வெள்ள வேட்டி கட்டிட்டு இருக்காருனு அசால்டா நினைச்சுடாதீங்க.. 27,000 கோடி ரூபாக்கு அதிபதி.. இவர யாருனு தெரிதா?

இந்தியாவில் விற்பனைக்குக் கிடைக்கும் மிக அதிக சொகுசு அம்சங்கள் நிறைந்த கார் மாடல்களில் லெக்சஸ் எல்எம் 350எச் (Lexus LM 350h)-ம் ஒன்றாகும். இது ஓர் எம்பிவி (MPV) ரக ஆடம்பர கார் மாடல் ஆகும். இந்த வாகனத்தையே கேரளாவைச் சேர்ந்த முன்னணி தொழிலதிபர்களில் ஒருவரான எம்பி அஹமத் வாங்கி இருக்கின்றார். அவர் வேறு யாரும் இல்லைங்க, மலபார் நிறுவனத்தின் சொந்தக்காரரே இவர்தான் என்பது குறிப்பிடத்தகுந்தது. தன்னுடைய 20 வயதில் சாதாரண டிரேடிங் தொழிலைத் தொடங்கிய இவர் தற்போது இந்தியாவின் மாபெரும் பணக்காரர்களில் ஒருவராக வளர்ந்திருக்கின்றார்.

இப்போது இவருடைய முக்கிய பிசினஸாக தங்க நகை வியாபாரம் உள்ளது. இவரின் தற்போதைய சொத்து மதிப்பு ரூ. 27 ஆயிரம் கோடிக்கும் என்பது கவனிக்கத்தகுந்தது. சிறிய தொழில் செய்யும் குடும்பத்தில் பிறந்து மலபார் குழுமம் எனும் மாபெரும் சம்ராஜ்யத்தை எம்பி அஹமத் உருவாக்கி இருக்கின்றார்.

Malabar group chairman buys lexus lm 350h luxury car

இந்த நபரே தற்போது தன்னுடைய சொகுசான பயணத்திற்காக லெக்சஸ் எல்எம் 350எச் ஆடம்பர காரை வாங்கி இருக்கின்றார். உல்லாச கப்பல் மாதிரியான ஓர் கார் மாடலே இந்த லெக்சஸ் எல்எம் 350எச் ஆகும். இதனால்தான் இந்திய பணக்காரர்களின் மனதுடன் சேர்த்து இந்திய திரை நட்சத்திரங்களின் பலரின் மனதையும் இந்த கார் மாடல் கவர்ந்து வருகின்றது.

ஆமாங்க உச்ச நட்சத்திரங்கள் பலர் இந்த கார் மாடலை பயன்படுத்தி வருகின்றனர். இதன் ஒரே ஒரு யூனிட்டின் விலை மட்டுமே ரூ. 2 கோடிக்கும் அதிகம் ஆகும். இந்திய சந்தையில் இந்த கார் மாடல் இரண்டு விதமான இருக்கைகள் ஆப்ஷனில் விற்பனைக்குக் கிடைக்கின்றது.

4 மற்றும் 7 ஆகிய இருக்கைகள் தேர்விலேயே இந்த கார் மாடல் விற்பனைக்குக் கிடைக்கின்றது. இதில் 4 இருக்கைகள் தேர்வு முழுக்க முழுக்க சொகுசான பயணத்தை விரும்பும் பணக்காரர்களையும் கவரும் நோக்கிலும், 7 இருக்கைகள் தேர்வு குடும்பத்துடன் சொகுசான டிராவலை மேற்கொள்ள விரும்புவோரைக் குறி வைத்தும் விற்பனைக்குக் கொண்டு வரப்பட்டு இருக்கின்றது.

நான்கு இருக்கைகள் ஆப்ஷனில் பின் பக்கம் தனிமை உணர்வை வழங்கும் வகையில் வடிவமைக்கப்பட்டு இருக்கும் என்பது கவனிக்கத்தகுந்தது. டிரைவர் மற்றும் பின் இருக்கை பயணிகளுக்கு இடையில் ஓர் தடுப்பு இருக்கும். அந்த தடுப்பை வேண்டாம் என்றால் கீழே இறக்கிக் கொள்ள முடியும். டிரைவருடன் உரையாட இது உதவியாக இருக்கும்.

இதேபோல், பயணித்தின்போது பொழுதுபோக்கையும் விதமாக பெரிய திரை இந்த காரில் வழங்கப்பட்டு இருக்கும். 48 அங்குலம் கொண்டதே அந்த திரை ஆகும். இதுதவிர, 23 ஸ்பீக்கர்கள் கொண்ட பிரீமியம் சவுண்டு சிஸ்டம், மடித்துக் கொள்ளும் வசதிக் கொண்ட டேபிள்கள், சூடான அனுபவத்தை வழங்கக் கூடிய ஆர்ம்ரெஸ்ட் ஆகிய அம்சங்களையும் இந்த காரில் லெக்சஸ் நிறுவனம் வழங்கி இருக்கின்றது.

இதுதவிர, வயர்லெஸ் செல்போன் சார்ஜர், குட்டி குளிர்சாதன பெட்டி, டிஜிட்டல் ரியர் வியூ மிர்ரர். ரோல்ஸ் ராய்ஸ் கார்களில் வழங்கப்படுவதைப் போன்ற குடையை தாங்கும் வசதி உள்ளிட்டவையும் லெக்சஸ் எல்எம் 350எச் காரில் வழங்கப்பட்டு இருக்கும் என்பது கவனிக்கத்தகுந்தது. இத்தகைய அதிக ஆடம்பர அம்சங்கள் நிறைந்த காரையே கேரளாவைச் சேர்ந்த தொழிலதிபர் எம்பி அஹமத் தற்போது வாங்கியிருக்கின்றார்.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: கடந்த சில தினங்களுக்கு முன்னரே இதே கார் மாடலை வி-குவார்டு நிறுவனத்தின் மூத்த தலைவரான மிதுன் கே சித்திலபள்ளி வாங்கியிருந்தார் என்பது குறிப்பிடத்தகுந்தது. இவரும் கேரளாவைச் சேர்ந்தவரே ஆவார். இந்த நிலையிலேயே தற்போது மலபார் நிறுவன உரிமையாளரும் லெக்சஸ் எல்எம் 350எச் காரை வாங்கி இருக்கின்றார். புதிதாக கட்சி தொடங்கி இருக்கும் நடிகர் விஜய்கூட இந்த காரை பயன்டுத்தி வருகின்றார்.

More from DriveSpark

Article Published On: Sunday, December 1, 2024, 5:00 [IST]
English summary
Malabar group chairman mp ahammad buys lexus lm 350h luxury mpv car more details
மேலும்... #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+