காரின் விலை எவ்வளவு என்றெல்லாம் பார்க்கல... பிரபல மலையாள நடிகரின் புதிய பிஎம்டபிள்யூ எக்ஸ்7 கார்!!
பிரபல மலையாள நடிகர் ஒருவர், தனது மனைவி உடன் சேர்ந்து இந்தியாவில் பிஎம்டபிள்யூவின் புத்தம் புதிய சொகுசு காரான எக்ஸ்7 எஸ்யூவியை டெலிவிரி எடுத்துள்ளார். யார் அந்த பிரபல நடிகர்? அவர் வாங்கியுள்ள பிஎம்டபிள்யூ காரில் அப்படி என்னென்ன சிறப்பம்சங்கள் உள்ளன? என்பது பற்றி முழுமையான விபரங்களை இனி தொடர்ந்து பார்க்கலாம்.
சினிமா நடிகர், நடிகைகள் வாங்கும் கார்களை எல்லாம் நீங்கள் பார்த்தீர்களேயானால், எல்லாமே சந்தையில் அறிமுகமான பிராண்ட் நியூ கார்களாகவே இருக்கும். பல மாதங்களுக்கு முன் உருவாக்கப்பட்ட லக்சரி கார்களை வாங்கும் சினிமா ஸ்டார்கள் என்று பார்த்தால், மிகவும் குறைவானவர்களே இருப்பர். அதேபோல், கோடிகளில் சம்பளம் வாங்கும் சினிமா நட்சத்திரங்கள் லக்சரி கார் அல்லாமல், ஓர் பட்ஜெட் விலை காரை வாங்குவதற்கு வாய்ப்பில்லை.

இந்தியாவில் சொகுசு கார்கள் விற்பனையில் மெர்சிடிஸ்-பென்ஸ் தான் கடந்த சில வருடங்களாக முன்னிலை வகித்து வருகிறது. இதற்கு அடுத்து 2வது இடத்தில் உள்ள பிஎம்டபிள்யூ-வுக்கும், மெர்சிடிஸ்-பென்ஸ் நிறுவனத்திற்கும் இடையே பெரிய வித்தியாசம் இருந்தாலும், பிஎம்டபிள்யூ சொகுசு கார்களை வாங்குவதற்கு என்றே தனி கூட்டம் இருக்கிறது. ஏனெனில் இந்த ஜெர்மன் கார் நிறுவனத்தின் தயாரிப்புகளும் உலகளவில் பிரபலமானவை என்பதை நான் சொல்ல வேண்டியது இருக்காது என நினைக்கிறேன்.
இப்படிப்பட்ட தற்போதைய சூழலில், பிரபல மலையாள நடிகரும், இயக்குனருமான அனூப் மேனன் பிராண்டின் புதிய பிஎம்டபிள்யூ எக்ஸ்7 காரை வாங்கியுள்ளார். தனது மனைவி ஷாமா அலெக்சாண்டர் உடன் கொச்சியில் உள்ள பிஎம்டபிள்யூ டீலர்ஷிப் ஷோரூமுக்குள் சென்ற அனூப் மேனன் புதிய பிஎம்டபிள்யூ கார் ஒன்றுடன் வெளியே வந்ததாக மலையாள செய்தித்தளங்கள் ஸ்டைலாக அவரை புகழ்ந்து எழுதி தள்ளியுள்ளன.
அதாவது, அனூப் மேனன் காரின் விலை எதையும் பார்க்கவில்லை எனவும், அவருக்கு பிடித்தது, வாங்கிவிட்டார் எனவும் அங்கிருந்துவரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. அனூப் மேனன் முதன்முதலாக ஃபியாட் கார் ஒன்றுக்கு உரிமையாளர் ஆனார். அதன்பின் ஹூண்டாய் ஆக்சண்ட், ஹோண்டா சிவிக், ஜாகுவார் எக்ஸ்.ஜே, ஆடி க்யூ7 கார்களை அனூப் மேனன் வாங்கினார். இவரிடம் 7 சீரிஸ் போன்ற சில பிஎம்டபிள்யூ கார்களும் உள்ளன.
பிஎம்டபிள்யூ எக்ஸ்7 காரில் 3.0 லிட்டர் பெட்ரோல் மற்றும் டீசல் என்ஜின் தேர்வுகள் வழங்கப்படுகின்றன. மலையாள நடிகர் அனூப் மேனன் வாங்கியிருப்பது எக்ஸ்7 எஸ்யூவி காரின் எக்ஸ் டிரைவ் 40ஐ எம் ஸ்போர்ட் கார் ஆகும். அதாவது அனூப் மேனனின் எக்ஸ்7 காரில் பெட்ரோல் என்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இந்த வேரியண்ட்டின் எக்ஸ்-ஷோரூம் விலை ரூ.1.22 கோடி ஆகும். அதுவே டீசல் என்ஜின் உடனான எக்ஸ்7 காரின் விலை ரூ.1.24 கோடி ஆகும்.

பெட்ரோல் என்ஜினின் மூலம் அதிகப்பட்சமாக 381 பிஎச்பி & 520 என்எம் டார்க் திறன் வரையிலான ஆற்றலையும், டீசல் என்ஜினின் மூலம் 340 பிஎச்பி & 700 என்எம் டார்க் திறன் வரையிலான ஆற்றலையும் பெற முடிகிறது. இந்த காரில் 0-வில் இருந்த் 100kmph வேகத்தை வெறும் 5.8 வினாடிகளில் எட்டிவிடலாம். இந்த காரின் எக்ஸ்-ஷோரூம் விலைகள் தற்சமயம் ரூ.1.22 கோடியில் இருந்து ரூ.1.24 கோடி வரையில் உள்ளன.
டிரைவ்ஸ்பார்க்கின் கருத்து
ஏற்கனவே கூறியதுபோல், நடிகர், நடிகைகள் சொகுசு கார்களை வாங்குவது சாதாரணமான ஒன்றே. இருப்பினும், அனூப் மேனன் போன்ற பல்வேறு திறமைகளை கொண்ட ஒரு கலைஞர் ஒரு காரை வாங்கும்போது, அது எத்தகைய கார் என்பதை அறிவதில் ஆர்வம் ஏற்படுகிறது. நம் ஆர்வத்திற்கு ஏற்ப, பிஎம்டபிள்யூவின் இந்தியாவிற்கான சமீபத்திய லக்சரி காரான எக்ஸ்7 மாடலை அனூப் மேனன் வாங்கி அசத்தியுள்ளார்.


Click it and Unblock the Notifications