சகல பாதுகாப்பு அம்சங்கள் இருந்தாலும் டிராக்டர் முன்னாடி பஸ்பமான மஹிந்திரா எக்ஸ்யூவி கார்..!!

Written By:

இந்திய நெடுஞ்சாலைகளில் விவசாய டிராக்டர்கள் பல விபத்துக்களில் சிக்கிக்கொள்வது அவ்வப்போது நடந்து வருகின்றன.

நெடுஞ்சாலை ஒன்றில் சமீபத்தில் நடைபெற்ற விபத்தில், டிராக்டர் ஒன்று மஹிந்திரா எக்ஸ்யூவி காரை ஓரு கைப்பார்த்துள்ளது.

மஹிந்திரா எக்ஸ்யூவி காரை பதம் பார்த்த விவசாய டிராக்டர்..!!

நெடுஞ்சாலை ஒன்றில் நடைபெற்ற இந்த விபத்தில் டிராக்டருக்கு எந்த சேதமும் ஏற்படவில்லை. ஆனால் டிராக்டருடன் மோதிய மஹிந்திரா எக்ஸ்யூவி காரின் முன்பக்கம் முற்றிலுமாக சிதைந்தது.

மஹிந்திரா எக்ஸ்யூவி காரை பதம் பார்த்த விவசாய டிராக்டர்..!!

கர்நாடகாவின் சிக்பெல்லாபூர் பகுதியில் காலை 6 மணியளவில் நெடுஞ்சாலையில் டிராக்டர் இடது பக்க லேனில் வந்துக்கொண்டு இருந்தது.

அப்போது ஓட்டுநர் டிராக்டரை வலதுபக்க லேனிற்கு திருப்ப முயன்றபோது, அதே வழியில் வந்த மஹிந்திரா எக்ஸ்யூவி டிராக்டரின் பக்கவாட்டில் பெரிய சத்தத்துடன் மோதியது.

மஹிந்திரா எக்ஸ்யூவி காரை பதம் பார்த்த விவசாய டிராக்டர்..!!

டிராக்டருடம் கார் மோதிய போது, அதே கணநேரத்தில் மஹிந்திரா எக்ஸ்யூவி காரின் பிரேக்கை ஓட்டுநரால் செயல்படுத்த முடியாமல் போனது.

ஒருவேளை காரின் பிரேக்கை ஓட்டுநர் சரியான நேரத்தில் பயன்படுத்தி இருந்தால், இந்த பெரும் விபத்து நிகழாமல் தடுத்திருக்கலாம்.

மஹிந்திரா எக்ஸ்யூவி காரை பதம் பார்த்த விவசாய டிராக்டர்..!!

டிராக்டரின் பக்கவாட்டில் மோதிய போது மஹிந்திரா எக்ஸ்யூவியின் ஏர்பேகுகள் சட்டென விரிவடைந்து, காரில் இருந்த பயணிகள் உயிரை காப்பாற்றியது.

சிறு காயங்களுடன் பயணிகள் தப்பித்தனர், ஆனால் காரின் பான்னட், பம்பர் மற்றும் கிரம்பிள் சோன் என மஹிந்திரா எக்ஸ்யூவி-யின் முன்பகுதி முற்றிலும் சேதமடைந்தது.

மஹிந்திரா எக்ஸ்யூவி காரை பதம் பார்த்த விவசாய டிராக்டர்..!!

டிராக்டரின் பின்பக்க டயரின் கார் மோதியதால், டிராக்டருக்கு எந்த பாதிப்பும் ஏற்படவில்லை. டிராக்டர் பின்பகுதி முற்றிலும் உலோகம் மற்றும் ரப்பரால் ஆனது. அதனால் தான் கார் அதன் மீது மோதிய வேகத்தில் பெரிய சேதம் ஏற்பட்டுள்ளது.

இதுதவிர டிராக்ட்டரை ஓட்டிசென்ற டிரைவர் குடிபோதையில் இருந்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

மஹிந்திரா எக்ஸ்யூவி காரை பதம் பார்த்த விவசாய டிராக்டர்..!!

டிராக்டர்கள் மிகவும் மெதுவாக செல்லக்கூடிய வாகனம். மேலும் இன்டிக்கேட்டர்கள், பிரேக்கிங் லைட்டுகள் போன்றவை பெரும்பாலான டிராக்டரில் இருப்பது கிடையாது.

மஹிந்திரா எக்ஸ்யூவி காரை பதம் பார்த்த விவசாய டிராக்டர்..!!

குறிப்பாக வெளிச்சத்தை பிரதிபலிக்கும் ஸ்டிக்கர்களை கூட பல உரிமையாளர்கள் டிராக்டர்களில் முறையாக பயன்படுத்துவதும் கிடையாது.

மஹிந்திரா எக்ஸ்யூவி காரை பதம் பார்த்த விவசாய டிராக்டர்..!!

நிலைமை இப்படி இருக்க, அவை நெடுஞ்சாலைகளில் மெதுவாக பயணிக்கும் போது வேகமாக செல்லும் வாகனங்களுக்கு டிராக்டர்கள் பெரிய இடையூறாக அமைந்து விடுகின்றன.

மஹிந்திரா எக்ஸ்யூவி காரை பதம் பார்த்த விவசாய டிராக்டர்..!!

நெடுஞ்சாலைகளில் செல்லும் டிராக்டர்கள், வேறு எதாவது வாகனத்தை அல்லது பெரிய டிப்பரை கட்டி இழுத்து செல்வது தான் வாடிக்கையாக உள்ளது.

மஹிந்திரா எக்ஸ்யூவி காரை பதம் பார்த்த விவசாய டிராக்டர்..!!

இந்த நிலையில் சாதரணமாக மணிக்கு 30 கி.மீ வேகத்தில் செல்லும் டிராக்டர்கள் நெடுஞ்சாலைகளில் வேகமான லேன்களுக்கு மாறும்போது, எஸ்யூவி உள்ளிட்ட பல கார் மற்றும் பைக் ஓட்டுநர்களுக்கு பெரிய தலைவலியாக அமைந்து விடுகின்றன.

மஹிந்திரா எக்ஸ்யூவி காரை பதம் பார்த்த விவசாய டிராக்டர்..!!

நெடுஞ்சாலைகளில் வேகமான வாகனங்களில் வருபவர்கள், விபத்தை நெருங்கும் போதே டிராக்டர் முன்னே சென்று கொண்டு இருப்பது அவர்களுக்கு தெரிகிறது.

இதனாலேயே நெடுஞ்சாலைகளில் டிராக்டருடன் பல்வேறு வாகனங்கள் விபத்தில் சிக்கிக்கொள்வது அதிகரித்து வருகிறது.

மஹிந்திரா எக்ஸ்யூவி காரை பதம் பார்த்த விவசாய டிராக்டர்..!!

இந்தியாவில் நெடுஞ்சாலைகளில் செல்லும் டிராக்டர்கள் பெரும்பாலும் தவறான பாதையில் செல்வது தொடர்ந்து நடக்கிறது. இதுபோன்ற தவறுகளும் விபத்துகளுக்கு காரணமாக அமைந்து விடுகின்றன.

மஹிந்திரா எக்ஸ்யூவி காரை பதம் பார்த்த விவசாய டிராக்டர்..!!

இரவு நேரங்களில் ஊரக பகுதிகளை நெருங்கி வாகனத்தில் செல்பவர்கள், குறுகிய நெடுஞ்சாலை பயணங்களை தவிர்க்கவும்.

மஹிந்திரா எக்ஸ்யூவி காரை பதம் பார்த்த விவசாய டிராக்டர்..!!

மேலும் டிராக்டர்கள் முன் செல்வது தெரிந்தால், அதை முந்தி செல்லும் வரை மெதுவாக வாகனங்களை ஓட்டி செல்லவும்.

இதைவிட முக்கியமானது எப்போதும் வேக கட்டுபாட்டை நெடுஞ்சாலை வாகன ஓட்டிகள் இரவில் கட்டாயம் பின்பற்ற வேண்டும்.

மேலும்... #ஆஃப் பீட் #off beat
English summary
Read in Tamil: Mahindra XUV 500 Collides With Escorts Farmtac Tractor in Highway. Click for Details...

Latest Photos

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark