நடிச்சது 3 படம் தான்... நடிகரின் வாழ்க்கை மொத்தமா மாறிடுச்சு - லெக்ஸஸ் கார் எல்லாம் பணக்காரர்களுக்கு கூட கனவு!

விலையுயர்ந்த கார்கள் என்றாலே பல்வேறு விதமான பிராண்ட்களில் இருந்து பல்வேறு விதமான சொகுசு கார்கள் நம் நினைவிற்கு வரும். ஆனால், பிரம்மாண்டமான கார் என்றதும் முதலாவதாக நினைவிற்கு வருவது, லெக்ஸஸ் எல்.எம் (Lexus LM) என்கிற லக்சரி எம்பிவி (Luxury MPV) காரை ஆகும். இந்திய மார்க்கெட்டில் சில மாதங்களுக்கு முன்னர் தான் அறிமுகம் செய்யப்பட்ட இந்த விலையுயர்ந்த லெக்ஸஸ் காரை வாங்கிய மலையாள நடிகர் நிகழ்ச்சி ஒன்றிற்கு அந்த காரில் வருகை தந்து, சுற்றியிருந்தவர்களை மெர்சலாக்கி உள்ளார்.

யார் அந்த நடிகர் என்பதையும், அவர் வைத்துள்ள லெக்ஸஸ் எல்.எம் காரை பற்றியும் தான் இனி இந்த தொகுப்பில் பார்க்க போகிறோம். மலையாளத்தில் வெளியான 'கல்ப்' (Qalb) திரைப்படத்தை உங்களில் சிலர் பார்த்திருப்பீர்கள் என நினைக்கிறேன். காதல் திரைப்படமான இது கடந்த 2024ஆம் ஆண்டு ஜனவரியில் திரைக்கு வந்தது. இந்த திரைப்படத்தில் கதாநாயகனாக நடித்திருந்தவர், ரஞ்சித் சஜீவ் (Ranjith Sajeev).

malayalam actor spotted with lexus

இவர்தான் தற்போது விலையுயர்ந்த லெக்ஸஸ் எல்.எம் காரில் காட்சி தந்துள்ளார். கல்ப் திரைப்படம் மூலமாக தான் ரஞ்சித் சஜீவ் பிரபலமாகினார் என்றாலும், அதற்கு முன்னதாக 2022ஆம் ஆண்டில் இவரது நடிப்பில் 'மைக்' என்கிற திரைப்படம் திரைக்கு வந்தது. மேலும், கடந்த 2024ஆம் ஆண்டிலும் 'கோலம்' என்கிற திரைப்படம் ரஞ்சித் சஜீவ்வின் நடிப்பில் வெளிவந்து பெரிதும் கவனத்தை ஈர்த்தது.

இவ்வாறு தொடர் வெற்றி திரைப்படங்களின் மூலமாக கேரள சினிமா உலகில் கவனிக்கத்தக்க நடிகராக மாறியிருக்கும் ரஞ்சித் சஜீவ்வை கேரளாவின் திரிச்சூரில் உள்ள மகளிர் கல்லூரி ஒன்று சிறப்பு விருந்தினராக அழைத்துள்ளது. அதற்காக சம்பந்தப்பட்ட கல்லூரிக்கு வந்த நடிகர் ரஞ்சித் சஜீவ், தனது பிரம்மாண்டமான லெக்ஸஸ் எல்.எம் காரில் வந்திறங்கியது பார்ப்போரை கவர்ந்தது.

malayalam actor spotted with lexus

குறிப்பாக, மகளிர் கல்லூரி என்பதால் பெண் ரசிகைகள் நடிகர் ரஞ்சித் சஜீவ்வை ஒரேடியாக சூழந்துக் கொண்டனர். இதுதொடர்பாக இன்ஸ்டாகிராம் (Instagram)-இல் வெளியிடப்பட்டுள்ள வீடியோவில், காரின் பின் இருக்கை வரிசையில் இருந்து வெளியே வந்த ரஞ்சித் சஜீவ், பின்னர் கல்லூரியின் அலுவலகத்திற்குள் செல்லும் காட்சிகளை பார்க்க முடிகிறது.

லெக்ஸஸ் எல்.எம் காரில் மொத்தம் 3 வரிசைகளில் இருக்கைகள் வழங்கப்படுகின்றன. அதேநேரம், கஸ்டமர்கள் விருப்பப்பட்டால், வெறும் 2 வரிசைகளில் மட்டும் கூட இந்த காரை பெறலாம். 3-வரிசையில் மொத்தம் 7 இருக்கைகளும், அதுவே 2-வரிசையில் வெறும் 4 இருக்கைகளும் கிடைக்கும். ஆனால், 4 இருக்கைகள் உடன் வாங்கும்போதுதான் பின் வரிசை இருக்கைகள் மசாஜ் உள்ளிட்ட வசதிகள் உடன் வழங்கப்படுகின்றன.

malayalam actor spotted with lexus

நடிகர் ரஞ்சித் சஜீவ் வைத்திருப்பது லெக்ஸஸ் எல்.எம் காரின் 4-சீட்டர் வெர்சன் ஆகும். காரின் பின் வரிசை இருக்கையில் இருந்து அவர் வெளியே வருவதை வீடியோவில் பார்க்க முடிகிறது. 5 இருக்கைகள் வழங்கப்பட வேண்டிய இடத்தில் வெறும் 2 இருக்கைகள் மட்டுமே வழங்கப்படுவதால், கால்களை நீட்டி நன்கு சவுகரியமாக அமர்வதுடன், இருக்கையையும் நன்கு சாய்த்துக் கொள்ளலாம்.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: லெக்ஸஸ் எல்.எம் கார் என சொல்வதை காட்டிலும், சாலையில் மிதக்கும் சொகுசு கப்பல் என்றுதான் சொல்ல வேண்டும். இத்தகைய காரை வாங்குவது நம்மில் நிறைய பணக்காரர்களுக்கு கூட கனவாக உள்ளது. ஆனால், வெறும் 3 திரைப்படங்களில் நடித்துவிட்டு, வளர்ந்துவரும் நடிகராக உருவெடுத்திருக்கும் ரஞ்சித் சஜீவ் இத்தகைய காரை சொந்தமாக கொண்டுள்ளார்.

More from DriveSpark

Article Published On: Saturday, January 25, 2025, 8:00 [IST]
English summary
Malayalam actor ranjith sajeev spotted with his lexus lm luxury car
மேலும்... #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X