மனநலம் பாதித்த மகனுடன் பி.எம்.டபிள்யூ காரை டெலிவிரி எடுத்த பிரபல நடிகர்!! மொத்த குடும்பமும் செம்ம ஹாப்பி!

பிரபல மலையாள நடிகர்களுள் ஒருவரான சித்திக் (Siddique) புதியதாக விலையுயர்ந்த பிஎம்டபிள்யூ கார் ஒன்றை வாங்கி உள்ளார். பிஎம்டபிள்யூ பிராண்டில் நடிகர் சித்திக் எந்த காரை வாங்கி உள்ளார்? அவரது புதிய பிஎம்டபிள்யூ காரின் சிறப்பம்சங்கள் என்னென்ன? என்பதை பற்றி இனி இந்த செய்தியில் முழுமையாக பார்க்கலாம்.

மலையாள திரிஷ்யம் படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களுக்கு பரீட்சையமானவர் நடிகர் சித்திக். 350க்கும் அதிகமான மலையாள படங்களில் நடித்து அனுபவமிக்க நடிகராக விளங்கும் சித்திக் சில திரைப்படங்களை தயாரித்தும், ஒரு திரைப்படத்திற்கு இசையமைத்தும் கூட உள்ளார். அதுமட்டுமின்றி, தமிழ் உள்ளிட்ட பிறமொழி திரைப்படங்களிலும் சிறு சிறு கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார்.

actor siddique buys bmw 6 series

இத்தகைய பிரபலமான நடிகராக விளங்கும் சித்திக் ஆட்டோமொபைல் வாகனங்கள் மீதும் ஆர்வம் கொண்டவர் ஆவார். இவரிடம் நீண்ட காலமாக கருப்பு நிறத்தில் அம்பாசிடர் கார் ஒன்று உள்ளது. மலையாள திரையுலகில் சிலர் இந்த கருப்பு நிற அம்பாசிடர் காரை வைத்து தான் சித்திக்கை அடையாளம் காண்கிறார். இந்த நிலையில், நடிகர் சித்திக் புதியதாக பிஎம்டபிள்யூ 6 சீரிஸ் காரை வாங்கியுள்ளார்.

இதனை பிஎம்டபிள்யூவின் அங்கீகரிக்கப்பட்ட டீலர்ஷிப் மையமான பிஎம்டபிள்யூ இவிஎம் ஆட்டோகிராஃப்ட் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தின் மூலமாக உறுதிப்படுத்தியுள்ளது. இதுகுறித்து இன்ஸ்டாகிராமில் வெளியிடப்பட்டுள்ள வீடியோவின் மூலம், அடர் நீல நிறத்தில் பிஎம்டபிள்யூ 6 சீரிஸ் காரை நடிகர் சித்திக் வாங்கியிருப்பதை அறிய முடிகிறது. சித்திக் வாங்கியிருப்பது பிஎம்டபிள்யூ 6 சீரிஸ் காரின் கிரான் டூரிஸ்மோ வேரியண்ட் ஆகும்.

இந்த ஒரேயொரு வேரியண்ட்டில் மட்டுமே தற்சமயம் பிஎம்டபிள்யூ 6 சீரிஸ் கார் இந்திய சந்தையில் விற்பனை செய்யப்படுகிறது. காரை நடிகர் சித்திக்கின் வீட்டிற்கு வந்து டெலிவிரி செய்துள்ள இவிஎம் டீலர்ஷிப் நிர்வாகம், காரின் சாவி மற்றும் மலர் கொத்தை சித்திக்கின் குடும்பத்தாரிடம் வழங்கி அவர்களை சந்தோஷ கடலில் மூழ்கடித்து உள்ளது. கேரளாவில், பிஎம்டபிள்யூ மட்டுமின்றி பெரும்பாலான கார் பிராண்ட்களின் டீலர்ஷிப் மையங்களை இவிஎம் தான் கவனித்து வருவது உங்களில் சிலருக்கு தெரிந்திருக்கலாம்.

பிஎம்டபிள்யூ 6 சீரிஸ் ஆனது 5 மீட்டருக்கும் அதிகமான நீளம் கொண்ட லக்சரி செடான் கார் ஆகும். அதாவது, கார் நன்கு தாழ்வாக, படகு போன்று இருக்கும். தோற்றத்தில் மட்டுமின்றி, 6 சீரிஸ் செடான் காரில் பயணமும் படகில் செல்வது போன்றே இருக்கும். தற்சமயம் பிஎம்டபிள்யூ 6 சீரிஸ் காரின் எக்ஸ்-ஷோரூம் விலை ரூ.72.50 லட்சம் என்ற அளவில் உள்ளது.

actor siddique buys bmw 6 series

கார்பன் பிளாக், டான்ஸானைட் ப்ளூ மெட்டாலிக், ஸ்கைஸ்க்ராபர் மெட்டாலிக் மற்றும் மினரல் வெள்ளை என்கிற நான்கு நிறத்தேர்வுகளில் 6 சீரிஸ் காரை வாங்கலாம். இதில் டான்ஸானைட் ப்ளூ மெட்டாலிக் நிறத்தில் இந்த காரை நடிகர் சித்திக் வாங்கியுள்ளார். 2-லிட்டர் 4-சிலிண்டர் பெட்ரோல் என்ஜின் அல்லது 3-லிட்டர் இன்-லைன் 6-சிலிண்டர் டீசல் என்ஜின் உடன் இந்த காரை வாங்கலாம்.

இதில், பெட்ரோல் என்ஜின் உடன் பிஎம்டபிள்யூ 6 சீரிஸ் காரை நடிகர் சித்திக் வாங்கியுள்ளார். டீசல் என்ஜின் உடன் காரின் விலை ரூ.2 லட்சம் வரையில் அதிகமாக வரும். பெட்ரோல் மற்றும் டீசல் வேரியண்ட்களில் 8-ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் கிடைக்கும். காரின் உட்பக்க டேஸ்போர்டில் முக்கிய சிறப்பம்சமாக டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமெண்ட் க்ளஸ்ட்டருக்கு ஒன்று, இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டத்திற்கு ஒன்று என 12.5-இன்ச்சில் இரு திரைகள் வழங்கப்படுகின்றன.

டிரைவ்ஸ்பார்க்கின் கருத்து: பொதுவாகவே, கேரள திரைத்துறையினர் ஆட்டோமொபைல் வாகனங்கள் மீது அதிக ஈடுப்பாடு கொண்டவர்கள் என்பதை பலமுறை பார்த்துள்ளோம். அத்தகையவர்களுள் ஒருவரான நடிகர் சித்திக் புதியதாக பிஎம்டபிள்யூ கார் ஒன்றை வாங்கியிருப்பது ஆச்சரியப்பட வேண்டிய விஷயம் அல்ல. ஆனால், காரை டெலிவிரி செய்ததை வீடியோவாக பதிவு செய்து தனது டீலர்ஷிப்பின் விளம்பரத்திற்கு இவிஎம் பயன்படுத்தி கொண்டிருப்பது சற்று ஆச்சரியத்தை ஏற்படுத்துகிறது.

More from DriveSpark

Article Published On: Friday, July 21, 2023, 23:59 [IST]
English summary
Malayalam actor siddique buys bmw 6 series luxury sedan
மேலும்... #ஆஃப் பீட் #off beat
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+