இந்த பிரபல நடிகர் இன்னும் எத்தனை கார் தாங்க வாங்குவாரு!! புதியதாக மற்றொரு விலைமிக்க மெர்சிடிஸ் கார்...

பிரபல மலையாள நடிகர் பிரித்விராஜ் புதியதாக மெர்சிடிஸ்-ஏஎம்ஜி ஜி63 காரை வாங்கியுள்ளார். பிரித்விராஜின் இந்த புதிய மெர்சிடிஸ் காரை பற்றிய கூடுதல் விபரங்களை இனி பார்க்கலாம்.

இந்த பிரபல நடிகர் இன்னும் எத்தனை கார் தாங்க வாங்குவாரு!! புதியதாக மற்றொரு விலைமிக்க மெர்சிடிஸ் கார்...

மலையாள நடிகர் பிரித்விராஜுக்கு அறிமுகம் தேவையே இல்லை என்றுதான் நினைக்கிறேன். தமிழிலும் சில படங்களில் நடித்துள்ள இவர் மலையாள பட உலகில் முன்னணி நடிகராக உள்ளார். சமீபத்தில் இயக்குனர் துறையிலும் பிரித்விராஜ் அடியெடுத்து வைத்திருந்தார். நடிகர் மோகன்லாலை வைத்து இவர் இயக்கிய லூசிபர் திரைப்படம் கேரளாவில் பெரிய வெற்றி பெற்றது.

இந்த பிரபல நடிகர் இன்னும் எத்தனை கார் தாங்க வாங்குவாரு!! புதியதாக மற்றொரு விலைமிக்க மெர்சிடிஸ் கார்...

இதனாலேயே தெலுங்கிலும் ரீமேக் செய்யப்பட்ட இந்த படத்தை தொடர்ந்து ப்ரோ டேடி என்ற மற்றொரு படத்தின் மூலமாகவும் மோகன்லாலை வைத்து படத்தை இயக்கினார் பிரித்விராஜ். இவ்வாறு திரைப்படங்களில் நடிப்பது மட்டுமின்றி, இயக்கவும் செய்ய ஆரம்பித்துள்ள பிரித்விராஜ் புதியதாக மெர்சிடிஸ்-ஏஎம்ஜி ஜி63 காரை வாங்கியுள்ளார்.

இந்த பிரபல நடிகர் இன்னும் எத்தனை கார் தாங்க வாங்குவாரு!! புதியதாக மற்றொரு விலைமிக்க மெர்சிடிஸ் கார்...

நடிகர் பிரித்விராஜ் தங்களது ஷோரூமில் இருந்து மெர்சிடிஸ்-ஏஎம்ஜி ஜி63 காரை பெற்றுள்ளார் என கேரளா மாநிலத்தில் கொச்சி, மலப்புரம் மற்றும் கோழிக்கோட்டில் ஷோரூம்களை வைத்துள்ள ராயல் டிரைவ் நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இதுகுறித்த பதிவுகளையும் ராயல் டிரைவ் டீலர்ஷிப் ஷோரூம் அதன் சமூக வலைத்தள பக்கங்களில் பதிவிட்டுள்ளது.

இந்த வீடியோவில், பிரித்விராஜ் ஓட்டிவரும் ஏஎம்ஜி ஜி63 காரிற்கு ஏற்கனவே வாகன பதிவு சான்றிதழ் வாங்கப்பட்டு, வெள்ளை நிற பதிவெண் பலகை பொருத்தப்பட்டுள்ளது. ஆதலால் இந்த நடிகர் வாங்கியிருப்பது ப்ரீ-ஓவ்ன்டு காராக இருக்கலாம். அதுவுமில்லாமல், ராயல் டிரைவ் டீலர்ஷிப் ஷோரூம் ஆனது விலைமிக்க ப்ரீ-ஓவ்ன்டு லக்சரி கார்களை மட்டுமே விற்பனை செய்து வருகிறது.

இந்த பிரபல நடிகர் இன்னும் எத்தனை கார் தாங்க வாங்குவாரு!! புதியதாக மற்றொரு விலைமிக்க மெர்சிடிஸ் கார்...

ப்ரீ-ஓவ்ன்டு கார்கள் என்பவை பயன்படுத்தப்பட்ட கார்கள் ஆகும். ஆனால் ஒரு தனி நபரிடம் இருந்து வாங்கப்படும் பயன்படுத்தப்பட்ட கார்கள் அல்ல. அதாவது தயார்ப்பு நிறுவனமோ அல்லது டீலர்ஷிப் ஷோரூமோ டெஸ்ட் ட்ரைவ்களுக்கோ அல்லது வேறெதாவது பணிகளுக்கோ பயன்படுத்திவந்த கார்களாகும்.

இந்த பிரபல நடிகர் இன்னும் எத்தனை கார் தாங்க வாங்குவாரு!! புதியதாக மற்றொரு விலைமிக்க மெர்சிடிஸ் கார்...

தயாரிப்பு நிறுவனத்தால் நிர்ணயிக்கப்பட்டிருக்கும் சோதனைகளை பூர்த்தி செய்ய முடியாத அளவிற்கு ஆயுட்காலத்தையும், மைலேஜையும் கொண்டிருக்கும் சில வருட பழைய கார்கள் ப்ரீ-ஓவ்ன்டு கார்களாக விற்கப்படுகின்றன. ராயல் டிரைவில் ப்ரீ-ஓவ்ன்டு லக்சரி கார்களை வாங்குவது மட்டுமின்றி விற்கவும் மற்றும் விற்று வேறொரு லக்சரி காராக எக்ஸ்சேன்ஞ் செய்யவும் முடியும்.

இந்த பிரபல நடிகர் இன்னும் எத்தனை கார் தாங்க வாங்குவாரு!! புதியதாக மற்றொரு விலைமிக்க மெர்சிடிஸ் கார்...

ஏஎம்ஜி ஜி63 என்பது விலைமிக்க மெர்சிடிஸ்-பென்ஸ் ஜி-கிளாஸ் எஸ்யூவி வாகனத்தின் உயர்-நிலை வேரியண்ட் ஆகும். விலைமிக்க எஸ்யூவி வாகனத்தின் உயர்-நிலை வேரியண்ட் என்றால், புதியதாக வாங்க போனால் ஏஎம்ஜி ஜி63 காரின் விலை எவ்வளவு இருக்கும் என்று நினைத்து பாருங்கள். ஜி-கிளாஸின் ஆரம்ப நிலை ஜி350டி வேரியண்ட்டின் விலை ரூ.1.72 கோடி. உயர்-நிலை ஏஎம்ஜி ஜி63 வேரியண்ட்டின் விலை ரூ.2.55 கோடி ஆகும். இவை எக்ஸ்-ஷோரூம் விலை மட்டுமே.

இந்த பிரபல நடிகர் இன்னும் எத்தனை கார் தாங்க வாங்குவாரு!! புதியதாக மற்றொரு விலைமிக்க மெர்சிடிஸ் கார்...

மெர்சிடிஸ் ஜி-கிளாஸ் வாகனங்கள் பொதுவாகவே ஆஃப்-ரோடு பயணங்களுக்கு மிகவும் ஏற்றது என்று கருத்து உள்ளது. அப்படியிருக்கையில் நடிகர் பிரித்விராஜ் வாங்கியிருக்கும் மெர்சிடிஸ்-ஏஎம்ஜி ஜி63 காரின் ஆஃப்-ரோடு திறனை பற்றி நான் சொல்ல வேண்டியிருக்காது. ஏனெனில் மெர்சிடிஸின் ஏஎம்ஜி வரிசை கார்கள் செயல்திறன்மிக்கவைகளாகவே உலகம் முழுவதும் அறியப்பட்டுள்ளன.

இந்த பிரபல நடிகர் இன்னும் எத்தனை கார் தாங்க வாங்குவாரு!! புதியதாக மற்றொரு விலைமிக்க மெர்சிடிஸ் கார்...

கிட்டத்தட்ட 8 விதமான நிறத்தேர்வுகளில் விற்பனைக்கு கிடைக்கும் ஏஎம்ஜி ஜி63 காரின் வெளிப்பக்கத்திலும், உட்பக்கத்திலும் 'AMG' முத்திரைகள் பல இடங்களில் பொருத்தப்படுகின்றன. இந்த எஸ்யூவி காரின் நீளம் சுமார் 4,817மிமீ ஆகும். அதாவது ஏறக்குறைய 5 மீட்டர்கள். அகலம் மற்றும் உயரம் முறையே 1,931மிமீ மற்றும் 1,969மிமீ ஆகும். வாகனத்தின் பின் சக்கரங்கள் ஆனது முன் சக்கரங்களில் இருந்து 2,890மிமீ தொலைவில் உள்ளன.

இந்த பிரபல நடிகர் இன்னும் எத்தனை கார் தாங்க வாங்குவாரு!! புதியதாக மற்றொரு விலைமிக்க மெர்சிடிஸ் கார்...

தரையில் காரின் அடித்தளமானது 238மிமீ உயரத்தில் வழங்கப்படுகிறது. வாகனத்தின் கெர்ப் எடை 2560 கிலோ ஆகும். இந்தியாவில் தற்போதைக்கு 3982சிசி எம்177 ட்வின்-டர்போ வி8 பெட்ரோல் என்ஜின் உடன் மட்டுமே ஏஎம்ஜி ஜி63 கார் விற்பனைக்கு கிடைக்கிறது. அதிகப்பட்சமாக 6000 ஆர்பிஎம்-இல் 577 பிஎச்பி மற்றும் 2500 ஆர்பிஎம்-இல் 850 என்எம் டார்க் திறனை வெளிப்படுத்தக்கூடியதாக இந்த டர்போ பெட்ரோல் என்ஜின் உள்ளது.

இந்த பிரபல நடிகர் இன்னும் எத்தனை கார் தாங்க வாங்குவாரு!! புதியதாக மற்றொரு விலைமிக்க மெர்சிடிஸ் கார்...

இந்த என்ஜினை 4-சக்கர-டிரைவ் & அனைத்து-சக்கர-டிரைவ் தேர்வுகளில் வாங்கலாம். இந்த என்ஜின் உடன் 9-ஸ்பீடு ஆட்டோமேட்டிக் டிரான்ஸ்மிஷன் இணைக்கப்படுகிறது. விற்பனையில் ஏஎம்ஜி ஜி63 காருக்கு போட்டியாக எந்த மாடலும் இல்லை. ஆனால் ஜி-கிளாஸின் டீசல் வேரியண்ட்டான ஜி-கிளாஸ் ஜி350டி-க்கு லேண்ட் ரோவர் ரேஞ்ச் ரோவர் ஸ்போர்ட் போட்டியாக விளங்குகிறது.

More from DriveSpark

Article Published On: Tuesday, October 25, 2022, 14:09 [IST]
English summary
Malayalam actor prithviraj bought new mercedes amg g63 suv details
மேலும்... #ஆஃப் பீட் #offbeat
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+