பாலத்தில் மோதி அந்தரத்தில் தொங்கிய கார்! அதிவேகமாக வந்ததால் வினை!
இந்தியாவில் நடக்கும் சாலை விபத்துகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. இந்த சாலை விபத்துக்கான முக்கியமான காரணமாக இருப்பது அதிவேகமாக வாகனம் ஓட்டுவது என்பது சாலை விபத்துகளில் எடுக்கப்படும் தரவுகளில் இருந்து நமக்கு தெளிவாக தெரிகிறது. இப்படியாக சமீபத்தில் அதிவேகமாக பயணித்த கார் ஒன்று பாலத்தில் செல்லும்போது பாலத்தின் பக்க சுவர் மீது மோதியது. இந்த விபத்தில் காரில் பயணித்தவர்கள் உயிர் பிழைத்துள்ளார்கள். இது குறித்த விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்.
கடந்த 16ஆம் தேதி இரவு ஜார்க்கண்ட் மாநிலம் ஆட்சி பகுதியில் ரிங் ரோடு சாலையில் உள்ள ஒரு மேம்பாலத்தில் மஹிந்திரா நிறுவனத்தின் எஸ்யூவி 700 என்ற கார் விபத்தில் சிக்கியது. இது குறித்த வீடியோ வெளியாகி சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. இந்த வீடியோ வைரலாக பரவி வருவதற்கு முக்கியமான காரணம் இந்த விபத்தில் காரின் பின்பகுதியில் குறிப்பிட்ட பகுதி பாலத்தின் வெளியே தொங்கிக்கொண்டு இருக்கும் வகையில் அபாயகரமான சூழ்நிலையில் விபத்து ஏற்பட்டது. இந்த வீடியோவை பார்த்தவர்கள் இப்படி ஒரு விபத்து ஏற்பட்டது எப்படி என கேள்வி எழுப்பி வருகிறார்கள்.

சம்பவத்தை பார்த்தவர்கள் கூறும்போது சம்பவத்தின் போது மஹிந்திரா நிறுவனத்தின்கார் ஒன்று மேம்பாலத்தில் வேகமாக வந்து கொண்டிருந்தது. அப்பொழுது டிரைவர் திடீரென ஷார்ப்பாக வாகனத்தை திருப்பியதால் வாகனம் பாலத்தின் பக்கவாட்டு பகுதியில் இருந்த நடைபாதைக்காக போடப்பட்டிருந்த பாதையில் உள்ள தடுப்பு சுவரில் மோதி அதன் வேகம் அதிகமாக இருந்ததால் அதன் பின்பக்கம் தூக்கி பக்கவாட்டில் திரும்பி உள்ளது. அப்பொழுது பாலத்தின் தடுப்புச் சுவர் இருந்ததால் அதன் மீது மோதி அப்படியே கார் நின்றுது என தெரிவித்தனர்.
அதிவேகமாக காரை ஓட்டி வந்து அதை ஷார்பாக திருப்பி அதுதான் இந்த விபத்திற்கு முக்கியமான காரணம் என கூறப்படுகிறது. டிரைவர் ஷார்ப்பாக வாகனத்தை திருப்பினால் என்ற தெளிவான விபரங்கள் எங்கும் கிடைக்கவில்லை. குறிப்பிட்ட சம்பவத்தில் பெரிய அளவுக்கு காயமில்லாமல் காரில் பயணித்தவர்கள் உயிர் தப்பியதாக கூறப்படுகிறது. இந்த வீடியோவை நாம் பார்க்கும் போது காரின் பின்பகுதியில் குறிப்பிட்ட பகுதி பாலத்திற்கு வெளியே இருக்கும் அளவிற்கு பாலத்தின் தடுப்பு சுவர் மீது ஏறி உள்ளது.

இதைப்பார்க்கும்போது பலர் கார் பல்டி அடித்து இருக்கலாம் அல்லது எதிலாவது மோதி பறந்து இருக்கலாம் என தோன்றும். ஆனால் இந்த வீடியோவில் கடைசி பகுதியில் பார்க்கும் போது வாகனத்தின் முகப்பு பகுதி காட்டப்படுகிறது. அங்கு வாகனத்தின் முன்புறம் முழுமையாக செய்தமடைந்துள்ளது. இது நடந்து செல்லும் பாதைக்காக அமைக்கப்பட்ட தடுப்பு சுவரின் மீது மோதியதால் ஏற்பட்ட சேதமாகும். வாகனம் வேகமாக வந்ததில் தடுப்பு சுவர் மீது மோதியுள்ளது. தடுப்பு செய்வர் மீது மோதியதால் வாகனத்தின் பின்பக்கம் சற்று தூக்கி பக்கவாட்டிற்கு சென்றுள்ளது. அது கீழாக இறங்கும்போது அங்கு சுவர் இருந்ததால் அதை தட்டி நின்று இருக்கலாம் என நமமால் யூகிக்க முடிகிறது.
மஹிந்திரா நிறுவனத்தின் எஸ்யூவி 700 காரை பொருத்தவரை இரண்டு விதமான இன்ஜின் ஆப்ஷன்களில் வருகிறது. அதன்படி 2.2 லிட்டர் எம்ஹாக் டீசல் இன்ஜின் மற்றும் 2.0 லிட்டர் எம்ஸ்டாலின் பெட்ரோல் இன்ஜின் ஆப்ஷன் உள்ளன. இதில் விபத்தில் சிக்கியது 2.0 லிட்டர் எம் ஸ்டாலின் பெட்ரோல் இன்ஜின் தான். இது டீசல் இன்ஜினை விட எடை குறைவான இன்ஜின் திறன் கொண்ட வாகனம் ஆகும். இதனால் விபத்தில் சிக்கும் போது டீசல் இன்ஜின் வாகனத்தை விட இந்த பெட்ரோல் இன்ஜின் வாகனம் அதிக பாதிப்புக்கு உள்ளாக வாய்ப்புள்ளது.
இதன் காரணமாக வேகமாக வந்து வாகனம் தடுப்பு சுவரில் மோதியவுடன் அதன் இம்பேக்ட் காரின் பின்பகுதி வரை சென்று காரை சாலையில் இருந்து சற்று மேலே தூக்கி உள்ளது. பின்னர் காரின் எடை காரணமாக அது கீழே வரும் போது பக்கவாட்டு பகுதியில் சாய்ந்ததால் பக்கவாட்டுப்பகுதி சுவரில் மோதியுள்ளது. அதிர்ஷ்டவசமாக பெரிய அளவில் சாயவில்லை என்பதால் வாகனம் தப்பியுள்ளது. இல்லை என்றால் பாலத்தில் இருந்து வாகனம் கீழே விழுந்து இருக்க கூட வாய்ப்புள்ளது. இப்படி விழுந்திருந்தால் விபத்தில் வாகனத்திற்குள் இருந்த யாரும் உயிர் தப்பி இருக்க முடியாது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: நீங்கள் வாகனங்களில் பயணிக்கும் போது எப்பொழுதும் பாதுகாப்பான பயணத்தை மேற்கொள்ள வேண்டும் அதிக வேகத்தில் வாகனத்தில் பயணிக்க கூடாது. முக்கியமாக இரவு நேரங்களில் பலர் இது தெரியாமல் அதிக வேகமாக பயணிக்கிறார்கள். இதனால் ஏற்பட்ட விளைவு தான் இந்த விபத்து என்பதால் நீங்கள் வாகனங்களில் கவனமாக செல்லுங்கள். விபத்து ஏற்பட்டால் அது உங்கள் உயிரையே காவு வாங்க வாய்ப்புள்ளது.


Click it and Unblock the Notifications








