ஒரு நடிகரால இப்படியும் இருக்க முடியுமா.. எளிமையில் ரஜினியையே தோற்கடிச்சுட்டாரு இந்த மலையாள நடிகர்!

இப்போதெல்லாம் நடிகர்கள் ஒரு படத்தில் நடித்துவிட்டாலே கோடி ரூபாய் மதிப்புள்ள கார்களை வாங்குவதை வாடிக்கையான ஒன்றாக மாறிவிட்டது. இதற்கு சான்றாக பல்வேறு சம்பவங்கள் இந்தியாவில் அரங்கேறி இருக்கின்றன. ஏன், சீரியல் நடிகர்கள்கூட ஆடி, பென்ஸ் மற்றும் பிஎம்டபிள்யூ என சொகுசு கப்பல் மாதிரியான கார்களில் வலம் வர தொடங்கி இருக்கின்றனர்.

இந்த மாதிரியான சூழ்நிலையில் மலையாள திரையுலகைச் சேர்ந்த முன்னணி குணச்சித்திர நடிகர் ஒருவர் சாதாரண ஸ்ட்ரிங்ரே (வேகன்ஆர்) கார் மாடலில் பயணித்துக் கொண்டிருப்பது தெரிய வந்திருக்கின்றது. அவர் பயன்படுத்தி வருவது புதிய வெர்ஷன் வேகன்ஆர்கூட இல்லை என்பது குறிப்பிடத்தகுந்தது. பழைய தலைமுறை வேகன்ஆர் கார் மாடலே அதுவாகும்.

Malayalam actor jagadeesh using maruti wagonr

ஜெகதீஷே அந்த மலையாள நடிகர் ஆவார். இந்த மலையாள நடிகர் 250க்கும் மேற்பட்ட படங்களில் நடித்திருக்கின்றார் என்பது குறிப்பிடத்தகுந்தது. இத்தகைய மாபெரும் நடிகர் இன்னும் மலிவு விலை கார்களில் பயணித்துக் கொண்டிருப்பது பெருத்த ஆச்சரியத்தை ஏற்படுத்தும் வகையில் அமைந்திருக்கின்றது. சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தும் இதுமாதிரியான ஓர் நபரே ஆவார்.

அவரிடத்தில் கோடிக் கணக்கான ரூபாய் சொத்தும், பல கோடி ரூபாய் மதிப்புள்ள கார்கள் சிலவும் இருக்கின்றன. இருப்பினும், அவர் இப்போதும் டொயோட்டா இன்னோவா காரிலேயே பயணித்துக் கொண்டிருக்கின்றார். இவரைப் போன்ற நபராகவே மலையாள திரையுலகைச் சேர்ந்த நடிகர் ஜெகதீஷ் இருக்கின்றார். இது மிகப் பெரிய ஆச்சரியம் ஆகும்.

Actor jagadish drove an old maruti stingray

ஏனெனில் மலையாள திரையுலகைச் சேர்ந்த திரை பிரபலங்கள் பலர் பல கோடி ரூபாய் மதிப்புள்ள கார்களில் வலம் வந்துக் கொண்டிருக்கின்றனர். குறிப்பாக, முன்னணி நடிகர்களான துல்கர் சல்மான் மற்றும் ஃபஹத் ஃபாசில் போன்றோர் மாத இடைவெளியில் கார்களை வாங்கிக் குவித்துக் கொண்டிருக்கின்றனர்.

இந்த மாதிரியான சூழலிலேயே பல ஆண்டுகள் பழைய வேகன்ஆர் காரை ஜெகதீஷ் பயன்படுத்தி வருகின்றார். இதனால்தான் இந்த தகவல் பலருக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தும் வகையில் அமைந்திருக்கின்றது. சமீபத்தில் மலையுள திரையுலகைச் சேர்ந்த நடிகர் பைஜு சந்தோஷின் மகள் திருமணத்தில் கலந்துக் கொள்ளகூட அவர் இந்த பழைய வேகன்ஆர் காரிலேயே வந்திருக்கின்றார்.

Old maruti stingray

அப்போதே, எடுக்கப்பட்ட படமே தற்போது இணையத்தில் வைரலாகிக் கொண்டிருக்கின்றது. இந்தியாவின் பெஸ்ட் செல்லிங் கார் மாடலாக வேகன்ஆர் இருக்கின்றது. பட்ஜெட் விலையில் காரை வாங்குவோரின் முதல் தேர்வாக இந்த கார் மாடலே இருக்கின்றது. இந்தியர்கள் இந்த காரை டால் பாய் என்று செல்லப் பெயரில் அழைப்பது குறிப்பிடத்தகுந்தது.

"இத்தகைய செல்லமான காராக இந்த கார் அவருக்கு இருக்குமோ, இதனாலேயே அவர் அந்த காரை பயன்படுத்துகிறாரோ என்னமோ" என்றே நம்மை ஜெகதீஸ்-இன் செயல் நினைக்கச் செய்திருக்கின்றது. வேகன்ஆர் 23.56 கிமீ முதல் 34.05 கிமீ வரையில் மைலேஜ் தரும் திறன் கொண்டது.

Actor jagadish drove old car

பெட்ரோல் மற்றும் சிஎன்ஜி என இரண்டு விதமான ஆப்ஷன்களில் இந்த கார் விற்பனைக்குக் கிடைக்கின்றது. இப்போது விற்பனையில் உள்ள வேகன்ஆர் காரில் பாதுகாப்பு அம்சங்களாக இரட்டை ஏர் பேக், இபிடி உடன் கூடிய ஏபிஎஸ், எலெக்ட்ரானிக் ஸ்டெபிளிட்டி கன்ட்ரோல் ப்ரோக்ராம், ரியர் பார்க்கிங் கேமிரா சென்சார்கள், ஹில்-ஹோல்டு அசிஸ்ட் என எக்கசக்க அம்சங்கள் வழங்கப்பட்டு இருக்கின்றன.

இதேபோல், நவீன தொழில்நுட்பங்களாக 7 அங்குல இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், ஸ்மார்ட் ஃபோன் நேவிகேஷன், ஆன்ட்ராய்டு ஆட்டோ மற்றும் ஆப்பிள் கார் ப்ளே, 4 ஸ்பீக்கர்கள் கொண்ட ஆடியோ சிஸ்டம், பன்முக கன்ட்ரோல்கள் கொண்ட ஸ்டியரிங் வீல் ஆகியவை வேகன்ஆர் காரில் வழங்கப்பட்டு இருக்கின்றன.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் மிக அதிக எண்ணிக்கையில் விற்பனையாகும் ஹேட்ச்பேக் கார் மாடல் வேகன்ஆர் ஆகும். இதன் விலை குறைவு என்பதாலும், அதிக இட வசதியைக் கொண்டிருப்பதாலும், மேலும், மிக சிறந்த மைலேஜை வழங்கும் என்பதாலும் இதற்கு சந்தையில் நல்ல வரவேற்புக் கிடைத்துக்கொண்டிருக்கின்றது. வேகன்ஆர் ஆரம்ப விலை ரூ. 5.55 லட்சம் ஆகும். இது எக்ஸ்-ஷோரூம் விலை மட்டுமே ஆகும்.

More from DriveSpark

Article Published On: Sunday, April 7, 2024, 5:00 [IST]
English summary
Malayalam actor jagadeesh beats superstar rajinikanth in living simplicity
மேலும்... #ஆஃப் பீட் #off beat
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X