Actor Tovino Thomas வாங்கியுள்ள புதிய நகரும் அரண்மனை - எவ்வளவு செலவாச்சோ... படங்கள் இணையத்தில் வைரல்!!

மலையாள திரையுலகின் முன்னணி நடிகர்களுள் ஒருவரான டோவினா தாமஸ் புதியதாக கேரவன் (Caravan) வாகனத்தை வாங்கியுள்ளார். டோவினோ தாமஸ் எந்த பிராண்டில் கேரவனை வாங்கியுள்ளார்? இந்த கேரவனில் இடம்பெற்றுள்ள அம்சங்கள் என்னென்ன என்பது பற்றிய முழுமையான விபரங்களை இனி பார்க்கலாம்.

மின்னல் முரளி படத்தின் மூலம் இந்தியா முழுவதும் பிரபலமாகிய மலையாள நடிகர் டோவினோ தாமஸ் ஆவார். தமிழிலும் மாரி 2 உள்ளிட்ட சில படங்களில் நடித்துள்ளார். இந்தியாவில் முதல்முறையாக ரேஞ்ச் ரோவர் ஸ்போர்ட் எஸ்யூவி காரை வாங்கியவரும் டோவினோ தாமஸ் தான் கூறப்படுகிறது. ரேஞ்ச் ரோவர் ஸ்போர்ட் காரை இவர் வாங்கியது அந்த சமயத்தில் பல செய்திகளில் தலைப்பாக மாறியது.

actor tovino thomas buys new caravan

இவ்வாறு யாரும் வாங்காத காரை தான் வாங்க வேண்டும் என எண்ணும் அளவிற்கு கார் மோகம் கொண்டவராக விளங்கும் டோவினோ தாமஸ், தற்போது புதியதாக கேரவன் பேருந்து ஒன்றை வாங்கியுள்ளார். கடந்த 2022ஆம் ஆண்டில் இதேபோன்றதான ஒரு கேரவனை முன்னணி மலையாள நடிகர் மோகன்லாலும் வாங்கி இருந்தார். மோகன்லாலுக்கு கேரவனை வடிவமைத்து கொடுத்த ஓஜஸ் ஆட்டோமொபைல் நிறுவனம் தான் டோவினோ தாமஸின் கேரவனையும் வடிவமைத்து கொடுத்துள்ளது.

கேரளாவில் இவ்வாறு பேருந்தை கேரவனாக மாற்றி கொடுப்பதில் ஓஜஸ் நிறுவனம் பிரபலமாக விளங்குகிறது. தனது புதிய கேரவனின் படத்துடன், கேரவனை வடிவமைத்து கொடுத்த டிசைனர் பிஜூ மார்கோஸ் மற்றும் அவரது குடும்பத்தினருடன் இருக்கும் படங்களையும் டோவினோ தாமஸ் தனது சமூக வலைத்தள பக்கங்களில் பதிவிட்டுள்ளார். பிரபலமான டெய்ம்லர் 1017 (Daimler 1017) பேருந்தின் சேசிஸில் இந்த கேரவன் உருவாக்கப்பட்டுள்ளது.

actor tovino thomas buys new caravan

நடிகர் டோவினோவின் கேரவனுக்கு ஓஜஸ் நிறுவனம் வழங்கியுள்ள டிசைன் டெம்ப்ளேட்டிற்கு ஸ்டேட்ஸ்மேன் என்பது பெயர் ஆகும். இருப்பினும், ஸ்டேட்ஸ்மேனில் சில பல மாற்றங்கள் டோவினோ தாமஸின் விருப்பத்திற்கு ஏற்ப செய்து கொடுக்கப்பட்டுள்ளன. ஒரு படுக்கையறை, ஒரு மேக்கப் அறை, ஒரு கழிப்பறை, சுழற்றக்கூடிய கேப்டன் இருக்கைகள், 2 சாய்வு இருக்கைகள் மற்றும் ரோல்ஸ்-ராய்ஸ் கார்களின் கூரைகளை போன்ற ஸ்டார்லைட் மூட் லைட்டிங் என ஓர் நகரும் அரண்மனையாக இந்த கேரவன் உருவாக்கப்பட்டுள்ளது.

இவற்றுடன், 55-இன்ச் தொலைக்காட்சி மற்றும் 2000 வாட்ஸ் சோனி ஹோம் தியேட்டர் மியூசிக் சிஸ்டத்தையும் ஓய்வுநேர பொழுதுப்போக்கிற்காக ஓஜஸ் நிறுவனம் அமைத்து கொடுத்துள்ளது. ஜன்னல் கண்ணாடிக்கான திரைச்சீலைகளை எலக்ட்ரிக் மூலமாக மூடியும், திறந்தும் கொள்ளலாம். பேருந்து முழுவதுமாக கருப்பு நிறத்தில் இருந்தாலும், கேரவன் பளிச்சிடும் வெள்ளை நிறத்தில் பெயிண்ட் செய்யப்பட்டுள்ளது.

actor tovino thomas buys new caravan

இருக்கைகள் பழுப்பு நிற லெதரால் அலங்கரிக்கப்பட்டுள்ளன. மற்றப்படி இந்த வேலைப்பாடுகளுக்கு ஆன செலவு குறித்த விபரங்கள் கிடைக்க பெறவில்லை. நடிகர் டோவினோ தாமஸின் இந்த கேரவன் வாகனத்திற்கு ஆர்டிஓ கே.எல் 45 டபிள்யூ 7007 என்ற பதிவெண்ணை வழங்கியுள்ளது. இந்த கேரவன் பேருந்தில் 3907சிசி, 4-சிலிண்டர் CRDi டீசல் என்ஜின் உள்ளது. அதிகப்பட்சமாக 170 பிஎச்பி மற்றும் 520 என்எம் டார்க் திறன் வரையிலான இயக்க ஆற்றலை வழங்கக்கூடிய இந்த டீசல் என்ஜின் உடன் 6-ஸ்பீடு கியர்பாக்ஸ் இணைக்கப்பட்டுள்ளது.

டிரைவ்ஸ்பார்க்கின் கருத்து: சினிமாவில் நடிக்கும் நடிகர், நடிகையர்களுக்கு படத்தை தயாரிக்கும் நிறுவனத்தின் சார்பில் கேரவன் வழங்கப்படுவது வழக்கம். இருப்பினும் நடிகர் டோவினோ தாமஸ் தனியாக கேரவன் ஒன்றை வாங்கியிருப்பது, அவரது சொந்த பயன்பாடுகளுக்காக என நினைக்கிறோம். அன்றாட பயன்பாட்டிற்காக ரூ.1.71 கோடியில் ரேஞ்ச் ரோவர் காரை வாங்கியவருக்கு இவ்வாறான கேரவனை வாங்குவது எல்லாம் பெரிய விஷயமாக இருக்காது.

More from DriveSpark

Article Published On: Friday, April 21, 2023, 15:07 [IST]
English summary
Malayalam actor tovino thomas buys new luxury caravan
மேலும்... #ஆஃப் பீட் #off beat
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X