ஹிட் அடித்த படத்தில் சின்ன ரோலில் நடித்தவர் இன்று புது ஸ்கோடா கார் உடன்!! எல்லாம் மனைவியின் கைராசி போல!

மலையாளத்தில் ஹிட் அடித்த மின்னல் முரளி திரைப்படத்தில் சிறிய கதாபாத்திரத்தில் நடித்து கவனத்தை பெற்றிருந்த நடிகர் ஒருவர் புதியதாக ஸ்கோடா கார் ஒன்றை வாங்கி உள்ளார். ஷோரூமுக்கு மனைவி உடன் சென்று அவர் காரை டெலிவிரி எடுத்த போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் இணையத்தில் பலரது கவனத்தை பெற்றுள்ளன.

சினிமாவில் நடிகராக வளர்ந்துவிட்டாலே புதியதாக கார் வாங்குவது அவசியமான ஒன்றாகும். ஏனெனில், புதியதாக வாங்கப்படும் கார் போக்குவரத்துக்கு பயன்படுவது மட்டுமின்றி, லைஃப் ஸ்டைலையும் மற்றவர்களுக்கு வெளிக்காட்டுவதாக இருக்கும். அதுமட்டுமின்றி, உங்களிடத்தில் எவ்வளவு திறமை இருந்தாலும், உங்களிடம் கார் இல்லையென்றால் உங்களது நடிப்பை குறைத்து மதிப்பிட நேரிடலாம்.

rajesh madhavan buys skoda kushaq

இதன் காரணமாகவே, சினிமாவில் சில படங்களில் நடித்தாலே அடுத்து புதியதாக கார் வாங்குவது என்கிற பாணியை பல நடிகர், நடிகைகள் பின்பற்றி வருகின்றனர். அந்த வகையில், மலையாள நடிகரும், இயக்குனருமான ராஜேஷ் மாதவன் புதியதாக ஸ்கோடா குஷாக் காரை வாங்கி உள்ளார். குஷாக் ஆனது ஸ்கோடா ஆட்டோவின் மாடர்ன் எஸ்யூவி கார் ஆகும்.

இத்தகைய காரை மனைவி உடன் சென்று ராஜேஷ் மாதவன் டெலிவிரி எடுத்துள்ளார். அப்போது எடுக்கப்பட்ட படங்களை இவிஎம் டீலர்ஷிப் ஷோரூம் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட, அது பலரது கவனத்தை பெற்றுள்ளது. மலையாளத்தை தாண்டி தமிழிலும் மக்களை கவர்ந்த கும்பளங்கி நைட்ஸ் திரைப்படத்தில் உதவி இயக்குனராக பணியாற்றியவர் ராஜேஷ் மாதவன் ஆவார்.

அதன்பின், மேலும் சில மலையாள படங்களிலும் உதவி இயக்குனராக இவர் பணியாற்றியுள்ளார். அதன்பின், படங்களில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்ததை அடுத்து, ராஜேஷ் மாதவன் திரைப்படங்களில் நடிக்கவும் துவங்கினார். குறிப்பாக, பான் இந்தியா மூவியாக வெளிவந்த டோவினோ தாமஸின் மின்னல் முரளி திரைப்படத்தில் ஓர் சிறிய போலீஸ் கதாபாத்திரத்தில் இவர் நடித்துள்ளார்.

ராஜேஷ் மாதவனின் இயக்கத்தில் உருவான முதல் திரைப்படம் ரீலீஸுக்கு தயாராகி வருகிறது. இந்த நிலையில்தான், ஸ்கோடா குஷாக் காரை இவர் வாங்கியுள்ளார். ராஜேஷ் மாதவன் வாங்கியிருப்பது 1.5 லிட்டர் டர்போ பெட்ரோல் என்ஜினை கொண்ட ஸ்கோடா குஷாக் காரின் விலைமிக்க ஸ்டைல் வேரியண்ட் ஆகும்.

rajesh madhavan buys skoda kushaq

குஷாக் காரில் இந்த டர்போ என்ஜினை மேனுவல் கியர்பாக்ஸ் அல்லது 7-ஸ்பீடு டி.எஸ்.ஜி கியர்பாக்ஸ் உடன் வாங்கலாம். டி.எஸ்.ஜி கியர்பாக்ஸ் உடன் காரின் விலை சற்று அதிகமாக இருக்கும். இந்த டி.எஸ்.ஜி கியர்பாக்ஸ் உடன் தான் குஷாக் காரை ராஜேஷ் மாதவன் வாங்கியுள்ளார். குஷாக் ஸ்டைல் 1.5 லிட்டர் டி.எஸ்.ஜி வேரியண்ட்டின் எக்ஸ்-ஷோரூம் விலை தற்சமயம் ரூ.19.79 லட்சமாக உள்ளது.

காரின் ஆன்-ரோடு விலை இன்னும் சில இலட்சங்கள் அதிகமாக வரும். கேரளாவின் கொச்சியில் உள்ள இவிஎம் ஷோரூமில் குஷாக் காரை நடிகர் ராஜேஷ் மாதவன் வாங்கியுள்ளார். 1.5 லிட்டர் டர்போ பெட்ரோல் என்ஜின் மட்டுமின்றி, 1 லிட்டர் டிஎஸ்ஐ பெட்ரோல் என்ஜின் ஆப்ஷனிலும் குஷாக் கிடைக்கிறது. க்ளோபல் என்சிஏபி கிராஷ் டெஸ்ட்டில் 5க்கு 5 நட்சத்திரங்களை பெற்ற கார்களுள் ஒன்று ஸ்கோடா குஷாக் ஆகும்.

rajesh madhavan buys skoda kushaq

டிரைவ்ஸ்பார்க் கருத்து: குஷாக் காரை ரூ.12 லட்சத்தில் இருந்து ரூ.20 லட்சம் வரையில் ஸ்கோடா நிறுவனம் விற்பனை செய்கிறது. அதாவது, இந்த காரை மிடில்-கிளாஸ் மக்களும் வாங்கலாம், அதேநேரம் ராஜேஷ் மாதவன் போன்ற நடிகர்களும் வாங்கக்கூடிய வகையிலான விலையில் இந்த காரை ஸ்கோடா மார்க்கெட்டிங் செய்து வருகிறது. க்ளோபல் என்சிஏபி கிராஷ் டெஸ்ட்டில் 5 ஸ்டார்களை பெற்ற காரை வாங்கியிருப்பதினால், நல்ல பாதுகாப்பான காரையே ராஜேஷ் மாதவன் வாங்கியுள்ளார்.

More from DriveSpark

Article Published On: Wednesday, May 15, 2024, 23:59 [IST]
English summary
Malayalam actor rajesh madhavan buys skoda kushaq check all details here
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X