிற நிறுவனத்தின் கீழ் இயங்குகிறது. இந்த ஒன்77 கம்யூனிகேஷன் நிறுவனத்தை நிறுவியவர் தான் விஜய் சேகர் சர்மா ஆவார். மல்டி-மில்லியனராக இருப்பினும், குழந்தை போல் ஆர்வமாக முதல் நாளிலேயே மஹிந்திரா எக்ஸ்இவி 9இ எலக்ட்ரிக் காரை வாங்கியிருப்பது சற்று ஆச்சிரியத்தை ஏற்படுத்துகிறது.
இந்த காரை புக் செய்திருப்பதை விஜய் சேகர் சர்மா தனது எக்ஸ் பக்கத்தில் ஸ்க்ரீன்ஷாட் (Screenshot) படங்கள் உடன் வெளியிட்டுள்ளார். மேலும், இவ்வாறான ஒரு எலக்ட்ரிக் காரை உருவாக்கியதற்காக ஆனந்த் மஹிந்திராவையும் மென்ஷன் செய்து தொழிலதிபர் விஜய் சேகர் சர்மா பாராட்டி உள்ளார்.

ஸ்க்ரீன்ஷாட் படங்களின் மூலம் பார்க்கும்போது, பேடிஎம் நிறுவனர் தேர்வு செய்திருப்பது எக்ஸ்இவி 9இ எலக்ட்ரிக் காரின் பேக் த்ரீ வேரியண்ட்டை ஆகும். இந்த வேரியண்ட்டை 79kWh திறன் கொண்ட பேட்டரி உடன் தேர்வு செய்துள்ளார். 11.2 கிலோவாட்ஸ் சார்ஜர் உடன் இந்த எலக்ட்ரிக் காரை 'அடர் காடு' என்கிற அடர் பச்சை நிறத்தில் விஜய் சேகர் சர்மா வாங்க உள்ளார்.
மேலும், காரை புக் செய்வதற்கான டோக்கன் தொகையான ரூ.21,000மும் இவரது ஸ்க்ரீன்ஷாட் படத்தில் குறிப்பிடப்பட்டு உள்ளதை காணலாம். மஹிந்திரா எக்ஸ்இவி 9இ எலக்ட்ரிக் காரில் 79kWh பேட்டரி உடன் அதிகப்பட்சமாக 656கிமீ வரையிலான ரேஞ்சை பெறலாம் என மஹிந்திரா தெரிவித்துள்ளது. அதாவது, காரின் பேட்டரியை முழுவதுமாக சார்ஜ் நிரப்பிக் கொண்டு அதிகப்பட்சமாக 656கிமீ தொலைவிற்கு பயணிக்கலாம்.

விஜய் சேகர் சர்மா ஓர் கார் பிரியர் ஆவார். இந்தியாவில் டெஸ்லா மாடல் 3 (Tesla Model 3) எலக்ட்ரிக் காரின் முன்பதிவுகள் துவங்கப்பட்ட போது கூட அந்த காரை முதலாவதாக புக் செய்தவர்களுள் இவரும் ஒருவராவார். ஆனால், அதன்பின் இந்தியாவில் தனது கார்களை விற்பனை செய்யும் திட்டத்தை டெஸ்லா ரத்து செய்துவிட்டது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: பேடிஎம் போன்ற இந்தியா முழுவதும் வரவேற்பை பெற்ற நிறுவனத்தின் நிறுவனர் கூட முதல் ஆளாக, புக்கிங் எப்போது துவங்கும் என எதிர்பார்த்து புக் செய்திருப்பதில் இருந்து மார்க்கெட்டில் மஹிந்திராவின் புதிய எலக்ட்ரிக் எஸ்யூவி கார்கள் எந்த அளவிற்கு தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளன என்பதை அறியலாம்.


Click it and Unblock the Notifications









