அந்த ஹிட் படத்தில் நடித்த நடிகர் தானே இது? ஆளே அடையாளம் தெரியல... எல்லாரும் வாங்க யோசிக்கும் பைக்கில்!!
சினிமா பிரபலங்கள் என்றாலே அவ்வப்போது புது, புது சொகுசு வாகனங்களை வாங்குவார்கள் என்பதை பலமுறை பார்த்துள்ளோம். ஆனால் இங்கு சினிமா திரைப்பட இயக்குனர் விசித்திரமான தோற்றம் கொண்ட கவாஸாகி (Kawasaki) பைக்கை வாங்க உள்ளார். இதற்காக ஷோரூமிற்கு சென்ற அவர், அங்கிருந்த பைக்கின் மீது அமர்ந்து எடுத்துக் கொண்ட படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன. யார் அந்த இயக்குனர் என்பதையும், அவர் வாங்கி உள்ள அந்த விசித்திரமான பைக்கை பற்றியும் இனி இந்த தொகுப்பில் விரிவாக பார்க்கலாம், வாங்க.
இந்தியாவில் கடந்த சில வருடங்களாக அட்வென்ச்சர் ரக பைக்குகளுக்கு தொடர்ந்து வரவேற்பு அதிகரித்து வருகிறது. இதற்கு முக்கிய காரணம், ஹீரோ மோட்டோகார்ப் ஆகும். ஏனெனில், ஹீரோ நிறுவனம் தான் குறைவான விலையில் எக்ஸ்பல்ஸ் 200 அட்வென்ச்சர் பைக்கை அறிமுகம் செய்தது. இந்தியாவின் விலை குறைவான அட்வென்ச்சர் பைக்காக இப்போதுவரையில் ஹீரோ எக்ஸ்பல்ஸ் 200 விளங்குகிறது.

ஆனால், எக்ஸ்பல்ஸ் 200 இந்த அளவிற்கு வெற்றி பெறும் என்று ஹீரோ நிறுவனம் கூட நினைத்து பார்த்திருக்குமா என்பது தெரியவில்லை. இதில் இருந்து இளம் தலைமுறையினரின் இரசனை மாறிவருவதை அறிந்த மற்ற நிறுவனங்களும் தொடர்ச்சியாக புது, புது அட்வென்ச்சர் பைக்குகளை குறைந்த விலையில் அறிமுகம் செய்ய முயற்சித்து வருகின்றன. இந்த வகையில், கவாஸாகி அறிமுகம் செய்ய உள்ள பைக், கே.எல்.எக்ஸ்230 எஸ் ஆகும்.
புதிய கவாஸாகி கே.எல்.எக்ஸ்230 எஸ் பைக் அடுத்த டிசம்பர் மாதத்தில் இந்திய மார்க்கெட்டில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட உள்ளது. ஆனால், அதற்கு முன்னதாகவே கடந்த சில வாரங்களாக இந்த புதிய கவாஸாகி பைக்கிற்கான முன்பதிவுகள் ஏற்றுக் கொள்ளப்பட்டு வருகின்றன. அதாவது, அடுத்த டிசம்பர் மாதத்தில் அறிமுகம் செய்யப்பட உள்ள பைக்கை இப்போதே முன்பதிவு செய்யலாம். இதற்கான டோக்கன் தொகையாக ரூ.5,000 நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இன்னும் புதிய கவாஸாகி கே.எல்.எக்ஸ்230 எஸ் பைக்கின் விலைகள் அறிவிக்கப்படவில்லை. ஆனால், அதற்குள்ளாகவே இந்தியாவில் நிறைய பேர் இந்த பைக்கை போட்டிப் போட்டு புக் செய்து வருகின்றனர். அந்த வரிசையில், மலையாள திரைப்பட இயக்குனரும், நடிகருமான சாஜித் யாஹியா (Sajid Yahiya) தனக்கான கே.எல்.எக்ஸ்230 எஸ் பைக்கை ஷோரூமுக்கு நேரில் சென்று முன்பதிவு செய்துள்ளார்.
அப்போது அங்கு காட்சிக்காக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கவாஸாகி கே.எல்.எக்ஸ்230 எஸ் பைக்கின் மீது அமர்ந்து எடுத்துக் கொண்ட புகைப்படங்களை சாஜித் யாஹியா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துக் கொண்டுள்ளார். இதுகுறித்த அவரது இன்ஸ்டா பதிவில், கே.எல்.எக்ஸ்230 எஸ் பைக்கை புக் செய்துள்ளதாகவும், இந்த அட்வென்ச்சர் பைக்கின் ஆர்.எஸ் வெர்சனை வாங்க உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

சாஜித் யாஹியாவை பற்றி சொல்ல வேண்டுமென்றால், இவர் 2016ஆம் ஆண்டில் இருந்துதான் திரைப்படங்களை இயக்கி வருகிறார். ஆனால், அதற்கு முன்பே 2011ஆம் ஆண்டில் இருந்து திரைப்படங்களில் நடித்து வருகிறார். குறிப்பாக, மலையாளம், தமிழ் என இரு மொழிகளிலும் ஹிட்டாகிய பெங்களூர் நாட்கள் திரைப்படத்தில் சாஜித் யாஹியாவை காண முடியும். கடைசியாக இவரது இயக்கத்தில் இந்த 2024ஆம் ஆண்டு ஜனவரி மாதத்தில் 'கல்ப்' என்கிற மலையாள திரைப்படம் திரைக்கு வந்தது.
மறுப்பக்கம், கவாஸாகி கே.எல்.எக்ஸ்230 எஸ் பைக்கை பற்றி பார்த்தால், இந்த பைக்கின் விலைகள் மட்டுமே இன்னும் அறிவிக்கப்படவில்லை. மற்றப்படி, பைக்கை பற்றிய அனைத்து விபரங்களும் ஏற்கனவே வெளியிடப்பட்டு விட்டன. ஹீரோ எக்ஸ்பல்ஸ் 200 பைக்கிற்கு போட்டியாக கொண்டுவரப்பட்டாலும், அந்த அளவிற்கு குறைவான விலையை இந்த புதிய கவாஸாகி பைக்கில் எதிர்பார்க்க முடியாது. எங்களுக்கு தெரிந்தவரையில், புதிய கே.எல்.எக்ஸ்230 பைக்கின் விலை ஏறக்குறைய ரூ.2.50 லட்சமாக நிர்ணயிக்கப்படலாம்.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இவ்வாறான பைக்குகளை கடந்த பல வருடங்களாக கவாஸாகி உற்பத்தி செய்து வருகிறது. இதனால், நன்கு அனுபவமிக்க நிறுவனத்தால் உருவாக்கப்பட்ட அட்வென்ச்சர் பைக்கை தான் மலையாள நடிகரும், இயக்குனருமான சாஜித் யாஹியா வாங்க உள்ளார். பைக்கின் டெலிவிரிகள் இந்த ஆண்டு முடிவதற்குள் துவங்கப்பட்டுவிடும் என எதிர்பார்க்கிறோம்.


Click it and Unblock the Notifications









