பக்கத்துல நிற்பது மஹிந்திரா காரா! குழந்தை மாதிரி தெரியுது.. வெளிநாட்டுல இருந்து கொண்டு வரப்பட்ட ராட்சத கார்!
இந்தியாவில் விற்பனைக்குக் கிடைக்கும் பிரமாண்ட தோற்றம் கொண்ட கார் மாடல்களில் மஹிந்திரா நிறுவனத்தின் எக்ஸ்யூவி 700 கார் (Mahindra XUV700) மாடலும் ஒன்றாகும். இந்த கார் மாடலையே தன்னுடைய மாபெரும் பிரமாண்ட உருவத்தின் வாயிலாக குழந்தையை போல தோற்றுவித்திருக்கின்றது மற்றுமொரு கார் மாடல். இதுகுறித்த இணையத்தில் வைரலாகிக் கொண்டிருக்கும் புகைப்படம் பற்றிய தகவலையே இந்த பதிவில் பார்க்க போகின்றோம். வாங்க விரிவான பதிவிற்குள் போகலாம்.
சுவாரஷ்யங்களுக்கு பெயர்போனது இணையம். இதில் பொழுதைப் போக்கலாம் என உட்கார்ந்தால் ஒரு நாள் போதாது என தோன்றிவிடும். ஏன் அயுசு முழுக்க உட்கார்ந்த இடத்திலேயே பொழுதைப்போக்கும் அளவிற்கு கன்டென்டுகள் இணையத்தில் ஏராளமாகக் குவிந்துக் காணப்படுகின்றன. மேலும், அள்ள அள்ள வற்றாமல் சுரக்கும் ஊற்றைபோல தோண்ட தோண்ட சுவாரஷ்யங்களுக்கு குறைச்சலின்றி இணையம் காட்சியளிக்கின்றது.

இத்தகைய இணையத்திலேயே கார் காதலர்களை ஆச்சரியத்தில் மூழ்க வைக்கின்ற வகையில் ஓர் புகைப்படம் வைரலாகிக் கொண்டிருக்கின்றது. மஹிந்திரா எக்ஸ்யூவி 700 காரையே குழந்தையைப் போல தோற்றுவிக்கும் அளவிற்கு மிகவும் பிரமாண்டமான உருவம் கொண்ட கார் ஒன்று அதன் அருகில் நிற்கும் படமே அது ஆகும்.
இந்தியாவில் விற்பனைக்குக் கிடைக்கும் மிகப் பெரிய தோற்றம் கார் மாடல்களில் எக்ஸ்யூவி 700-ம் ஒன்றாகும். இந்த காரையே குழந்தையை போல தோற்றுவித்த அந்த கார், எந்த நிறுவனத்தின் தயாரிப்பு, அதன் பெயர் மற்றும் சிறப்புகள் என்ன என்பது பற்றிய சந்தேகமே பலருக்கு எழும்பி இருக்கின்றது.

இந்த ராட்சத தோற்றம் கொண்ட கார் மாடலானது ஃபோர்டு நிறுவனத்தின் எஃப்650 (Ford F650) மாடல் ஆகும். இது ஓர் பிக்-அப் டிரக் ஆகும். மினி லாரிக்கு இணையான தோற்றத்தில் இந்த கார் இருப்பதை நம்மால் இந்த படத்தின் வாயிலாகவே உணர முடிகின்றது.
இத்தகைய பிக்-அப் டிரக்கையே இந்தியர் ஒருவர் கார்னெட் வாயிலாக இந்தியா கொண்டு வந்திருக்கின்றார். கார்னெட் (Carnet), இது ஓர் டிக்கெட் போல் ஆகும். உலக நாடுகள் பலவற்றில் இந்த கார்னெட் செயல்பாட்டில் உள்ளது. இதன் வாயிலாக விற்பனையிலேயே இல்லாத ஓர் வாகனத்தைக் கொண்டு குறிப்பிட்ட ஓர் நாட்டிற்குள் எடுத்துச் செல்ல முடியும்.

காட்சிப்படுத்துதல் அல்லது அந்த வாகனத்தை முன் மாதிரி வாகனமாகக் கொண்டு உற்பத்தியை பெருக்கவே நிறுவனங்கள் இதுபோன்ற வெளிநாடுகளில் உள்ள வாகனங்களை கார்னெட் வாயிலாக கொண்டு வருகின்றன. இதுதவிர இன்னும் சில பயன்பாட்டிற்காக கார்னெட் வாயிலாக வாகனங்களை கொண்டு வந்துக் கொள்ள முடியும்.
ஆனால், இதன் வாயிலாக நிரந்தரமாக அந்த வாகனத்தை நாட்டில் வைத்துக் கொள்ள முடியாது என்பது குறிப்பிடத்தகுந்தது. இந்த ஃபோர்டு எஃப்650 பிக்-அப் டிரக் கார்னெட் வாயிலாக துபாயில் இருந்து கொண்டு வரப்பட்டது ஆகும். அமெரிக்கா உலக நாடுகள் சிலவற்றில் இந்த பிக்-அப் டிரக்கிற்கு மிக அமோகமான வரவேற்புக் கிடைத்துக் கொண்டிருக்கின்றது.
இந்த பிக்-அப் டிரக் கேரள மாநிலம் கொச்சிலேயே காட்சி தந்து இருக்கின்றது. இதன் நீளம் 4,965 மிமீ ஆகும். அகலம் 1,890 மிமீ மற்றும் உயரம் 1,755 மிமீ ஆகும். இத்தகைய பிரமாண்ட தோற்றத்தில் இந்தியாவில் மினி வேன்களையே பார்க்க முடியும்.
பிக்-அப் டிரக் அல்லது கார்களை இந்த அளவில் நாட்டில் பார்க்க முடியாது. இதனால்தான் இந்தியாவில் விற்பனைக்குக் கிடைக்கும் சில பிரமாண்ட தோற்றம் கொண்ட கார்களே இந்த ஃபோர்டு எஃப்650க்கு முன்னால் ஓர் குழந்தையைப் போல காட்சியளிக்கின்றன. மேலும், இந்தியாவில் இந்த வாகனம் காட்சி தருவது இதுவே முதல் முறையாகும்.
இதற்கு முன்னதாக ஃபோர்டு எஃப் 150 மற்றும் ரேப்டர் ஆகியவை மட்டுமே நாட்டில் காட்சி தந்திருக்கின்றன என்பது குறிப்பிடத்தகுந்தது. எக்ஸ்யூவி 700 இருக்கும் உயரத்தையே இந்த பிக்-அப் டிரக்கின் பான்னெட் கொண்டிருக்கின்றது. மேலும், இரண்டு வழக்கமான ஹேட்ச்பேக் கார்களையே மூழ்கடிக்கும் வகையில் அதன் நீளம் இருக்கின்றது. இத்தகைய ராட்சத தோற்றத்தால் இணையவாசிகளை வெகுவாக கவர தொடங்கி இருக்கின்றது ஃபோர்டு எஃப்650.
இந்த பிக்-அப் டிரக்கின் ராட்சத தோற்றத்திற்கு ஏற்பவே மிக பெரிய பெரிய எஞ்சின் தேர்வுகள் இதில் வழங்கப்படுகின்றன. அந்தவகையில், 7.3 லிட்டர் வி8 பெட்ரோல் எஞ்சின் மற்றும் 6.7 லிட்டர் வி8 டீசல் எஞ்சின் ஆகிய தேர்வுகளே எஃப்650-இல் வழங்கப்படுகின்றன. பெட்ரோல் மோட்டார் 350 பிஎஸ் மற்றும் 635 என்எம் டார்க்கையும், டீசல் மோட்டார் 330 பிஎஸ் 1015 என்எம் டார்க்கையும் வெளியேற்றும் திறன் கொண்டது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: எப்பா என்னங்க இவ்ளோ பெருசா இருக்கு இந்த கார் என்றே பலரை நினைக்கச் செய்திருக்கின்றது இந்த ஃபோர்டு எஃப்650. இதன் உயரத்தை வைத்து பார்க்கையில் இதில் ஏறி உட்கார தனி ஏணி வைத்திருக்க வேண்டும் என்றும் சிந்திக்க வைக்கின்றது. ஆனால், இது தேவைப்படாது.
ஏனெனில் இந்த வாகனத்தில் சுலபமாக ஏறி, இறங்குவதற்கான அமைப்புகள் வழங்கப்பட்டு இருக்கின்றன. மேலும், லக்சூரி அம்சங்களும் மிக மிக தாராளமாக இந்த பிக்-அப் டிரக்கில் வழங்கப்பட்டு இருக்கின்றது. ஆகையால், சொகுசான ரைடு மற்றும் பொருட்களை ஏற்றிச் செல்வது என இரண்டிற்குமான வாகனமாக இந்த ஃபோர்டு எஃப்650 பிக்-அப் டிரக்கைப் பயன்படுத்திக் கொள்ள முடியும்.


Click it and Unblock the Notifications









