அவங்க தயாரிப்பா இப்படி! இதுல போறதுக்கு பதிலா கவர்மெண்ட் பஸ்ல போலாம்! பல லட்சம் குடுத்து வாங்கீட்டு கதறும் ஓனர்
மஹிந்திரா (Mahindra) நிறுவனம் கடந்த சில வருடங்களாக இந்திய சந்தையில் பல்வேறு புதிய தயாரிப்புகளை வரிசையாக களமிறக்கி வருகிறது. இதில், புதிய தலைமுறை மஹிந்திரா தார் (Mahindra Thar), மஹிந்திரா எக்ஸ்யூவி700 (Mahindra XUV700) மற்றும் மஹிந்திரா ஸ்கார்பியோ-என் (Mahindra Scorpio-N) போன்றவை குறிப்பிடத்தக்கவை ஆகும்.
இந்த 3 கார்களில், மஹிந்திரா எக்ஸ்யூவி700 பல்வேறு தொழில்நுட்ப வசதிகள் நிரம்பியதாக உள்ளது. ஆனால் இந்த கார் மீது சமூக வலை தளங்களில் பல்வேறு விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டு வருகின்றன. இந்த வரிசையில் மஹிந்திரா எக்ஸ்யூவி700 காரின் உரிமையாளர்கள் ஒருவர் தற்போது ஒரு குற்றச்சாட்டை எழுப்பியுள்ளார்.

மேற்கூரையில் இருந்து காரின் கேபினுக்கு உள்ளே தண்ணீர் கசிகிறது என்பதுதான் அவர் எழுப்பியுள்ள குற்றச்சாட்டு. மஹிந்திரா எக்ஸ்யூவி700 காரில் ஏற்பட்டுள்ள பிரச்னைகளை விளக்கும் வீடியோ (Video) தற்போது யூடியூப் (YouTube) தளத்தில் பதிவேற்றப்பட்டுள்ளது. பிரச்னை ஏற்பட்டிருப்பது மஹிந்திரா எக்ஸ்யூவி700 காரின் ஏஎக்ஸ்5 வேரியண்ட் (AX5 Variant) ஆகும்.
இந்த வீடியோவை பார்க்கும்போது ஆரம்பத்தில் எந்த பிரச்னையும் இருப்பதை போல் தெரியவில்லை. அனைத்தும் நன்றாகதான் சென்று கொண்டிருந்தது. ஆனால் இந்த வீடியோவில் தோன்றும் நபர், இந்த காரின் மேற்கூரையில் இருந்து கேபினுக்கு உள்ளே தண்ணீர் கசிவதாக கூறுகிறார். இது பனரோமிக் சன்ரூஃப் (Panoramic Sunroof) உடன் வரும் மாடல் ஆகும்.

கடந்த காலங்களில் சன்ரூஃப்பில் இருந்து தண்ணீர் கசிவதாக வாடிக்கையாளர்கள் பலர் புகார் எழுப்பியிருந்தனர். ஆனால் ஆச்சரியம் அளிக்கும் விதமாக சன்ரூஃப் வழியாக தண்ணீர் கேபினுக்கு உள்ளே கசியவில்லை என இந்த நபர் குறிப்பிடுகிறார். சன்க்ளாஸ் ஹோல்டர் பகுதியில் இருந்து தண்ணீர் கசிகிறது என்பதுதான் அவரது குற்றச்சாட்டு.
இந்த வீடியோவில் சன்க்ளாஸ் ஹோல்டர் திறக்கப்படவில்லை. இந்த வீடியோவில், கார் சென்று கொண்டிருக்கும்போது மழை பெய்வது நமக்கு மிகவும் தெளிவாக தெரிகிறது. அந்த சமயத்தில்தான் தண்ணீர் கசிவது உள்ளே இருந்த நபரால் உணரப்பட்டுள்ளது. இந்த பிரச்னையால் காரின் உரிமையாளர், கடுமையாக அதிருப்தியடைந்துள்ளார்.
இந்த பிரச்னையை சரி செய்வதற்கு தேவையான நடவடிக்கைகளை மஹிந்திரா நிறுவனம் உடனடியாக எடுக்க வேண்டும் எனவும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார். சன்க்ளாஸ் ஹோல்டர் பகுதியில் இருந்துதான் தண்ணீர் கசிகிறது என அவர் பிரத்யேகமாக குறிப்பிட்டுள்ளார். இது தொடர்பாக மஹிந்திரா நிறுவனத்திடம் இருந்து இன்னும் எந்தவிதமான அறிக்கையும் வரவில்லை. மஹிந்திரா நிறுவனம் அறிக்கை வெளியிட்டால், அதையும் உங்கள் கவனத்திற்கு கொண்டு வருவோம்.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: சமீப காலமாக மஹிந்திரா எக்ஸ்யூவி700 காரை பற்றி எதிர்மறையான செய்திகள் தொடர்ச்சியாக வெளியாகி கொண்டுள்ளன. கடந்த ஒரு சில நாட்களுக்கு முன்பு, மஹிந்திரா எக்ஸ்யூவி700 காரை டெலிவரி கொடுக்கும் நாளில், டீலர்ஷிப் ஊழியர்கள் எரிபொருளை மாற்றி நிரப்பியது தொடர்பான செய்தி வெளியானது இங்கே குறிப்பிடத்தக்கது.
அதாவது பெட்ரோல் (Petrol) இன்ஜின் மாடலில், டீலர்ஷிப் ஊழியர்கள் டீசலை (Diesel) நிரப்பி விட்டனர். பொதுவாக கார்களில் எரிபொருளை மாற்றி நிரப்பினால், நிச்சயமாக பிரச்னைகள் ஏற்படும். இதன்படி இந்த மஹிந்திரா எக்ஸ்யூவி700 காரிலும் பிரச்னை ஏற்பட்டு, அதன் உரிமையாளரை அதிருப்தியடைய வைத்து விட்டது.
மஹிந்திரா நிறுவனம் இதுபோன்ற பிரச்னைகளை சரி செய்வதற்கு தேவையான முயற்சிகளை உடனடியாக எடுக்க வேண்டும் என்பது எங்கள் கருத்து. ஏனெனில் மஹிந்திரா எக்ஸ்யூவி700 உண்மையிலேயே மிகவும் சிறப்பான ஒரு கார்தான். ஆனால் அதைப்பற்றி தொடர்ந்து எதிர்மறையான செய்திகள் வெளியாகி கொண்டிருந்தால், வாடிக்கையாளர்கள் மத்தியில் அதிருப்தி ஏற்பட்டு, விற்பனை பாதிக்கப்படலாம்.


Click it and Unblock the Notifications








