மனைவி உடன் ஜோடியாக புது பைக்கை டெலிவிரி எடுத்தது அந்த காமெடி நடிகரா? நிறைய பேர் வாங்காத ஹோண்டா பைக்!!
சினிமா நட்சத்திரங்கள் தங்களது ஸ்டேட்டஸை வெளிக்காட்டுவதற்காக அவ்வப்போது புது, புது வாகனங்களை வாங்குவது வாடிக்கையான ஒன்றே. அதிலிலும், நடிகர், நடிகையர் வாங்குவது விலையுயர்ந்த கார் & பைக் ஆகவே இருக்கும். இந்த வரிசையில், மலையாள சினிமாவில் முன்னணி காமெடி நடிகராக வளர்ந்துவரும் பிரசாந்த் முரளி புதியதாக விலையுயர்ந்த ஹோண்டா பைக்கை வாங்கியுள்ளார். ஹோண்டாவில் அப்படி எந்த மோட்டார்சைக்கிளை இவர் வாங்கியுள்ளார்? பிரசாந்த் முரளியின் நடிப்பில் அடுத்ததாக என்னென்ன படங்கள் வெளிவர உள்ளன என்பதை பற்றி இனி பார்க்கலாம்.
மலையாள மோலிவுட்டில் குறுகிய காலத்தில் தனது நடிப்பு திறமையால் மக்கள் மனதை கவர்ந்தவர், பிரசாந்த் முரளி ஆவார். இவரது தோற்றமும், இவர் பேசும் ஸ்டைலும் கேரள மக்களுக்கு மிகவும் பிடித்து போனது. நம் தமிழ்நாட்டில் கூட பிரசாந்த் முரளிக்கு சில ரசிகர்கள் உள்ளனர். இவரது பெயர் தெரியாதவர்களுக்கு கூட இவரது முகம் பரீட்சையமானதாக இருக்கலாம்.

பிரசாந்த் முரளி நடிகர் மட்டுமல்ல, கதை எழுத்தாளரும் கூட. அங்கமாலி டைரிஸ் திரைப்படம் இவருக்கு நல்ல பெயரை பெற்றுக் கொடுத்தது. தி டீச்சர், காசர்கோல்டு என இதுவரையில் 14க்கும் அதிகமான படங்களில் நடித்துள்ள பிரசாந்த் முரளியின் நடிப்பில் இந்த 2024இல் ஏற்கனவே 2 திரைப்படங்கள் வெளியாகிவிட்டன. அடுத்ததாக பட்டபகல் என்கிற மலையாள படமும் இந்த வருடத்தில் திரைக்குவர உள்ளது.
இதுமட்டுமின்றி, நடிகர் பிரசாந்த் முரளியின் நடிப்பில் மேலும் 4 திரைப்படங்கள் தயாராகி வருகின்றன. இதில் சில படங்களில் கதாநாயன் கதாபாத்திரத்தில் நடித்துவரும் பிரசாந்த் முரளி சில படங்களில் வில்லன் ரோலையும் ஏற்றுள்ளார். கேரளாவின் கோட்டயத்தில் பிறந்தவரான பிரசாந்த் முரளி புதியதாக விலையுயர்ந்த ஹோண்டா பைக் ஒன்றை தற்போது வாங்கியுள்ளார்.

நடிகர் பிரசாந்த் முரளி வாங்கியிருப்பது ஹோண்டா மோட்டார்சைக்கிள் & ஸ்கூட்டர் இந்தியா நிறுவனத்தின் சிபி300ஆர் என்கிற ஸ்ட்ரீட்ஃபைட்டர் ரக மோட்டார்சைக்கிள் ஆகும். ஷோரூமுக்கு மனைவி உடன் சென்ற பிரசாந்த் முரளி கவர்ச்சிக்கரமான சிவப்பு நிறத்தில் ஹோண்டா சிபி300ஆர் பைக்கை டெலிவிரி பெறும்போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.
ஷோரூமில் டெலிவிரி பெறும்போதே பிரசாந்த் முரளியின் பைக்கில் வெள்ளை நிற நம்பர் பிளேட் பொருத்தப்பட்டுள்ளதை வீடியோவில் காணலாம். பைக்கை டெலிவிரி பெற்றபின், ஷோரூமில் இருந்து பைக்கை வீட்டிற்கு மனைவியை பின்னால் அமர வைத்து பிரசாந்த் முரளி ஓட்டி சென்றுள்ளார். கொச்சியில் உள்ள ஹோண்டாவின் பிக்விங் டீலர்ஷிப் மையத்தில் இந்த பைக்கை பிரசாந்த் முரளி டெலிவிரி பெற்றுள்ளார்.

ஹோண்டா 2-வீலர்ஸ் நிறுவனம் அதன் விலையுயர்ந்த மோட்டார்சைக்கிள்களை பிக்விங் டீலர்ஷிப் ஷோரூம் வாயிலாக விற்பனை செய்வது குறிப்பிடத்தக்கது. ஹோண்டா சிபி300ஆர் பைக்கை பற்றி சொல்ல வேண்டுமென்றால், இந்தியாவில் இந்த பைக் முதல்முறையாக 2019ஆம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்டது. கடைசியாக, கடந்த ஆண்டு அக்டோபர் மாதத்தில் சிபி300ஆர் பைக்கை ஹோண்டா அப்டேட் செய்தது.
2019இல் ரூ.2.41 லட்சத்தில் ஹோண்டா சிபி300ஆர் பைக் அறிமுகம் செய்யப்பட்டது. ஆனால், 5 வருடங்கள் கடந்த பின்பும் தற்போதும் இதே விலையில்தான் இந்த ஹோண்டா பைக் விற்பனை செய்யப்படுகிறது என்றால் நம்ப முடிகிறதா? கடந்த ஆண்டு அக்டோபர் வரையில் சிபி300ஆர் பைக்கின் விலை ரூ.2.77 லட்சமாக இருந்தது. ஆனால், 2023 அக்டோபரில் அப்டேட் செய்யப்பட்ட போது இந்த பைக்கின் விலையை அதிரடியாக ஹோண்டா ரூ.37,000 குறைத்தது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: வாகனங்களின் விலைகள் இந்த அளவிற்கு குறைக்கப்படுவது அரிதான ஒன்றே. இருப்பினும், இந்த பைக்கின் விலை இவ்வளவு குறைக்கப்பட்டு இருப்பதற்கு காரணம், இந்த பைக்கின் விற்பனை ஆகும். ஹோண்டா சிபி300ஆர் இந்தியாவில் அதிக எண்ணிக்கையில் விற்பனையாகும் பைக் கிடையாது. இருப்பினும், இந்த பைக்கை மலையாள நடிகர் பிரசாந்த் முரளி வாங்கியுள்ளார்.


Click it and Unblock the Notifications









