4 கோடி ரூபாய் காரில் மனைவியுடன் ஜாலியா போகும் நடிகர் யாரென்று தெரிகிறதா? எல்லாரது பார்வையும் கார் மீதுதான்!!
கேரள மாநில மக்கள் பொதுவாகவே ஆட்டோமொபைல் வாகனங்கள் மீது கூடுதல் ஆர்வமிக்கவர்களாக இருப்பர் என்பதை பல சம்பவங்களில் பார்த்திருக்கிறோம். இதனால், கேரள சினிமா நட்சத்திரங்களும் அவ்வப்போது புது, புது கார் & பைக்குகளை வாங்குவதை தொடர்கதையாக கொண்டிருக்கின்றனர். குறிப்பாக, நடிப்பு அரக்கன் என அழைக்கப்படும் ஃபஹத் ஃபாசில் (Fahadh Faasil) மீண்டும் ஒரு விலையுயர்ந்த பென்ஸ் வாகனத்தை வாங்கி உள்ளார். ஃபஹத் ஃபாசிலை பற்றி நம் எல்லாருக்கும் தெரியும், ஆனால் அவர் வாங்கியுள்ள பென்ஸ் வாகனத்தை பற்றி தெரியுமா? வாருங்கள் அதனை பற்றி தான் இந்த தொகுப்பில் பார்க்க போகிறோம்.
நடிகை நஸ்ரியாவை திருமணம் செய்த கொண்ட பிறகே நம் தமிழ் மக்கள் நிறைய பேருக்கு ஃபஹத் ஃபாசிலை தெரியும். அதற்கு முன்பு சில மலையாள படங்களில் நடித்திருப்பினும், நடிகை நஸ்ரியாவை திருமணம் செய்ததன் காரணமாகவே தென்னிந்திய அளவில் ஃபஹத் ஃபாசிலின் பெயர் தெரிய ஆரம்பித்தது. தலையில் கொஞ்சம் வழுக்கை மற்றும் தொப்பை உடன் இவர்தான் நஸ்ரியாவின் கணவரா என நிறைய பேர் கிண்டல் செய்ய ஆரம்பித்தனர்.

ஆனால், இப்போது நிலைமையே வேறு. நஸ்ரியாவை தெரியாத சிலருக்கு கூட ஃபஹத் ஃபாசிலை தெரிந்துள்ளது. அந்த அளவிற்கு, கமலஹாசன், ரஜினிகாந்த், சிவகார்த்திகேயன் என பல முன்னணி நடிகர்களுடன் பல்வேறு மொழி திரைப்படங்களில் நடித்துள்ளார். குறிப்பாக, தெலுங்கில் அல்லு அர்ஜூனின் புஷ்பா திரைப்படத்தில் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்தது, இந்தியா முழுவதும் ஃபஹத் ஃபாசிலை பிரபலமாக்கியது.
இதன் மூலம் சினிமா துறையில் உச்சத்தில் இருந்துவரும் ஃபஹத் ஃபாசில் அடிக்கடி புதிய கார்களை வாங்குவதை விரும்பக்கூடியவர். அந்த வகையில், சமீபத்தில் மெர்சிடிஸ்-ஏஎம்ஜி ஜி63 என்கிற விலையுயர்ந்த மெர்சிடிஸ் வாகனத்தை வாங்கியுள்ளார். இதன் எக்ஸ்-ஷோரூம் விலை ரூ.4 கோடியாக தற்சமயம் உள்ளது. இந்த வாகனத்தை ஃபஹத் ஃபாசில் எப்போது வாங்கினார் என்பது தெரியவில்லை.

மெர்சிடிஸ்-ஏஎம்ஜி ஜி63 வாகனத்தில் மனைவி உடன் நடிகர் ஃபஹத் ஃபாசில் செல்லும் வீடியோ ஒன்று இணையத்தில் வெளியாகி உள்ளது. அதில், புதிய வாகனம் என்பதை வெளிக்காட்டும் வகையில் ஃபஹத் ஃபாசிலின் புதிய மெர்சிடிஸ்-ஏஎம்ஜி ஜி63 வாகனம் பளபளப்பாக காட்சியளிக்கிறது. மேலும் வீடியோவில், வாகனத்தை நஸ்ரியா ஓட்ட, அருகில் ஃபஹத் ஃபாசில் அமர்ந்திருப்பது போன்று தெரிகிறது.
மெர்சிடிஸ்-பென்ஸ் ஜி-கிளாஸ் வாகனத்தின் ஏஎம்ஜி வெர்சன் தான் ஜி63 ஆகும். ஜி-கிளாஸை காட்டிலும் ஜி63 வாகனத்தின் விலை கிட்டத்தட்ட 1 கோடி அளவில் அதிகமாக உள்ளது. இன்னும் சரியாக சொல்ல வேண்டுமென்றால், இந்தியாவில் விற்பனை செய்யப்படும் விலையுயர்ந்த மெர்சிடிஸ் கார், ஏஎம்ஜி ஜி63 ஆகும். இத்தகைய வாகனத்தை தான் தற்போது நடிகர் ஃபஹத் ஃபாசில் வாங்கியுள்ளார்.
இதில், 4 லிட்டர் வி8 ட்வின்-டர்போ பெட்ரோல் என்ஜின் பொருத்தப்படுகிறது. இந்த என்ஜின் அதிகப்பட்சமாக 585 பிஎச்பி மற்றும் 850 என்.எம் டார்க் திறன் வரையிலான இயக்க ஆற்றலை வெளிப்படுத்தக்கூடியதாக உள்ளது. 0-இல் இருந்து 100kmph வேகத்தை வெறும் 4.2 வினாடிகளில் எட்டிவிடக்கூடிய இந்த வாகனத்தின் டாப்-ஸ்பீடு 220kmph ஆகும். மெர்சிடிஸ்-ஏஎம்ஜி ஜி63 கார் பெட்ரோல் என்ஜின் உடன் மட்டுமே கிடைக்கும் நிலையில், மெர்சிடிஸ்-பென்ஸ் ஜி-கிளாஸ் கார் டீசல் என்ஜின் உடன் மட்டுமே கிடைக்கிறது.
இதில் 3.0 லிட்டர் டீசல் என்ஜின் பொருத்தப்படுகிறது. அதிகப்பட்சமாக 325 பிஎச்பி மற்றும் 700 என்.எம் டார்க் திறனை வெளிப்படுத்தக்கூடிய இந்த டீசல் என்ஜின் உடனும், ஏஎம்ஜி ஜி63 வாகனத்தில் பொருத்தப்படும் அதே ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் தான் வழங்கப்படுகிறது. இந்த மெர்சிடிஸ் வாகனம் 4-வீல்-டிரைவ் மற்றும் ஆல்-வீல்-டிரைவ் ஆப்ஷன்களில் கிடைக்கிறது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: ரூ.4 கோடி என்பது மெர்சிடிஸ்-ஏஎம்ஜி ஜி63 வாகனத்தின் எக்ஸ்-ஷோரூம் விலை ஆகும். ஆன்-ரோடு விலை இன்னும் பல இலட்சங்கள் அதிகமாக போகும். இருப்பினும் இது எல்லாம் முன்னணி தென்னிந்திய நடிகராக விளங்கும் ஃபஹத் ஃபாசிலுக்கு பெரிய விஷயமே கிடையாது. ஏனெனில், அவர் இவ்வாறான விலையுயர்ந்த கார்களை வருடத்திற்கு ஒன்று என வாங்கிக் கொண்டிருக்கிறார்.


Click it and Unblock the Notifications








