கண்டெய்னர் லாரி மேல விழுந்தும் உள்ள இருந்தவங்களுக்கு ஒன்னும் ஆகலயா... அந்த நிறுவனம் தயாரிச்ச காரா இது!

இந்திய வாடிக்கையாளர்கள் தற்போதெல்லாம் கார்களின் பாதுகாப்பிற்கு அதிக முக்கியத்துவம் வழங்கி வருகின்றனர். எனவே கார் உற்பத்தி நிறுவனங்கள் எல்லாம் பாதுகாப்பு வசதிகளை வாரி வழங்க தொடங்கியுள்ளன. குறிப்பாக இந்தியாவை சேர்ந்த மஹிந்திரா (Mahindra) மற்றும் டாடா (Tata) ஆகிய நிறுவனங்கள் கார்களின் பாதுகாப்பு விஷயத்தில் தீவிர கவனம் செலுத்த தொடங்கியுள்ளன.

மஹிந்திரா நிறுவனத்தை பொறுத்தவரையில், அதன் பல்வேறு கார்கள் குளோபல் என்சிஏபி (Global NCAP) மோதல் சோதனைகளில் முழுமையாக 5 ஸ்டார் பாதுகாப்பு ரேட்டிங் (Safety Rating) வாங்கி அசத்தியுள்ளன. இதில், மஹிந்திரா எக்ஸ்யூவி 700 (Mahindra XUV 700) கார் ஒன்றாகும்.

Mahindra XUV 700-Container Truck Accident

பெரியவர்களுக்கான பாதுகாப்பில் 17-க்கு 16.03 புள்ளிகளை மஹிந்திரா எக்ஸ்யூவி 700 கார் பெற்றுள்ளது. அதே நேரத்தில் குழந்தைகளுக்கான பாதுகாப்பில் 49-க்கு 41.66 புள்ளிகளை மஹிந்திரா எக்ஸ்யூவி 700 கார் ஸ்கோர் செய்துள்ளது. இதன் மூலம் இந்தியாவில் கிடைக்கும் பாதுகாப்பான கார்களில் ஒன்றாக மஹிந்திரா எக்ஸ்யூவி 700 திகழ்கிறது.

இந்த சூழலில் மஹிந்திரா எக்ஸ்யூவி 700 கார் எவ்வளவு பாதுகாப்பானது? என்பது மீண்டும் ஒரு முறை தற்போது நிரூபிக்கப்பட்டுள்ளது. குஜராத் மாநிலம் சூரத் பகுதியில் சமீபத்தில் கண்டெய்னர் லாரி ஒன்று சென்று கொண்டிருந்தது. அப்போது கண்டெய்னர் லாரியில் திடீரென பழுது ஏற்பட்டதாக தெரிகிறது.

Mahindra XUV 700-Truck Accident

இதன் காரணமாக கண்டெய்னர் லாரி ஓரமாக நிறுத்தப்பட்டிருந்தது. அப்போது அவ்வழியாக மஹிந்திரா எக்ஸ்யூவி 700 கார் ஒன்று வந்தது. அந்த நேரத்தில் கண்டெய்னர் லாரி எதிர்பாராத விதமாக சரிந்து, மஹிந்திரா எக்ஸ்யூவி 700 காரின் மீது விழுந்துள்ளது. இதன் காரணமாக மஹிந்திரா எக்ஸ்யூவி 700 கார் அப்பளம் போல் நொறுங்கியுள்ளது.

இருப்பினும் மஹிந்திரா எக்ஸ்யூவி 700 காருக்கு உள்ளே இருந்த பயணிகள் அனைவரும் உயிர் பிழைத்து விட்டனர். இந்த கோர விபத்து நடைபெற்றபோது காருக்கு உள்ளே எத்தனை பயணிகள் இருந்தனர்? என்பது உறுதியாக தெரியவில்லை. எனினும் உயிரிழப்புகள் எதுவும் நிகழவில்லை என தகவல்கள் தெரிவிக்கின்றன.

இது மஹிந்திரா எக்ஸ்யூவி 700 கார் எவ்வளவு பாதுகாப்பானது? என்பதை நமக்கு மீண்டும் ஒரு முறை நிரூபித்துள்ளது. மஹிந்திரா எக்ஸ்யூவி 700 கார் கொடூரமான சாலை விபத்துக்களில் இருந்து பயணிகளின் உயிரை காப்பாற்றுவது இது முதல் முறையல்ல. கடந்த காலங்களிலும் பல முறை மஹிந்திரா எக்ஸ்யூவி 700 கார் இதனை செய்துள்ளது.

மஹிந்திரா எக்ஸ்யூவி 700 காரில், அடாஸ் (ADAS - Advanced Driver Assistance System) உள்பட பல்வேறு பாதுகாப்பு வசதிகள் வழங்கப்படுகின்றன என்பது இங்கே குறிப்பிடத்தக்க விஷயம் ஆகும். இந்திய வாடிக்கையாளர்கள் மஹிந்திரா எக்ஸ்யூவி 700 காரை நேசிப்பதற்கு, பாதுகாப்பு மிக முக்கியமான காரணங்களில் ஒன்றாக உள்ளது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: நமக்கு கிடைத்துள்ள தகவல்களின் அடிப்படையில் பார்த்தால், இந்த விபத்திற்கு யாரை காரணமாக கூறுவது? என்பதே குழப்பமாக உள்ளது. ஆனால் கனரக வாகனங்களின் அருகில் பயணம் செய்யும்போது எதற்கும் முன்னெச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்பதை மட்டும் இந்த விபத்து நமக்கு மிகவும் தெளிவாக உணர்த்தி விட்டது.

Article Published On: Monday, August 28, 2023, 23:56 [IST]
English summary
Mahindra xuv 700 container truck accident passengers safe video
மேலும்... #ஆஃப் பீட் #off beat
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+