குடும்பத்துடன் நிற்கும் இந்த இளம் நடிகர் யாரென்று தெரிகிறதா? 1 படம் ஹிட் ஆனதும் கார் ஷோரூமுக்கு வந்தாச்சு...
நம்மில் நிறைய பேருக்கு சினிமாவில் நடிக்க வேண்டும் என்கிற ஆசை இருக்கும். ஆனால், காலத்தின் கட்டாயத்தால் அதனை நிஜமாக்குபவர்கள் என்று பார்த்தால் குறைவு தான். ஏனெனில், அதற்கு கடினமான முயற்சிகளை போட வேண்டும். அந்த முயற்சிகளுக்கு எல்லாம் பலனாக சில ஹிட் படங்களில் நடித்துவிட்டாலே பல லட்சங்களில் சம்பாதிக்கலாம். அவ்வாறு, இங்கு ஒரு இளம் நடிகர் ஒரு வெற்றி படத்தில் நடித்ததன் மூலமாக ஃபோக்ஸ்வேகன் காரை வாங்கி உள்ளார். யார் அந்த இளம் நடிகர் என்பதையும், அவர் வாங்கியுள்ள ஃபோக்ஸ்வேகன் காரை பற்றியும் இனி இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
சமீபத்தில் திரைக்கு வந்த சில மலையாள படங்கள் மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளன. மஞ்சுமேல் பாய்ஸ், ஆடுஜீவித்தம் என சொல்லிக் கொண்டே போகலாம். இந்த வரிசையில், பிரேமலு திரைப்படமும் கவனத்தை ஈர்த்தது. இந்த திரைப்படத்தில் அமல் தாவிஸ் என்கிற கதாபாத்திரத்தில் நடித்திருந்த நடிகர் சங்கீத் பிரதாப் தனது இயல்பான நடிப்பின் மூலம் கவனத்தை ஈர்த்தார்.

திரைப்படங்களில் நடிக்கும் வேலையை சமீபத்தில் தான் சங்கீத் பிரதாப் துவங்கினார். அதற்கு முன்பு வரையில், இவர் ஒரு திரைப்பட எடிட்டர் ஆவார். சிறந்த திரைப்பட தொகுப்பாளருக்கான கேரள அரசின் திரைப்பட விருதை பெற்றவர். இத்தகையவர் தான் தற்போது குடும்பத்துடன் கார் ஷோரூமுக்கு சென்று, ஃபோக்ஸ்வேகன் கார் ஒன்றை டெலிவிரி எடுத்துள்ளார்.
பிரேமலு திரைப்பட நடிகர் சங்கீத் பிரதாப் குடும்பத்துடன் வாங்கியிருப்பது ஃபோக்ஸ்வேகன் டைகுன் (Taigun) என்கிற எஸ்யூவி கார் ஆகும். கொச்சியில் உள்ள இவிஎம் டீலர்ஷிப் ஷோரூமில் சங்கீத் பிரதாப்பின் குடும்பத்தார் புத்தம் புதிய டைகுன் காரை டெலிவிரி பெற்றுள்ளனர். இந்தியாவில் ஃபோக்ஸ்வேகன் டைகுன் கார் மொத்தம் 9 விதமான கலர் ஆப்ஷன்களில் கிடைக்கிறது. அவற்றுள், அடர் கருப்பு நிறத்தில் இந்த காரை சங்கீத் பிரதாப் வாங்கியுள்ளார்.
அதேபோல், டைகுன் காரை 1.0 லிட்டர் பெட்ரோல் என்ஜின் உடன் இவரது குடும்பம் வாங்கியுள்ளது. இது டைகுனின் விலை குறைவான எண்ட்ரீ-லெவல் வேரியண்ட்களில் வழங்கப்படுகிறது. இது இல்லாமல், பவர்ஃபுல்லான 1.5 லிட்டர் பெட்ரோல் என்ஜின் ஆப்ஷனிலும் டைகுன் விற்பனை செய்யப்படுகிறது. ஃபோக்ஸ்வேகன் டைகுனின் விலை குறைவான வேரியண்ட்டாக இருந்தாலும், நடிகர் சந்தீப் பிரதாப்பின் புதிய டைகுன் காரின் விலை மட்டுமே ரூ.19 லட்சத்தில் இருந்து ரூ.19.50 லட்சம் வரையில் இருக்கலாம்.
இது வெறும் எக்ஸ்-ஷோரூம் விலை மட்டுமே, ஆன்-ரோடு விலை இன்னும் சில லட்சங்கள் அதிகமாக வரும். சந்தீப் பிரதாப் வாங்கியிருக்கும் டைகுனில் பொருத்தப்பட்டுள்ள 1.0 லிட்டர் 3-சிலிண்டர் டர்போசார்ஜ்டு பெட்ரோல் என்ஜின் ஆனது அதிகப்பட்சமாக 115 பிஎஸ் மற்றும் 178 என்.எம் டார்க் திறனை வெளிப்படுத்தக்கூடியதாக உள்ளது. டாப் வேரியண்ட் டைகுன் கார்களில் பொருத்தப்படும் 1.5 லிட்டர் பெட்ரோல் என்ஜின் ஆனது 150 பிஎஸ் மற்றும் 250 என்.எம் டார்க் திறன் வரையில் இயக்க ஆற்றலை வெளிப்படுத்தக்கூடியதாக உள்ளது.
கியர்பாக்ஸ் ஆப்ஷன்களாக இந்த காரில் 6-ஸ்பீடு மேனுவல் மற்றும் 7-ஸ்பீடு டிஎஸ்ஜி ஆட்டோமேட்டிக் வழங்கப்படுகிறது. கம்ஃபர்ட்லைன், ஹைலைன், டாப்லைன், ஜிடி மற்றும் ஜிடி+ என மொத்தம் 5 விதமான வேரியண்ட்களில் விற்பனை செய்யப்படும் ஃபோக்ஸ்வேகன் டைகுன் காரின் எக்ஸ்-ஷோரூம் விலைகள் தற்சமயம் ரூ.11.62 லட்சத்தில் இருந்து ரூ.19.46 லட்சம் வரையில் உள்ளன.
பாதுகாப்பு அம்சங்களாக, க்ரூஸ் கண்ட்ரோல், பார்க்கிங் சென்சார், எலக்ட்ரானிக் ஸ்டெபிளிட்டி கண்ட்ரோல், டயர் பிரஷர் மானிடர், இபிடி உடன் ஏபிஎஸ், 6 ஏர்பேக்குகள், ஐசோஃபிக்ஸ் குழந்தை இருக்கைக்கான கொக்கி, ஆட்டோ-டிம்மிங் IRVM, ஹில் ஹோல்ட் கண்ட்ரோல், ரியர்-வியூ கேமரா, மல்டி-கொல்லிஷன் பிரேக் உள்ளிட்டவை வழங்கப்படுகின்றன.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: ரூ.19 லட்சம் என்பது விலை அதிகமாக இருக்கலாம்; ஆனால் இந்தியாவில் விலை குறைவான ஃபோக்ஸ்வேகன் கார்களுள் டைகுனும் ஒன்றாகும். இந்த விலை குறைவான ஃபோக்ஸ்வேகன் காரை தான் நடிகர் சங்கீத் பிரதாப் வாங்கியுள்ளார். அதிலிலும், டைகுன் காரின் விலை குறைவான வேரியண்ட்டை சங்கீத் பிரதாப்பின் குடும்பம் தேர்வு செய்துள்ளது.


Click it and Unblock the Notifications








