48 வயதிலும் மனுஷன் என்னா ஸ்டைலா இருக்காரு... நடிகரா இருந்தாலும் பைக்கை வாடகை எடுத்து பயன்படுத்தும் நிலைமை!
நம்மில் பலருக்கு பைக்கில் ஜாலியாக தொலைத்தூர பயணங்களை மேற்கொள்ள வேண்டும் என்கிற ஆசை இருக்கும். அதிலிலும் குறிப்பாக, ஜம்மூ & காஷ்மீரில் உள்ள லடாக் (Ladakh) வரையில் பைக் பயணம் செய்து பார்க்க வேண்டும் என்கிற விருப்பம் இருக்கும். இவ்வாறான ஆசைகள் சாதாரணமான மனிதர்களிடம் மட்டுமின்றி, சினிமா (Cinema) பிரபலங்கள் மற்றும் அரசியல்வாதிகளிடமும் இருப்பதை பார்க்க முடிகிறது.
அந்த வகையில், 48 வயதில் நடிகர் (Actor) ஒருவர் லடாக்கில் பைக் பயணம் மேற்கொள்ள வேண்டும் என்கிற தனது ஆசையை தற்போது நிஜமாக்கி கொண்டுள்ளார். மலையாள சினிமா உலகை சேர்ந்தவரான இந்த நடிகரின் பெயர், குஞ்சாக்கோ போபன் (Kunchacko Boban) ஆகும். தமிழில் நடிகர் மாதவனை போன்று, 2000ஆம் காலக்கட்டத்தில் மலையாள சினிமா உலகில் சாக்லெட் பாய் ஆக வலம் வந்தவர், குஞ்சாக்கோ போபன் ஆவார்.

மலையாள சினிமாவில் 100க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ள இவர், சமீப காலமாக திரைப்படங்களை தயாரிக்கவும் ஆரம்பித்துள்ளார். இதற்கிடையில், மற்ற மலையாள நடிகர்களை போன்று அவ்வப்போது விலையுயர்ந்த கார் & பைக்குகளை வாங்குவதையும் வாடிக்கையாக கொண்டிருக்கும் குஞ்சாக்கோ போபனுக்கு இளம் வயதில் இருந்தே லடாக்கில் பைக் ஓட்ட வேண்டும் என்கிற ஆசை இருந்துள்ளது.
அதனை தற்போது ராயல் என்ஃபீல்டு கிளாசிக் 350 (Royal Enfield Classic 350) பைக்கில் நடிகர் குஞ்சாக்கோ போபன் நிஜமாக்கி கொண்டுள்ளார். மேலும், இதுதொடர்பான தனது உணர்ச்சிகளை இன்ஸ்டாகிராமில் (Instagram) பதிவாக வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது, "......லே லடாக்...... பைக் மற்றும் லே லடாக்... அழகான முரட்டுத்தனமான கலவை!!

அனைத்து இளைஞர்களின் கனவு இதுதான், எனது விருப்பப் பட்டியலில் இருந்து ஒன்றை நீக்குகிறேன்" என குறிப்பிட்டுள்ளார். அதாவது, லடாக்கில் பைக் ஓட்டி பார்க்க வேண்டும் என்கிற ஆசை நடிகர் குஞ்சாக்கோ போபனுக்கு இருந்துள்ளது. அதனை தற்போது நிஜமாக்கி உள்ளதால், அந்த விருப்பத்தை தனது மனதில் இருந்து நீக்குவதாக தனது இன்ஸ்டாகிராம் பதிவில் இவர் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக, நடிகர் குஞ்சாக்கோ போபன் வெளியிட்டுள்ள படங்களில், இவர் ஓட்டுவது ராயல் என்ஃபீல்டு கிளாசிக் 350 பைக் என்றாலும், இதனை லடாக்கில் ராயல் என்ஃபீல்டு சிக்னல்ஸ் 350 (Signals 350) என அழைக்கின்றனர். ஏனெனில், லடாக்கில் நிலவும் காலச்சூழலுக்கு ஏற்ப கிளாசிக் 350 பைக்கில் சில மாற்றங்கள் செய்யப்பட்டு அங்கு பயன்படுத்தப்படுவதால், சிக்னல்ஸ் 350 என அழைக்கப்படுகிறது.

லடாக் ஆனது இமயமலை தொடருக்கு அடிவாரத்தில் அமைந்திருப்பினும், அங்கு பசுமையான சுற்றுச்சூழலுக்கு ஏற்ற காலநிலை நிலவுவது இல்லை. இதனாலேயே லடாக்கின் பெரும் பகுதி வெறும் மணற்பரப்புகளாக இருப்பதால், இத்தகைய பகுதிகளில் தொடர்ந்து பயன்படுத்துவதற்கு ஏற்ப வாகனங்களிலும் சில மாற்றங்கள் செய்ய வேண்டி உள்ளது. மேலும், இந்த காரணத்தினால்தான் பலரும் லடாக்கிற்கு தங்களது வாகனங்களை கொண்டு செல்ல விரும்புகின்றனர்.
ஆனால், மலையாள நடிகர் குஞ்சாக்கோ போபன் தனது கிளாசிக் 350 பைக்கை லடாக்கிற்கு கொண்டு செல்லவில்லை. மாறாக லடாக்கில் சிக்னல்ஸ் 350 பைக்கை வாடகைக்கு எடுத்து பயன்படுத்தி உள்ளார். இதனால்தான், குஞ்சாக்கோ போபன் வெளியிட்டுள்ள படங்களில் அவர் பயன்படுத்தியுள்ள பைக்கில் லடாக் நம்பர் பிளேட் (Number Plate) பொருத்தப்பட்டு உள்ளதை காணலாம்.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: தென்னிந்தியாவில் இருந்து இந்தியாவின் வடமுனையில் உள்ள லடாக் வரையில் பைக் ஓட்டி செல்வது ஜாலியானதாக இருந்தாலும், அதனால் ஏற்படும் நேர விரயமும், உடல் சோர்வும் நாம் எண்ணுவதை காட்டிலும் அதிகம் ஆகும். இதனால், நடிகர் குஞ்சாக்கோ போபனை போன்று எளிமையாக லடாக்கில் பைக் அல்லது காரை வாடகைக்கு எடுத்து பயன்படுத்தலாம். இது லடாக்கிற்கு மட்டுமில்லை, மற்ற சுற்றுலா பகுதிகளுக்கும் பொருந்தும்.


Click it and Unblock the Notifications









