நம்மில் நிறைய பேருக்கு இதெல்லாம் இன்னும் கனவாகவே இருக்கு... மொத்த குடும்பத்தையும் ஆச்சிரியப்படுத்திய இளைஞர்!!

புதியதாக கார் வாங்க வேண்டும் என்பது நம்மில் நிறைய பேருக்கு கனவாக இருக்கும். இதனை நிஜமாக்குபவர்கள் சிலர் மட்டுமே ஆகும். அதிலிலும் இளம் வயதிலேயே சொந்தமாக சம்பாதித்து கார் வாங்குபவர்கள் மிக மிக குறைவு என்றுதான் சொல்ல வேண்டும். அந்த அரிதான நபர்களுள் ஒருவரை பற்றித்தான் இந்த தொகுப்பில் பார்க்க உள்ளோம். இந்த தகவலை வெளியிட்டு இருப்பவர் மஹிந்திரா & மஹிந்திரா நிறுவனத்தின் தலைவர் ஆனந்த் மஹிந்திரா ஆவார். இதுகுறித்த கூடுதல் விபரங்களை இனி இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

தொழிலதிபர்கள் என்றாலே பிசியாக இருப்பர். இருப்பினும், சில தொழிலதிபர்கள் அவ்வளவு வேலைகளுக்கு நடுவிலும் சமூக வலைத்தளங்களில் ஆக்டீவ்வாக இருப்பர். அத்தகைய தொழிலதிபர்களுள் ஒருவர் தான் ஆனந்த் மஹிந்திரா ஆவார். குறிப்பாக, டெஸ்லா சிஇஓ எலான் மஸ்க்கை போன்று எக்ஸ் தள பக்கத்தை பயன்படுத்துவதை மிகவும் விரும்பக்கூடியவர் ஆனந்த் மஹிந்திரா ஆவார்.

mahindra xuv700 delivery emotional scenes

ஆனந்த் மஹிந்திராவின் எக்ஸ் பக்கத்தில் அவ்வப்போது புது, புது பதிவுகளை காண முடியும். ஆட்டோமொபைல் சார்ந்த விஷயங்களை வீடியோக்களாகவும், படங்களாகவும் தொடர்ந்து ஆனந்த் மஹிந்திரா வெளியிட்டு வருகிறார். அந்த வகையில், தற்போது ஒரு வீடியோவை ஆனந்த் மஹிந்திரா பகிர்ந்துக் கொண்டுள்ளார். இந்த வீடியோவில், இளைஞர் ஒருவர் பிராண்ட்-நியூ மஹிந்திரா எக்ஸ்யூவி700 காரை வாங்கும் காட்சிகள் இடம்பெற்றுள்ளன.

இதற்கு அந்த இளைஞரின் தந்தை கண்ணீர் மல்க சந்தோஷம் அடைவதை வீடியோவில் காண முடிகிறது. இந்த வீடியோவை எக்ஸ் தளத்தில் பதிவிட்டவர் வேறொருவர் ஆவார். அதனை ஆனந்த் மஹிந்திரா ரீ-ட்விட் செய்துள்ளார். ரீ-ட்விட் உடன் இந்த வீடியோவிற்கு ஆனந்த் மஹிந்திரா, "நாங்கள் கார் தயாரிக்கும் தொழிலில் மட்டுமல்ல, கனவுகளை நிஜமாக்கும் தொழிலிலும் இருக்கிறோம் என்பதை உணர்கிறோம். இதுவே எங்கள் குழுவை இன்னும் கடினமாக உழைக்க தூண்டுகிறது" என குறிப்பிட்டுள்ளார்.

இது இந்தியாவில் எடுக்கப்பட்ட வீடியோ தான். மஹிந்திரா கார் டீலர்ஷிப் ஷோரூம் ஒன்றில் இந்த நிகழ்வுகள் நடந்துள்ளன. வாடிக்கையாளர் புக் செய்த காரை டெலிவிரி பெறும் வழக்கமான வீடியோ தான் இது என்றாலும், இளைஞரின் தந்தையின் கண்ணீர் இந்த வீடியோவை பிரபலப்படுத்தி ஆனந்த் மஹிந்திரா வரையில் கொண்டுவந்துள்ளது. ஷோரூமில் மூடி வைக்கப்பட்டிருந்த இந்த எக்ஸ்யூவி700 கார் கஸ்டமரின் குடும்பத்தின் முன்பு திறக்கப்பட்ட உடன் அவர்களது உற்சாகத்திற்கு எல்லை இல்லை.

குறிப்பாக, இளைஞரின் தந்தை கண்களில் கண்ணீர் ததும்ப மெல்லிய சிரிப்புடன் வீடியோவில் காட்சி தருவதை பார்க்க முடிகிறது. கண்ணீரை வெளிப்படுத்தும் அளவிற்கு மஹிந்திரா எக்ஸ்யூவி700 ஆனது அளவில் பிரம்மாண்டமான கார் ஆகும். இந்த மஹிந்திரா காரின் விலையும் சற்று அதிகமே. தற்போதைக்கு, மஹிந்திராவில் இருந்து விற்பனை செய்யப்படும் விலையுயர்ந்த கார் எக்ஸ்யூவி700 ஆகும்.

mahindra xuv700 delivery emotional scenes

இந்திய மார்க்கெட்டில் 2021ஆம் ஆண்டில் அறிமுகம் செய்யப்பட்ட மாடர்ன் எஸ்யூவி காரான எக்ஸ்யூவி700 விரைவாகவே பலத்தரப்பட்ட வாடிக்கையாளர்களை கவர்ந்துவிட்டது. இதற்கு முக்கிய காரணம், லெவல்-2 அடாஸ் (ADAS) வசதிகள் உடன் அறிமுகம் செய்யப்பட்ட இந்தியாவின் முதல் எஸ்யூவி கார்களுள் ஒன்று மஹிந்திரா எக்ஸ்யூவி700 ஆகும். அத்துடன், வெண்டிலேட்டட் இருக்கைகள் மற்றும் ஆட்டோ-டிம்மிங் IRVM உள்ளிட்ட வசதிகளையும் எக்ஸ்யூவி700 பெறுகிறது.

இந்த மஹிந்திரா எஸ்யூவி கார் 2.0 லிட்டர் எம்ஸ்டாலியன் டர்போசார்ஜ்டு பெட்ரோல் என்ஜின் மற்றும் 2.2 லிட்டர் எம்ஹாவ்க் டர்போசார்ஜ்டு டீசல் என்ஜின் ஆப்ஷன்களில் விற்பனை செய்யப்படுகிறது. இந்த இரு என்ஜின் ஆப்ஷன்கள் உடனும் மேனுவல் மற்றும் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் ஆப்ஷன்கள் வழங்கப்படுகின்றன. எக்ஸ்யூவி700 காரின் எக்ஸ்-ஷோரூம் விலைகள் ரூ.13.99 லட்சம் - ரூ.26.04 லட்சம் வரையில் உள்ளன.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: இளம் வயதில் இவ்வளவு பெரிய காருக்கு சொந்தக்காரர் ஆகுவது எல்லாம் வேற லெவல். இதை காணும் எந்தவொரு தந்தைக்கும் கண்களில் நீர் வந்துவிடும். மற்றப்படி, இந்த வீடியோவில் காட்சித்தரும் எக்ஸ்யூவி700 கார் வாடிக்கையாளர் மற்றும் அவரது தந்தை குறித்த விபரங்கள் கிடைக்க பெறவில்லை.

More from DriveSpark

Article Published On: Friday, October 4, 2024, 22:59 [IST]
English summary
Mahindra xuv700 car took delivery by son dad gets emotion check all details here
மேலும்... #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+