ஒரு மாநிலத்திற்கே சூப்பர் ஸ்டார் இவரு! இவ்வளவு சிம்பிளான கார்ல வராரு? என்ன கார் தெரியுமா?

மலையாள சினிமா உலகில் சூப்பர் ஸ்டாராக இருக்கும் நடிகர் மோகன் லால் சமீபத்தில் டில்லியில் சாதாரண காரில் வந்திறங்கிய வீடியோ வைரலாக பரவி வருகிறது. பொதுவாக சினிமா பிரபலங்கள் பலர் காஸ்ட்லியான கார்களை அதிகம் பயன்படுத்துவார்கள். ஆனால் நடிகர் மேகன்லால் சாதாரணமான ஒரு காரில் பயணித்தது பலரை ஆச்சரியப்படுத்தியுள்ளது.மோகன்லால் போன்ற பெரிய நடிகர் பயன்படுத்திய சாதாரண கார் எது? இதை இவர் மட்டுமல்லாமல் மற்ற பிரபலங்களும் பயன்படுத்த என்ன காரணம்? விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்.

மலையாள சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் மோகன்லால். இவர் மலையாள சினிமாக்களில் சூப்பர் ஸ்டாராக கருதப்படுகிறார். இவர் பல தமிழ் திரைப்படங்களிலும் நடித்துள்ளார். இவர் இந்தியா முழுவதும் பிரபலமான நடிகராக இருக்கிறார். பொதுவாக இவர் போன்ற பிரபலங்கள் பல காஸ்ட்லியான கார்களில் பயணம் செய்வார்கள். ஆனால் சமீபத்தில் இவர் டெல்லியில் சாதாரண கார் ஒன்றில் பயணித்து காரிலிருந்து இறங்கி விமான நிலையத்திற்கு வந்த வீடியோ சமூகவலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.

Mohanlal in Innova Crysta

பலர் இந்த வீடியோவை பகிர்ந்து நடிகர் மோகன்லாலின் சிம்பிளிசிட்டியை பாராட்டி வருகிறார்கள். பந்தாவிற்காகவே பலர் காஸ்டலியான கார்களை பயன்படுத்தி வரும் நிலையில் இவர் தனக்கான தேவையை மட்டும் அறிந்து அதற்கு தகுந்தார் போல் ஒரு காரில் பயணம் செய்துள்ளார் என இவரை பாராட்டி வருகின்றனர். இந்த வீடியோவின்படி இவர் பயணித்தது டொயோட்டா நிறுவனத்தின் இன்னோவா கிரைஸ்டா கார் தான்.

டொயோட்டா இன்னோவா கிரைஸ்டா காரை பொருத்தவரை இந்தியாவில் பல பிரபலங்கள் பயன்படுத்தி வருகின்றனர். இதற்கு முக்கியமான காரணம் இந்த காரில் உள்ள இட வசதி தான். இந்த கார் 7 சீட்டர் மற்றும் 8 சீட்டர் ஆப்ஷன்களில் விற்பனையாகி வருகிறது. இந்த கார் ஜிஎக்ஸ், விஎக்ஸ், இசட் எக்ஸ் ஆகிய 3 விதமான வேரியன்டகளில் விற்பனையாகி வருகிறது.

Mohanlal in Innova Crysta

டொயோட்டா இன்னோவா கிரைஸ்டா காரை பொருத்தவரை இந்திய மார்கெட்டில் ரூ23.85 லட்சம் முதல் ரூ31.86 லட்சம் என்ற எக்ஸ் ஷோரூம் விலையில் விற்பனையாகி வருகிறது. இந்த கார்கள் எல்லாம் விஐபிகள் அதிகமாக பயன்படுத்துவார்கள். இந்தியாவில் அரசியல்வாதிகள் பலர் இந்த காரை தான் அதிகம் பயன்படுத்துகிறார்கள்.

இந்த காரில் உள்ள இன்ஜினை பொருத்தவரை 2.4 லிட்டர் 4 சிலிண்டர் டீசல் இன்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இது 148 பிஎச்பி பவரையும் 343 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும் திறன் கொண்டதாக வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த காரில் ஆட்டோமெட்டிக் கியர் ஆப்ஷன் கிடையாது. இந்த கார் லிட்டருக்கு 13.2 முதல் 15 கி.மீ வரை மைலேஜை வழங்குகிறது. இதனால் பலர் இந்த காரை விரும்பி வாங்கி வருகின்றனர்.

Mohanlal in Innova Crysta

இந்த காரில் உள்ள பாதுகாப்பு அம்சங்களை பொருத்தவரை இபிடியுடன் கூடிய ஏபிஎஸ், மற்றும் வாகன ஸ்டெபிளிட்டி கண்ட்ரோல் உள்ளிட்ட அம்சங்கள் இருக்கிறது. இந்த கார் பாதுகாப்பு சோதனையில் 5 ஸ்டார் ரேட்டிங்கை பெற்றுள்ளது. இந்த காரில் நவீன அப்டேட்டில் அடாஸ் தொழிற்நுட்பங்களும் சேர்க்கப்பட்டுள்ளன. தற்போது உள்ள நவீன அம்சங்களுடன் இந்த கார் அப்டேட் செய்யப்பட்டு விற்பனையாகிறது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் பிரபலங்கள் பலர் இந்த காரை பயன்படுத்தினாலும் மோகன்லால் போன்ற உச்சத்தில் இருக்கும் நடிகர் இந்த காரை பயன்படுத்துவது பெரிய விஷயமாக பார்க்கப்படுகிறது. சிம்பிளாக இவர் எந்த பந்தாவும் இல்லாமல் இருக்கிறார் என இவரை பார்த்தவர்கள் பேசி வருகின்றனர். இது குறித்த உங்கள் கருத்துக்களை கமெண்டில் சொல்லுங்கள்.

More from DriveSpark

Article Published On: Wednesday, March 26, 2025, 16:15 [IST]
English summary
Malayalam actor mohanlal spotted in innova crysta know full details
மேலும்... #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X