நடிகை மாதிரி இருக்காங்க! ஆனா உண்மையா இந்த தொழில்தான் பண்றாங்களா! அதான் 21 வயசுலயே 50 லட்ச ரூபா கார்ல போறாங்க!
இந்தியாவில் தற்போது எலெக்ட்ரிக் கார்களை (Electric Cars) வாங்குபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து கொண்டே வருகிறது. குறிப்பாக பிரபலங்கள் பலரும் கூட, எலெக்ட்ரிக் கார்களை அதிகளவில் வாங்குகின்றனர். இந்த வரிசையில் தற்போது ஒரு பிரபலம், எலெக்ட்ரிக் காரை வாங்கியுள்ளார். ஆனால் அவர் நடிகையோ அல்லது விளையாட்டு வீராங்கனையோ கிடையாது. நாங்கள் இங்கே பேசி கொண்டுள்ள பிரபலம், ஒரு மேக்கப் ஆர்டிஸ்ட் (Makeup Artist) ஆவார். ஆனால் அவர் சாதாரண மேக்அப் ஆர்டிஸ்ட் எல்லாம் கிடையாது. திரை உலகை சேர்ந்த நட்சத்திரங்களின் மேக்அப்பிற்கு கூட, அவர்தான் பொறுப்பு.
அவர் லட்சுமி கமல் (Lakshmi Kamal) ஆவார். 21 வயது மட்டுமே நிரம்பிய இந்த இளம்பெண், பார்ப்பதற்கு நடிகை போல் தெரியலாம். ஆனால் அவர் கேரளாவில் மிகவும் பிரபலமாக உள்ள மேக்அப் ஆர்டிஸ்ட்களில் ஒருவர் ஆவார். கேரளாவை சேர்ந்த நடிகைகள் பலரும், லட்சுமி கமலிடம்தான் மேக்அப் செய்து கொள்கின்றனர்.

இதன் காரணமாக மிக இளம் வயதிலேயே புகழின் உச்சியை தொட்டுள்ள லட்சுமி கமல், தற்போது பிஒய்டி சீல் (BYD Seal) எலெக்ட்ரிக் காரை வாங்கியுள்ளார். இது செடான் (Sedan) ரகத்தை சேர்ந்த எலெக்ட்ரிக் கார் ஆகும். இந்திய சந்தையில் கடந்த சில மாதங்களுக்கு முன்புதான், பிஒய்டி சீல் எலெக்ட்ரிக் கார் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டது.
எனவே தற்போதுதான் இந்த எலெக்ட்ரிக் கார், இந்திய வாடிக்கையாளர்கள் மத்தியில் கொஞ்சம் கொஞ்சமாக பிரபலமடைந்து வருகிறது. ஆனால் அதற்குள்ளாகவே லட்சுமி கமல், பிஒய்டி சீல் எலெக்ட்ரிக் காரை வாங்கி விட்டார். இதன் மூலம் கேரள மாநிலத்தில் பிஒய்டி சீல் எலெக்ட்ரிக் காரின் முதல் பெண் உரிமையாளர் என்ற பெருமையை அவர் பெற்றுள்ளார்.

பிஒய்டி சீல் எலெக்ட்ரிக் காரில் மொத்தம் 2 பேட்டரி ஆப்ஷன்கள் (Battery Options) வழங்கப்படுகின்றன. இதில், 61.44 kWh பேட்டரி ஒன்றாகும். இதன் டிரைவிங் ரேஞ்ச் (Driving Range) 510 கிலோ மீட்டர் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுதவிர 82.56 kWh பேட்டரி ஆப்ஷனும், இந்த எலெக்ட்ரிக் காரில் வழங்கப்படுகிறது.
இதில், ரியர் வீல் டிரைவ் மற்றும் ஆல் வீல் டிரைவ் என 2 ஆப்ஷன்கள் வழங்கப்பட்டுள்ளன. இதன் ரியர் வீல் டிரைவ் மாடலின் டிரைவிங் ரேஞ்ச் 650 கிலோ மீட்டர் எனவும், ஆல் வீல் டிரைவ் மாடலின் டிரைவிங் ரேஞ்ச் 580 கிலோ மீட்டர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் இந்த எலெக்ட்ரிக் காரில் பல்வேறு அதிநவீன வசதிகளும் (Features) வழங்கப்பட்டுள்ளன.
இதில், 15.6 இன்ச் டச்ஸ்க்ரீன் இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம், வயர்லெஸ் ஆப்பிள் கார்பிளே மற்றும் ஆண்ட்ராய்டு ஆட்டோ, 10.25 இன்ச் டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமெண்ட் க்ளஸ்ட்டர், 10 ஏர்பேக்குகள், 360 டிகிரி கேமரா மற்றும் அடாஸ் (ADAS - Advanced driver-assistance systems) தொழில்நுட்பம் போன்றவை எல்லாம் குறிப்பிடத்தக்கவை ஆகும்.
இந்திய சந்தையில் தற்போதைய நிலையில் பிஒய்டி சீல் எலெக்ட்ரிக் காரின் ஆரம்ப விலை 41 லட்ச ரூபாயாக உள்ளது. அதே நேரத்தில் இதன் டாப் வேரியண்ட்டின் விலை 53 லட்ச ரூபாயாக இருக்கிறது. இவை எக்ஸ்-ஷோரூம் விலை (Ex-showroom price) ஆகும்.
டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: இந்திய சந்தையில், வால்வோ எக்ஸ்சி40 ரீசார்ஜ் (Volvo XC40 Recharge), ஹூண்டாய் ஐயோனிக் 5 (Hyundai Ioniq 5) மற்றும் கியா இவி6 (Kia EV6) ஆகிய எலெக்ட்ரிக் கார்களுக்கு எல்லாம், பிஒய்டி சீல் எலெக்ட்ரிக் கார் மிகச்சிறந்த மாற்று ஆப்ஷனாக கருதப்படுகிறது.


Click it and Unblock the Notifications








