பென்ஸ் கார் கையில இருக்கும்போதே வேற ஒரு புதிய காரை வாங்கிய நடிகர்.. உத்து பாத்தும் இவரை யாருனு தெரியலையா?

இந்தியாவில் மின்சார கார்களுக்கு பிரபலங்கள் மத்தியிலும் நல்ல வரவேற்புக் கிடைக்கத் தொடங்கி இருக்கின்றது. இதை உறுதிப்படுத்தும் விதமாக பிரபலங்கள் பலர் மின்சார வாகன பயன்பாட்டிற்கு மாறி இருக்கின்றனர். நம்முடைய தமிழக வெற்றி கழக தலைவர் விஜய் இடத்தில்கூட சில மின்சார கார்கள் பயன்பாட்டில் இருப்பதாகக் கூறப்படுகின்றது. குறிப்பாக, பிஎம்டபிள்யூ ஐ7 (BMW i7) சொகுசு வகை எலெக்ட்ரிக் காரும் அவரிடத்தில் பயன்பாட்டில் இருக்கின்றது. இவரை போலவே இன்னும் பல பிரபலங்கள் மின்சார வாகன பயன்பாட்டிற்கு மாறத் தொடங்கி இருக்கின்றனர்.

அந்தவகையில் ஓர் மலையாள திரைப்பட நடிகர் தன்னிடத்தில் ஏற்கனவே பென்ஸ் போன்ற மிக மிக விலை உயர்ந்த சொகுசு கார்கள் பயன்பாட்டில் இருக்கின்ற சூழலில் புதிதாக அவர் ஓர் எலெக்ட்ரிக் காரை வாங்கி இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. பிரேமம் போன்ற பல முன்னணி ஹிட் படங்களில் நடித்த வினய் ஃபோர்ட், இவரே தற்போது புதிதாக எலெக்ட்ரிக் காரை வாங்கி இருக்கின்றார்.

Actor vinay forrt buys byd atto 3 suv

அவர் வாங்கி இருப்பது பிஒய்டி நிறுவனத்தின் அட்டோ 3 (BYD ATTO 3) கார் மாடல் ஆகும். இது ஓர் மின்சாரத்தில் இயங்கும் எஸ்யூவி (SUV) ரக கார் மாடல் என்பது குறிப்பிடத்தகுந்தது. இந்த காருக்கு சொகுசு மற்றும் பிரீமியம் கார் விரும்பிகள் மத்தியில் நல்ல வரவேற்புக் கிடைத்துக் கொண்டிருப்பதாக தயாரிப்பு நிறுவனமான பிஒய்டி முன்னதாக அறிவித்திருந்தது.

இந்த தகவலை உறுதிப்படுத்தும் வகையிலேயே வினய் ஃபோர்ட்-இன் இந்த கார் கொள்முதல் சம்பவம் அரங்கேறி இருக்கின்றது. வினய் போர்ட்-டை மட்டுமல்ல அவரை போல இன்னும் பலரை இந்த கார் மாடல் கவர்ந்து வருகின்றது. இதற்கு அக்காரின் தனித்துவனமான லுக் மற்றும் சிறப்பம்சங்களே மிக முக்கியமான காரணமாக உள்ளது.

இதுதவிர, ஆடம்பர கார்களுக்கு இணையான சொகுசான டிராவல் அனுபவத்தை வழங்கக் கூடியதாகவும் இந்த கார் மாடல் இருக்கின்றது. முன்னதாக ஒற்றை தேர்வில் மட்டுமே விற்பனைக்கு கிடைத்து வந்த இந்த கார் மாடல், தற்போது மூன்று விதமான தேர்வுகளில் விற்பனைக்குக் கிடைத்துக் கொண்டிருக்கின்றது.

டைனமிக் (Dynamic), பிரீமியம் (Premium) மற்றும் சுப்பீரியர் (Superior) ஆகியவை அந்த தேர்வுகள் ஆகும். இதில் டைனமிக்கே மிகவும் விலை குறைவான தேர்வாகக் காட்சியளிக்கின்றது. இதற்கு ரூ. 24.99 லட்சம் விலையை நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இதற்கு அடுத்தபடியாக பிரீமியம் வேரியண்ட் இருக்கின்றது.

அதன் விலை ரூ. 29.85 லட்சம் ஆகும். இருப்பதிலேயே காஸ்ட்லியான தேர்வாக சுப்பீரியர் உள்ளது. இதன் விலை ரூ. 33.99 லட்சம் ஆகும். அனைத்தும் எக்ஸ்-ஷோரூம் விலைகள் மட்டுமே என்பது கவனிக்கத்தகுந்தது. புதிய தேர்வுகளை விற்பனைக்கு அறிமுகப்படுத்தி விலை குறைவான காராக அட்டோ3-யை பிஒய்டி மாற்றியது குறிப்பிடத்தகுந்தது.

முன்னதாக ரூ. 33.99 லட்சம் செலுத்தினால் மட்டுமே இந்த காரை வாங்க முடியும் என்கிற சூழல் இருந்தது. விலை குறைவான தேர்வில் சில முக்கிய அம்சங்கள் இடம் பெற்றிருக்காது என்பது கவனிக்கத்தகுந்தது. அந்த வகையில் அடாஸ் (ADAS) அசத்தை அதில் பார்க்க முடியவில்லை.

இதேபோல், 80 kW டிசி சார்ஜிங் போர்ட், பவர்டு டெயில்கேட், அடாப்டீவ் முன் பக்க மின்விளக்கு, பன்முக வண்ணங்களில் ஒளிரும் திறன் கொண்ட ஆம்பியன்ட் லைட் மற்றும் 8 ஸ்பீக்கர்கள் கொண்ட சவுண்டு சிஸ்டம் ஆகியவையும் டைனமிக் வேரியண்டில் இருந்து அகற்றப்பட்டுள்ளன.

அதேவேளையில், நீக்கப்பட்ட இந்த அம்சங்கள் அனைத்தையும் உயர்நிலை வேரியண்டில் பெற்றுக் கொள்ள முடியும். 12.8 அங்குல இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், பனோரமிக் சன்ரூஃப், 6 வழிகளில் அட்ஜெஸ்ட் செய்யும் வசதிக் கொண்ட பவர்டு டிரைவர் இருக்கை, வயர்லெஸ் செல்போன் சார்ஜர், 360 டிகிரி பார்வை திறன் கேமிரா, சூடாகும் திறன் மற்றும் எலெக்ட்ரிக் வசதிக் கொண்ட ஓஆர்விஎம்-கள் உள்ளிட்டவற்றை அட்டோ 3 எலெக்ட்ரிக் காரில் பெற்றுக் கொள்ள முடியும்.

இதேபோல், பாதுகாப்பு அம்சங்களும் மிக தாராளமாக இந்த காரில் வழங்கப்பட்டு இருக்கின்றன. அந்தவகையில், 7 ஏர் பேக்குகள், இபிடி உடன் கூடிய ஏபிஎஸ், எலெக்ட்ரானிக் ஸ்டெபிளிட்டி கன்ட்ரோல், டயர் பிரஷ்ஷர் மானிட்டரிங் சிஸ்டம், சிறுவர்களுக்கான ஐசோஃபிக்ஸ் இருக்கை மவுண்டு உள்ளிட்டவையே அட்டோ 3 எலெக்ட்ரிக் காரில் வழங்கப்பட்டு இருக்கின்றன.

இதுமாதிரியான அம்சங்களின் வாயிலாக இந்திய பணக்காரர்களையும் தன் வசம் ஈர்த்துக் கொண்டிருக்கின்றது பிஒய்டி அட்டோ 3 எஸ்யூவி எலெக்ட்ரிக் கார். இந்த கார் மாடலில் இரண்டு விதமான பேட்டரி பேக் தேர்வுகள் வழங்கப்படுகின்றன. 49.92 kWh பேட்டரி பேக் ஆப்ஷனும், 60.48 kWh பேட்டரி பேக் ஆப்ஷனே இந்த காரில் வழங்கப்படுகின்றது. டைனமிக் தேர்விலேயே 49.92 kWh பேட்டரி பேக் ஆப்ஷன் வழங்கப்படுகின்றது.

இது ஓர் முழு சார்ஜில் 468 ரேஞ்ஜ் தரும். பிரீமியம் மற்றும் சூப்பீரியர் தேர்விலேயே 60.48 kWh பேட்டரி பேக் ஆப்ஷன் வழங்கப்படுகின்றது. இது ஓர் முழு சார்ஜில் 521 கிமீட்டர் ரேஞ்ஜ் தரும். இந்த மூன்று வேரியண்டுகளும் மின்சார மோட்டார் விஷயத்தில் ஒரே மாதிரியாக இருக்கும். 204 பிஎஸ் மற்றும் 310 என்எம் டார்க் ஆற்றலை வெளியேற்றும் வசதிக் கொண்ட எலெக்ட்ரிக் மோட்டாரே மூன்றிலும் பயன்படுத்தப்பட்டு இருக்கின்றது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் மின்சார கார்களுக்கு மிக சிறப்பான வரவேற்புக் கிடைத்துக் கொண்டிருக்கின்றது. இதனால்தான் பிஒய்டி போன்ற பன்னாட்டு நிறுவனங்கள் இந்தியாவில் மிகுந்த ஆர்வத்துடன் எலெக்ட்ரிக் கார்களை விற்பனைக்குக் களமிறக்கிக் கொண்டிருக்கின்றன. வரும் நாட்களில் இன்னும் சில புதுமுக நிறுவனங்களும் தங்களின் எலெக்ட்ரிக் கார்களை நாட்டில் விற்பனைக்குக் களமிறக்க திட்டமிட்டு இருக்கின்றன என்பது கவனிக்கத்தகுந்தது.

More from DriveSpark

Article Published On: Monday, October 7, 2024, 16:53 [IST]
English summary
Malayalam actor vinay forrt buys byd atto 3 suv electric car
மேலும்... #celebrity cars #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+