படங்கள்ல இவரோட முகத்த பெருசா பாத்ததாகூட ஞாபகம் இல்ல.. இவ்ளோ காஸ்ட்லியான காருல சொகுசா டிராவல் பண்ணுறாரா!!
'படங்கள்ல இவரோட முகத்தை பெருசா பாத்ததாகூட ஞாபகம் இல்லையே' என கூறும் அளவிற்கு நம்மில் பலருக்கு பரீட்சையமில்லா ஓர் நடிகராக ராமு இருக்கின்றார். இவர் ஓர் மலையாள பட நடிகர் ஆவார். சமீப காலத்தில் மலையாள பட ரசிகரானவர்களுக்கு வேண்டுமானால் இவர் ஓர் புதிய நடிகரை போல தெரியலாம். ஆனால், மலையாள இன்டஸ்ட்ரீயில் இவரை அறியாதவர்களே இருக்க முடியாது. அத்தகைய முன்னணி மற்றும் பிரபலமான நடிகர்களில் ஒருவராகவே ராமு இருக்கின்றார். இவர் ஓர் மிகப் பெரிய கார் காதலர் ஆவார்.
இப்போதும், அவர் மாருதி 800 (Maruti 800) கார் மாடலை பயன்படுத்தி வருகின்றார் என்பது கவனிக்கத்தகுந்தது. 2004 ஆம் ஆண்டில் வாங்கப்பட்டதே இந்த கார் மாடலே இதுவாகும். இந்த கார் மாடலையே இப்போதும் வைத்திருக்கின்றார். இதுமட்டுமல்ல இரண்டுக்கும் விண்டேஜ் வகை மெர்சிடிஸ் பென்ஸ் கார்கள், ஃபோர்டு என்டீயோவர், இசுஸுகி, டொயோட்டா இன்னோவா கிரிஸ்டா மற்றும் லேட்டஸ்ட் ஆடி மற்றும் பென்ஸ் ஆகிய நிறுவனங்களின் ஆடம்பர கார்களையும் அவர் வைத்திருக்கின்றார்.

இவற்றை மட்டுமல்ல டொயோட்டா நிறுவனத்தின் மிகவும் காஸ்ட்லியான கார் மாடல்களில் ஒன்றான வெல்ஃபையர் (Toyota Velfire) காரையும் அவர் பயன்படுத்தி வருகின்றார். இந்த கார் மாடலிலேயே அவர் சொகுசாக அமர்ந்து பயணிக்கும் வீடியோ இப்போது வெளியாகி இருக்கின்றது. டொயோட்டா வெல்ஃபையர் ஓர் சொகுசு அம்சங்கள் நிறைந்த எம்பிவி (MPV) ரக கார் மாடல் ஆகும்.
இதன் ஒரே ஒரு யூனிட்டே ஒன்றரை கோடி ரூபாக்கும் அதிகமான விலையில் விற்கபடுகின்றது. ஆரம்ப நிலை தேர்வே இந்த அளவிற்கு அதிக விலையில் விற்பனைக்குக் கிடைக்கின்றது என்பது கவனிக்கத்தகுந்தது. அதுவும் அது எக்ஸ்-ஷோரூம் விலை மட்டுமே ஆகும். இத்தகைய மிக மிக அதிக விலைக் கொண்ட காரிலேயே நடிகர் ராமு பயணித்திருக்கின்றார்.
சொகுசு மற்றும் மிக தாராளமான இட வசதியைக் கொண்ட ஓர் எம்பிவி கார் மாடலே இந்த வெல்ஃபையர் ஆகும். இந்த காரில் பயணிக்கும்போது காரில் இருக்கின்ற உணர்வே இருக்காது. கப்பலில் மிதப்பது போன்ற அனுபவமே கிடைக்கும். இதற்கேற்ப அட்வான்ஸ்டு சஸ்பென்ஷனையே வெல்ஃபையர் காரில் டொயோட்டா வழங்கி இருக்கின்றது.
இதுமட்டுமல்ல வீட்டுக்குள் இருக்கின்ற மாதிரியான ஓர் ஃபீலும் இந்த காரில் பயணிக்கும்போது கிடைக்கும் என்பது கவனிக்கத்தகுந்தது. இதற்கேற்பவே படுக்கைகளுக்கு இணையாக சாயும் வசதிக் கொண்ட இருக்கைகள், டிவி மற்றும் சிறிய குளிர்சாதன பெட்டி உள்ளிட்டவற்றை இந்த காரில் டொயோட்டா வழங்கி இருக்கின்றது.

இந்த ஆடம்பர காருக்கு இந்திய பணக்காரர்கள் மத்தியில் மிக சிறப்பான வரவேற்புக் கிடைத்துக் கொண்டிருக்கின்றது. குறிப்பாக, மலையாள நடிகர்கள் மத்தியில் அமோக வரவேற்புக் கிடைத்துக் கொண்டிருக்கின்றது என்றே சொல்லலாம். இதை உறுதிப்படுத்தும் விதமாக மோகன்லால், சுரேஷ் கோபி, நிவின் பாலி உள்ளிட்டோர் வெல்ஃபையர் காரை பயன்படுத்தி வருகின்றனற்.
இவர்கள் மட்டுமல்ல தெலுங்கு நடிகர் நாகர்ஜுனா, இந்தி நடிகர்கள் ஆமிர் கான், அஜய்தேவ்கன், நடிகை ஐஸ்வர்யா ராய் உள்ளிட்ட முன்னணி நட்சத்திரங்களும் இந்த ஆடம்பர எம்பிவி காரை பயன்படுத்தி வருகின்றனர். இந்த நிலையிலேயே மலையாள நடிகர் ராமு-வும் இந்த காரை பயன்படுத்தி வருகின்றார் என்பது கவனிக்கத்தகுந்தது.

எஞ்சினைப் பொருத்த வரை 2.5 லிட்டர் 4 சிலிண்டர் எஞ்சினே ஸ்ட்ராங் ஹைபிரிட் தொழில்நுட்பத்துடன் வழங்கப்பட்டு இருக்கின்றது. இது அதிகபட்சமாக 193 பிஎஸ் மற்றும் 240 என்எம் டார்க் ஆற்றலை உருவாக்கும் என்பது கவனிக்கத்தகுந்தது. டிரான்ஸ்மிஷனுக்காக இ-சிவிடி கியர்பாக்ஸே இதில் வழங்கப்பட்டு இருக்கின்றது. இந்த கார் ஒரு லிட்டர் பெட்ரோலுக்கே 16.35 கிமீ வரை மைலேஜை தரும் என்பது கவனிக்கத்தகுந்தது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: சமீப காலமாக மலையாள படங்களுக்கு இந்திய திரைப்பட ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்புக் கிடைத்துக் கொண்டிருக்கின்றது. அந்த அளவிற்கு கதை மற்றும் சாராம்சங்களைத் தாங்கியதாக இப்போது வெளியாகிக் கொண்டிருக்கும் மலையாள படங்கள் இருக்கின்றன. இந்த மாதிரியான சூழலிலேயே கார் காதலர்களின் கவனத்தை ஈர்க்கும் விதமாக பழம்பெரும் மலையாள பட நடிகர் ராமு வெல்ஃபையர் காரில் பயணிக்கும் வீடியோ வெளியாகி இருக்கின்றது.


Click it and Unblock the Notifications









