2000ஆம் காலக்கட்டத்தில் சாக்லெட் பாயாக சுற்றி கொண்டிருந்த நடிகர்... போர்ஷே கார் வாங்க குடும்பத்துடன் ஷோரூமில்!
சாக்லெட் பாய் (Chocolate Boy) என்றதுமே முதலாவதாக நம் நினைவிற்கு வருவது, நடிகர் மாதவன் (Actor Madhavan)-ஐ தான். ஆனால், கேரள மக்களிடம் சாக்லெட் பாய் யார் என்று கேட்டால் அவர்கள் சொல்வது நடிகர் குஞ்சாக்கோ போபன் (Kunchacko Boban)-ஐ ஆகும். இத்தகைய நடிகரான இவர் விலையுயர்ந்த போர்ஷே (Porsche) கார் ஒன்றை வாங்கியுள்ளார். இந்தியா மட்டுமின்றி உலகளவில் தற்சமயம் பிரபலமான போர்ஷே கார் அதுவாகும். யார் இந்த நடிகர் குஞ்சாக்கோ போபன்? என்ன மாதிரியான போர்ஷே காரை அவர் வாங்கியுள்ளார்? என்கிற கேள்விகளுக்கு பதில்களை இனி இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
2000ஆம் காலக்கட்டத்தில் தமிழ் நடிகர் மாதவனை போன்று மலையாள சினிமா உலளவில் சாக்லெட் பாய் ஆக ரசிகர்களால் பார்க்கப்பட்டவர், நடிகர் குஞ்சாக்கோ போபன் ஆவார். ஏனெனில், அந்த சமயத்தில் அந்த அளவிற்கு நிறைய ரொமாண்டிக் திரைப்படங்களில் நடித்து 'சாக்கோசான்' (Chackochan) என ரசிகர்களால் செல்லப்பெயரில் அழைக்கப்பட்டார்.

ஆனால், இந்த இரு பெயர்களும் நம் தமிழ் மக்களுக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை. ஏனெனில், சாக்கோசான் தமிழ் திரைப்படங்கள் எதிலிலும் நடிக்கவில்லை. ஆனால், மலையாளத்தில் 100க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்த அனுபவமிக்க நடிகர். இருப்பினும், ஒரு கட்டத்திற்கு மேல் இவரது படங்கள் போதிய வெற்றி பெறாமல் போக, முழுவதுமாக பட தயாரிப்பில் இறங்கிவிட்டார்.
இதன் மூலமாக, மலையாள சினிமாவில் முக்கியமான தொழிலதிபர்களுள் ஒருவராக விளங்கும் குஞ்சாக்கோ போபன் புதியதாக வாங்கியிருப்பது, போர்ஷே கேயென் (Cayenne) என்கிற லக்சரியான எஸ்யூவி கார் ஆகும். மனைவி, மகன் என குடும்பத்துடன் ஷோரூமுக்கு சென்று பிராண்ட்-நியூ போர்ஷே கேயென் காரை நடிகர் சாக்கோசான் டெலிவிரி பெறும் படங்கள் இணையத்தில் வெளியாகி உள்ளன.

இந்தியாவில் கேயென் மற்றும் கேயென் கூபே என 2 விதமான கேயென் கார்கள் விற்பனை செய்யப்படுகின்றன. இவை இரண்டும் தோற்றத்தில் கிட்டத்தட்ட ஒரே மாதிரியாக இருந்தாலும், அலாய் சக்கரங்களின் டிசைன் என சில விஷயங்களில் வேறுப்படுகின்றன. இந்த இரண்டில் எந்த கேயென் காரை நடிகர் குஞ்சாக்கோ போபன் வாங்கியுள்ளார் என்பது தெரியவில்லை.
போர்ஷே கேயென் காரை பொறுத்தவரையில், பேஸ் மற்றும் ஜிடிஎஸ் என 2 விதமான வேரியண்ட்களில் விற்பனை செய்யப்படுகிறது. இவற்றின் எக்ஸ்-ஷோரூம் விலைகள் தற்சமயம் ரூ.1.43 கோடி மற்றும் ரூ.2 கோடியாக உள்ளன. மறுப்பக்கம், கேயென் கூபே காரும் பேஸ் மற்றும் ஜிடிஎஸ் கூபே என 2 விதமான வேரியண்ட்களில் விற்பனை செய்யப்படுகிறது. இவற்றின் எக்ஸ்-ஷோரூம் விலைகள் சற்று அதிகமாக ரூ.1.48 கோடி மற்றும் ரூ.2.01 கோடியாக உள்ளது.

போர்ஷே கேயென் காரில் 3.0 லிட்டர் வி6 பெட்ரோல் என்ஜின் மற்றும் 2.9 லிட்டர் டர்போசார்ஜ்டு வி6 என்ஜின் என 2 விதமான என்ஜின் ஆப்ஷன்கள் வழங்கப்படுகின்றன. விற்பனையில் இந்த போர்ஷே காருக்கு மஸேராட்டி லெவண்டே, மெர்சிடிஸ்-பென்ஸ் ஜி.எல்.எஸ், ரேஞ்ச் ரோவர் வேலர் மற்றும் பிஎம்டபிள்யூ எக்ஸ்7 உள்ளிட்ட கார்கள் போட்டியாக விளங்குகின்றன.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: கேரள மக்களுக்கு பொதுவாகவே போர்ஷே, மினி போன்ற பார்ப்பதற்கே ரக்டான தோற்றம் கொண்ட கார்களை பிடித்திருக்கிறது. போர்ஷே கேயென் காரின் விலையாக மேலே குறிப்பிடப்பட்டு இருப்பவை எக்ஸ்-ஷோரூம் விலைகள் ஆகும். காரின் ஆன்-ரோடு விலை இன்னும் சில லட்சங்கள் அதிகமாக வரும்.


Click it and Unblock the Notifications









