சின்ன பையன் கூட டேட்டிங் செய்த மூத்த நடிகையா இது! மூன்றரை கோடி ரூபா கார்ல வந்தாலும் நாய் மேல இவ்ளோ இரக்கமா!
இந்திய சந்தையில் ரேஞ்ச் ரோவர் (Range Rover) காருக்கு என தனி ரசிகர்கள் பட்டாளமே உள்ளது. குறிப்பாக திரையுலக நட்சத்திரங்கள் பலரும் ரேஞ்ச் ரோவர் கார்களை வைத்துள்ளனர். பாலிவுட் நடிகர்கள் ரன்பீர் கபூர் (Ranbir Kapoor) மற்றும் சல்மான் கான் (Salman Khan), நடிகை பூஜா ஹெக்டே (Pooja Hegde) என இந்த பட்டியல் நீண்டு கொண்டே செல்லும். இவர்கள் தவிர கிரிக்கெட் வீரர்களான ரோஹித் சர்மா (Rohit Sharma) மற்றும் கேஎல் ராகுல் (KL Rahul) ஆகியோரிடமும் ரேஞ்ச் ரோவர் கார் உள்ளது.
இந்த சூழலில் பிரபல நடிகை ஒருவர் ரேஞ்ச் ரோவர் காரில் வந்து இறங்கிய வைரல் வீடியோ (Viral Video) ஒன்று சமூக வலை தளங்களில் தற்போது வேகமாக பரவி வருகிறது. இந்த வைரல் வீடியோவில் நாம் பார்ப்பது பாலிவுட் நடிகையான மலாய்கா அரோரா (Malaika Arora) ஆவார்.

பாலிவுட் நடிகை என்பதை கடந்து, டான்சர், மாடல் மற்றும் விஜே என இவருக்கு பல்வேறு முகங்கள் உள்ளன. இவரது வீடியோ சமூக வலை தளங்களில் தற்போது வைரலாக பரவி கொண்டிருப்பதற்கு மற்றொரு காரணமும் உள்ளது. அது நாய் ஒன்றின் மீது மலாய்கா அரோரா காட்டிய பரிவு ஆகும்.
மலாய்கா அரோரா காரை விட்டு கீழே இறங்கிய சமயத்தில் நாய் ஒன்று, காரின் கதவுக்கு அருகே நின்று கொண்டிருந்தது. இதன் காரணமாக மலாய்கா அரோரா கார் கதவை சாற்றுவதற்கு தயங்கினார். கார் கதவை சாற்றும்போது, நாய்க்கு அடிபட்டு விடும் என்பதுதான் இதற்கு காரணம்.

பின்னர் ஒரு சில நொடிகள் சென்ற நிலையில், நாய் சற்று நகர்ந்த பின்தான் மலாய்கா அரோரா காரின் கதவை சாற்றினார். அதாவது நாய்க்கு அடிபடாது என்பதை உறுதி செய்த பிறகே அவர் காரின் கதவை சாற்றினார். அவரது இந்த நடத்தையை சமூக வலை தளங்களில் நெட்டிசன்கள் பலரும் பாராட்டி வருகின்றனர்.
நடிகை மலாய்கா அரோரா பயன்படுத்தியது, ரேஞ்ச் ரோவர் காரின் ஆட்டோபயோகிராபி (Autobiography) வேரியண்ட் போல் தெரிகிறது. இந்திய சந்தையில் தற்போதைய நிலையில் ரேஞ்ச் ரோவர் காரின் ஆட்டோபயோகிராபி வேரியண்ட்டின் எக்ஸ்-ஷோரூம் விலையே (Ex-showroom Price) 2.70 கோடி ரூபாயாக இருந்து வருகிறது.
இதன் ஆன்-ரோடு (On-Road Price) விலை சுமார் 3.40 கோடி ரூபாய் வரும். இந்த காரில் 3.0 லிட்டர் பெட்ரோல் இன்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இது மைல்டு-ஹைப்ரிட் தொழில்நுட்பத்துடன் கூடிய டர்போ பெட்ரோல் இன்ஜின் ஆகும். அதிகபட்சமாக 398 பிஎஸ் பவர் மற்றும் 550 என்எம் டார்க் திறனை உருவாக்க கூடிய வகையில் இந்த இன்ஜின் ட்யூனிங் செய்யப்பட்டுள்ளது.
டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: மலாய்கா அரோராவிற்கு தற்போது 51 வயதாகிறது. பிரபல பாலிவுட் நடிகரான அர்பாஸ் கான்தான் (Arbaaz Khan), மலாய்கா அரோராவின் முன்னாள் கணவர் ஆவார். இவர்கள் இருவரும் கடந்த 2017ம் ஆண்டு விவாகரத்து பெற்றனர். இதன் பின் மற்றொரு பாலிவுட் நடிகரான அர்ஜூன் கபூருடன் (Arjun Kapoor), மலாய்கா அரோரா 'டேட்டிங்' செய்ய தொடங்கினார்.
அர்ஜூன் கபூருக்கு தற்போது 39 வயது மட்டுமே ஆகிறது. ஆனால் இந்த உறவும் நீண்ட நாட்கள் நீடிக்கவில்லை. கடந்த 2024ம் ஆண்டு தீபாவளி பண்டிகை சமயத்தில், இருவரும் 'பிரேக் அப்' செய்து விட்டனர். இது மலாய்கா அரோராவின் தனிப்பட்ட விஷயம் என்றாலும் கூட, சமூக வலை தளங்களில் நெட்டிசன்கள் அவரை கடுமையான விமர்சித்தனர்.
ஆனால் நாய்க்கு அடிபட்டு விட கூடாது என்பதற்காக கார் கதவை சாற்றுவதில் அவர் செய்துள்ள ஒரு சிறிய விஷயம், சமூக வலை தளங்களில் தற்போது அவருக்கு பாராட்டுக்களை பெற்று தந்து கொண்டுள்ளது. இது அவரது வளர்ப்பு நாயா? அல்லது வேறு ஒருவருடையதா? என்பது உறுதியாக தெரியவில்லை.


Click it and Unblock the Notifications








