மஹிந்திரா வாகனம் என்றாலே தனி திறமை இருக்கும்போல!! எளிதாக ஓடும் ஆற்றை கடந்த எக்ஸ்யூவி300...!

இந்தியாவில் விற்பனைக்கு கிடைக்கும் காம்பெக்ட் எஸ்யூவி கார்களுள் ஒன்று மஹிந்திரா எக்ஸ்யூவி300. ஆனால் போட்டி மாடல்களை காட்டிலும் இதன் விற்பனை சற்று குறைவு என்பது உண்மையே.

மஹிந்திரா வாகனம் என்றாலே தனி திறமை இருக்கும்போல!! எளிதாக ஓடும் ஆற்றை கடந்த எக்ஸ்யூவி300...!

இருப்பினும் மஹிந்திராவின் தயாரிப்புகள் என்றாலே அவற்றின் செயல்படுதிறனில் மிகுந்த நம்பிக்கை இருக்கும். குறிப்பாக மஹிந்திரா கார்களில் ஆஃப்-ரோடு திறன்களை நிச்சயம் எதிர்பார்க்கலாம். அதற்கு ஒரு சான்றாகவே, இங்கு சிலர் அவர்களது மஹிந்திரா எக்ஸ்யூவி300 காரில் முட்டியளவு தண்ணீர் உள்ள ஆற்றை கடந்துள்ளனர்.

மஹிந்திரா வாகனம் என்றாலே தனி திறமை இருக்கும்போல!! எளிதாக ஓடும் ஆற்றை கடந்த எக்ஸ்யூவி300...!

ஆற்றில் அலைகள் சற்று பெரியதாக வருகின்றன. இருப்பினும் தைரியமாக காரை ஆற்றுக்குள் இறக்கியது மட்டுமில்லாமல் வழிக்காட்ட ஒருவர் காருக்கூடவே நடந்து வருவதை ஆல் இன் ஒன் எண்டர்டெயின்மெண்ட் என்கிற யுடியுப் சேனலில் பதிவிடப்பட்டுள்ள கீழ் உள்ள வீடியோவில் பார்க்கலாம்.

Image Courtesy: All in One Entertainment

முன்சக்கர ட்ரைவ் காராக இருப்பினும் இத்தகைய சூழலை இந்த மஹிந்திரா கார் அருமையாக கையாண்டுள்ளது. எந்த இடத்திலும் ட்ராக்‌ஷன் இல்லை, எந்த இடத்திலும் வாகனம் நின்று போகவில்லை. இருப்பினும் இவ்வாறான சாகசங்களை இத்தகைய காரில் அடிக்கடி செய்யக்கூடாது.

மஹிந்திரா வாகனம் என்றாலே தனி திறமை இருக்கும்போல!! எளிதாக ஓடும் ஆற்றை கடந்த எக்ஸ்யூவி300...!

ஏனெனில் ஆஃப்-ரோட்டிற்கு பிரத்யேகமாக உருவாக்கப்பட்ட கார், எக்ஸ்யூவி300 கிடையாது. அதன் இயந்திர பாகங்கள் சேதமடைய வாய்ப்புள்ளது. தண்ணீரில் படுவதால் காருக்கு அடியில் கொடுக்கப்படும் வயரிங் பாகங்கள் கோளாறு அடையும்.

மஹிந்திரா வாகனம் என்றாலே தனி திறமை இருக்கும்போல!! எளிதாக ஓடும் ஆற்றை கடந்த எக்ஸ்யூவி300...!

மேலும் இது என்ஜினில் நெருப்பை உண்டாக்குவதற்கும் வழிவகுத்து விடலாம். இல்லையென்றால் தண்ணீரினால் என்ஜின் பெரிய அளவில் பாதிக்கப்பட வாய்ப்புண்டு. இதில் எது நடந்ததாலும் பெரிய தொகையை கொடுத்து சரி செய்ய வேண்டியதாகிவிடும்.

மஹிந்திரா வாகனம் என்றாலே தனி திறமை இருக்கும்போல!! எளிதாக ஓடும் ஆற்றை கடந்த எக்ஸ்யூவி300...!

அதிலும் குறிப்பாக இந்த விஷயத்தில் என்ஜின் பழுதானால், மொத்த என்ஜின் அமைப்பையும் கழற்றி புதியதாக பொருத்த வேண்டும் என மெக்கானிக் கூறுவார். இதனால் இவ்வாறான ஆஃப்-ரோடு பயணங்களை மேற்கொள்ள வேண்டுமென்றால், சந்தையில் விற்பனையில் உள்ள 4x4 சிஸ்டத்தை கொண்ட ஆஃப்-ரோடு வாகனங்களை வாங்கலாம்.

மஹிந்திரா வாகனம் என்றாலே தனி திறமை இருக்கும்போல!! எளிதாக ஓடும் ஆற்றை கடந்த எக்ஸ்யூவி300...!

இவற்றில் என்ஜினி ஆற்றல் அனைத்து நான்கு சக்கரங்களுக்கும் செல்லும். இத்தகைய வாகனங்களில் இதுபோன்ற ஆற்றை கடக்கும்போது வாகனம் நின்று போகுவதற்கோ, அல்லது சறுக்கல் அடைவதற்கோ வாய்ப்புகள் மிக குறைவு.

மஹிந்திரா வாகனம் என்றாலே தனி திறமை இருக்கும்போல!! எளிதாக ஓடும் ஆற்றை கடந்த எக்ஸ்யூவி300...!

4x4 எஸ்யூவிகளில் குறைவான ரேஞ்சில் கியர்பாக்ஸ் வழங்கப்படும். இதன் மூலம் அதிக டார்க் திறனை பெறலாம். அதுமட்டுமின்றி பழுதுகளும் அடிக்கடி ஏற்படாது. இருப்பினும் மக்கள் எக்ஸ்யூவி300 போன்ற அன்றாட பயன்பாட்டு வாகனத்தில் இவ்வாறான சாகசங்களை செய்யவே ஆசைப்படுகின்றனர்.

மஹிந்திரா வாகனம் என்றாலே தனி திறமை இருக்கும்போல!! எளிதாக ஓடும் ஆற்றை கடந்த எக்ஸ்யூவி300...!

சமீபத்தில் கூட இந்த மஹிந்திரா எக்ஸ்யூவி300 போன்று காம்பெக்ட் எஸ்யூவி மாடல்களான கியா சொனெட் மற்றும் ஃபோர்டு ஈக்கோஸ்போர்ட்டில் சிலர் இவ்வாறான நீர் நிலைகளை கடந்ததை பார்த்திருந்தோம். மஹிந்திரா எக்ஸ்யூவி300 காரின் ஆரம்ப விலை தற்சமயம் ரூ.8.30 லட்சமாக உள்ளது.

Most Read Articles

மேலும்... #ஆஃப் பீட் #off beat
English summary
Watch a Mahindra XUV300 cross a river like a boss. Read all details in Tamil.
Story first published: Saturday, May 29, 2021, 9:30 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X