மிடில்-கிளாஸ் மக்களின் காரை ஆசையாய் வாங்கியது இந்த காமெடி நடிகரா!! இந்த கல்யாண நாளை இனி மறக்கவே மாட்டாரு!
மலையாள திரைப்படங்களின் மூலம் நம் தமிழ் மக்களுக்கும் பரீட்சையமான நடிகராகிய ஹரீஷ் கனரன் புதியதாக பட்ஜெட் விலையில் ஸ்கோடா கார் ஒன்றை வாங்கியுள்ளார். நடிகர் ஹரீஷ் கனரனை பற்றியும், இவர் வாங்கியுள்ள புதிய ஸ்கோடா காரை பற்றியும் இனி இந்த தொகுப்பில் விரிவாக பார்க்கலாம்.
மலையாள மக்கள் பொதுவாகவே ஆட்டோமொபைல் வாகனங்கள் மீது கூடுதல் ஆர்வத்துடன் இருக்கக்கூடியவர்கள் என்பதை பல்வேறு நிகழ்வுகளில் பார்த்து உள்ளோம். மலையாள திரைப்பட நடிகர், நடிகைகள் இன்னும் ஒருபடி மேலே போய் வித்தியாசமான கார் & பைக்குகளை வாங்குவதை அவ்வப்போது பார்க்க முடிகிறது.

குறிப்பாக, பிஎம்டபிள்யூ குழுமத்தின் கீழ் விற்பனை செய்யப்படும் மினி கார்களை மலையாள நடிகர்கள் அதிகமாக வாங்குகின்றனர். ஆனால், தற்போது மலையாள நடிகர் ஹரீஷ் கனரன் வாங்கி இருப்பது மிடில்-கிளாஸ் மக்கள் வாங்கக்கூடிய ஸ்கோடா ஸ்லாவியா காரை ஆகும். ஸ்கோடா ஆட்டோ நிறுவனத்தின் மாடர்ன் செடான் ரக கார் ஸ்லாவியா ஆகும்.
மலையாள சினிமாவில் காமெடி நடிகராக வளர்ந்துவரும் ஷரீஷ் கனரன், தென்னிந்திய சர்வதேச திரைப்பட சிறந்த காமெடி நடிகருக்கான விருதுக்கு 2017 மற்றும் 2021ஆம் ஆண்டுகளில் பரிந்துரைக்கப்பட்டார். ஆனால், விருதை பெறவில்லை என்றாலும், இதற்கு இடைப்பட்ட காலத்தில் மாநில அளவிலான விருதுகளை இவர் தட்டி சென்றுள்ளார்.

ஹரீஷ் கனரனின் நடிப்பில் கடைசியாக இந்த ஆண்டில் வெளிவந்த பாலயம் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந்த நிலையில்தான், ஹரீஷ் கனரன் புதியதாக ஸ்கோடா ஸ்லாவியா காரை வாங்கி உள்ளார். புதிய காரை மனைவி மற்றும் குழந்தைகள் உடன் ஷோரூமுக்கு சென்று டெலிவிரி எடுத்திருப்பதை ஹரீஷ் கனரன் தனது சமூக வலைத்தள பக்கங்களில் புகைப்படங்கள் மூலம் தெரிவித்துள்ளார்.
தனது திருமண நாளை முன்னிட்டு இந்த ஸ்கோடா காரை வாங்கியுள்ளதாகவும், இது கடவுளின் பரிசு எனவும் உணர்ச்சிவசம் பொங்க தனது பதிவுகளில் ஹரீஷ் கனரன் தெரிவித்துள்ளார். பொதுவாக, ஷோரூமில் இருந்து புதிய காரை டெலிவிரி எடுக்கும்போது அதில் தற்காலிக நம்பர் பிளேட் இருக்கலாம். பின்னர், ஆர்டிஓ-இல் அனுமதி பெற்றதும் நிரந்தர நம்பர் பிளேட் வழங்கப்படுவது வழக்கம்.

ஆனால், ஹரீஷ் கனரனின் காரில் ஷோரூமில் இருந்து டெலிவிரி எடுக்கும்போதே வெள்ளை நம்பர் பிளேட் இருப்பதை காணலாம். இவரது காரின் நம்பர் பிளேட்டில் 'KL 85C 5454' என்கிற பதிவெண் உடன் உள்ளது. இது ஃபேன்சி நம்பர் என கூறப்படுகிறது. ஆனால், இந்த வாகன பதிவெண்ணை எதற்காக ஹரீஷ் கனரன் தேர்வு செய்துள்ளார் என்பது தெரியவில்லை. அதேபோல், ஸ்கோடா ஸ்லாவியா காரின் எந்த வேரியண்ட்டை இந்த நடிகர் வாங்கியுள்ளார் என்பதும் தெரியவில்லை.
இந்தியாவில் ஸ்கோடா ஸ்லாவியா செடான் கார் 1.5 லிட்டர் டி.எஸ்.ஐ பெட்ரோல் மற்றும் 1 லிட்டர் டி.எஸ்.ஐ பெட்ரோல் என 2 விதமான என்ஜின் ஆப்ஷன்களில் விற்பனை செய்யப்படுகிறது. ஸ்கோடா ஸ்லாவியா காரின் எக்ஸ்-ஷோரூம் விலைகள் ரூ.11.55 லட்சத்தில் இருந்து ரூ.19.14 லட்சம் வரையில் உள்ளன. ஸ்கோடா ஸ்லாவியாவை அடிப்படையாக கொண்டு ஃபோக்ஸ்வேகனில் விர்டுஸ் செடான் கார் உருவாக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: மலையாள காமெடி நடிகர் ஹரீஷ் கனரனிடம் ஏற்கனவே ஜீப் காம்பஸ் மற்றும் ஃபோக்ஸ்வேகன் போலோ கார்கள் உள்ளன. இந்த வரிசையில் 3வது காராக ஸ்கோடா ஸ்லாவியா ஹரீஷ் கனரனின் கேரேஜில் இணைந்துள்ளது. திருமண தினத்தை முன்னிட்டு வாங்கப்பட்டுள்ளதால், இந்த காரை ஹரீஷ் கனரனின் மனைவியார் தான் அதிகமாக பயன்படுத்துவார் என தெரிகிறது.


Click it and Unblock the Notifications









