ஆடம்பரத்தை விரும்பாத மகளுக்கு தொழிலதிபரின் காஸ்ட்லீ கிஃப்ட்! யுஏஇ-இல் மலபார் கோல்டு நிர்வாகி கொடுத்த ஷாக்!!

மலபார் கோல்டு (Malabar Gold) இந்த பெயரிலான தங்க நகைக்கடையை பற்றி கேள்விப்படாதவர்களே இருக்க மாட்டீர்கள் என நினைக்கிறேன். பெயரை பார்த்தாலே தெரிந்திருக்கும் மலபார் கோல்டு ஆனது ஓர் கேரள நிறுவனம் என்பது. ஆனால், நாடு முழுவதும் இந்த நிறுவனத்தின் ஆபரணங்களுக்கு வரவேற்பு உள்ளது. இத்தகைய நிறுவனத்தின் முக்கிய அதிகார பொறுப்பில் இருக்கும் ஒருவர் தனது மகளுக்கு விலையுயர்ந்த ரோல்ஸ்-ராய்ஸ் (Rolls-Royce) காரை பரிசாக வழங்கியிருப்பது பெரிதும் கவனத்தை ஈர்த்துள்ளது. அப்படி எந்த ரோல்ஸ்-ராய்ஸ் கார் பரிசாக வழங்கப்பட்டுள்ளது என்பதை பற்றி தான் இந்த தொகுப்பில் பார்க்க போகிறோம்.

1993ஆம் ஆண்டில் கேரளாவின் கோழிக்கோட்டில் சிறு கடையாக துவங்கப்பட்ட மலபார் கோல்டு, இன்று தங்க ஆபரணங்களை சில்லறை வணிகமாக விற்பனை செய்வதில் உலகின் 6வது மிக பெரும் நிறுவனமாக இருக்கும் அளவிற்கு வளர்ந்துள்ளது. மலபார் குழுமத்தில் இருந்து தங்க ஆபரணங்கள் மட்டுமின்றி, வைர ஆபரணங்களும் விற்பனை செய்யப்படுகின்றன.

faisal malabar buys rolls-royce cullinan

இந்தியா முழுவதும் நெட்வொர்க்கை கொண்டுள்ள மலபார் கோல்டு & டைமண்ட்ஸ் நிறுவனத்துக்கு பல வெளிநாடுகளிலும் கிளைகள் உள்ளன. 1993ஆம் ஆண்டில் இந்த நிறுவனத்தை துவங்கியவர், எம்.பி.அகமது ஆவார். கேரளாவில் இவரை தெரியாதவர்கள் கூட சிலர் இருப்பார்கள்; ஆனால் ஃபைசல் மலபார் அவர்களை தெரியாதவர்களே இல்லை என்கிற அளவிற்கு ஃபைசல் மலபார் மலையாளிகள் மத்தியில் பிரபலமானவராக விளங்குகிறார்.

இதற்கு காரணம், சமூக வலைத்தளங்களில் ஃபைசல் மலபார் எப்போதும் மிகவும் ஆக்டீவ்வாக இருப்பது ஆகும். இந்த ஃபைசல் மலபார் வேறு யாருமில்லை... மலபார் கோல்டு & டைமண்ட்ஸ் நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் ஆவார். காஸ்மோஸ் ஸ்போர்ட்ஸ் வேர்ல்டு என்கிற நிறுவனத்தின் துணை தலைவராகவும் பொறுப்பு வகிக்கும் ஃபைசல் மலபார் ஐக்கிய அரபு அமீரகம் நாட்டில் முக்கியமான இந்திய தொழிலதிபர்களுள் ஒருவராக விளங்குகிறார்.

faisal malabar buys rolls-royce cullinan

இத்தகைய பெரும் தொழிலதிபர் தான் தற்போது தனது மகளுக்காக விலைமிக்க ரோல்ஸ்-ராய்ஸ் காரை வாங்கியுள்ளார். ரோல்ஸ்-ராய்ஸ் கார்கள் என்றாலே விலைமிக்கவை தான், அதில் என்ன விலைமிக்க ரோல்ஸ்-ராய்ஸ் கார் என்று சிலர் கேட்கலாம். ஃபைசல் மலபார் வாங்கியிருப்பது அந்த அளவிற்கு விலையுயர்ந்த ரோல்ஸ்-ராய்ஸ் கல்லீனன் (Cullinan) கார் ஆகும். இதன் ஆரம்ப விலையே சுமார் ரூ.10.50 கோடியாக தற்சமயம் உள்ளது.

இந்தியாவில் விற்பனை செய்யப்படும் மிகவும் விலையுயர்ந்த கார்களுள் ரோல்ஸ்-ராய்ஸ் கல்லீனனும் ஒன்றாகும். இருப்பினும், இந்தியாவின் பெரும் தொழிலதிபர் முகேஷ் அம்பானியிடம் 3க்கும் அதிகமான கல்லீனன் கார்கள் உள்ளன. சரி... ஃபைசல் மலபாரின் விஷயத்திற்கு வருவோம். தனது மகளுக்கு விலையுயர்ந்த ரோல்ஸ்-ராய்ஸ் காரை வாங்கி கொடுத்திருப்பதையும் வழக்கம்போல் தனது சமூக வலைத்தள பக்கங்களில் ஃபைசல் மலபார் போட்டோக்கள் உடன் தெரிவித்துள்ளார்.

இந்த ரோல்ஸ்-ராய்ஸ் காரை ஃபைசல் தனது மகளுக்கு சர்பிரைஸ் பரிசாக வழங்கியிருப்பது அவரது பதிவின் மூலம் தெரிகிறது. மேலும், தனது மகள் ஜாமியாவின் ஆச்சிரியமான குணாதிசியத்தை பற்றியும் தனது பதிவில் ஃபைசல் மலபார் குறிப்பிட்டுள்ளார். அதாவது, யுஏஇ-இல் மிக பெரும் தொழிலதிபராக விளங்கும் ஃபைசல் மலபார் தனது மகளிடம் 10 கோடி திர்ஹாம் பணத்தை கொடுத்தால் கூட அவர் அதை செலவு செய்யாமல் பத்திர வைத்திருக்கும் அளவிற்கு ஆடம்பரத்தின் மீது துளியும் ஆர்வமில்லாதவராக இருக்கிறார்.

இத்தகையவருக்கு வழங்கப்பட்டிருக்கும் ரோல்ஸ்-ராய்ஸ் கல்லீனன் காரை பற்றி சொல்ல வேண்டுமென்றால், புதிய கல்லீனன் ஃபேஸ்லிஃப்ட் காரை இந்தியாவில் கடந்த செப்டம்பர் மாதத்தில் ரோல்ஸ்-ராய்ஸ் அறிமுகம் செய்தது. இதன் எக்ஸ்-ஷோரூம் விலைகள் தற்சமயம் ரூ.10.50 கோடி மற்றும் ரூ.12.25 கோடியாக உள்ளது. ஆனால், யுஏஇ நாட்டில் ஃபைசல் மலபார் இந்த காரை தனது மகளுக்கு பரிசாக வழங்கியுள்ளார்.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: யுஏஇ நாட்டில் மற்ற கார்களை போன்று ரோல்ஸ்-ராய்ஸ் கார்களின் விலைகளும் சற்று குறைவாகவே இருக்கும். கல்லீனன் காரின் விலையும் அங்கு இந்திய ரூபாய் மதிப்பில் ரூ.6 கோடி ஆகும். இந்தியாவை காட்டிலும் பாதிக்கு பாதி விலை. இருப்பினும், மகளுக்கு பரிசாக இவ்வளவு விலை கொண்ட அல்ட்ரா லக்சரி காரை வழங்குவது எல்லாம் டூ மச்.

More from DriveSpark

Article Published On: Tuesday, December 10, 2024, 23:59 [IST]
English summary
Malabar gold director faisal buys rolls royce cullinan for his daughter check all details here
மேலும்... #uae
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+