விலையுயர்ந்த மாருதி காரை வாங்கியிருக்கும் இந்த நடிகர் யாரென்று தெரிகிறதா? மனைவி உடன் ஷோரூமில்...

மாருதி சுஸுகி (Maruti Suzuki), இந்தியாவின் முன்னணி கார் உற்பத்தி நிறுவனம் என்பதை நான் கூற வேண்டியது இல்லை. நாடு முழுவதும் இந்த நிறுவனத்திற்கு கஸ்டமர்கள் உள்ளனர். அந்த வரிசையில், பிரபல மலையாள நடிகர் (Malayala Actor) ஒருவர் மாருதி சுஸுகியின் கிராண்ட் விட்டாரா (Grand Vitara) காரை வாங்கி உள்ளார். மனைவி உடன் அவர் காரை ஷோரூம் (Showroom)-இல் இருந்து டெலிவிரி பெறும்போது எடுக்கப்பட்ட படம் இணையத்தில் வைரலாகி வருகிறது. யார் இந்த மலையாள நடிகர் என்பதையும், அவர் வாங்கியுள்ள கிராண்ட் விட்டாரா காரை பற்றியும் இனி இந்த தொகுப்பில் பார்க்கலாம், வாங்க.

கேரள மக்களுக்கு பொதுவாகவே ஆட்டோமொபைல் வாகனங்கள் என்றாலே, தனி ஆர்வம் உண்டு என்பதை பல நிகழ்வுகளில் பார்த்துள்ளோம். இதனாலேயே அவர்கள் அவ்வப்போது புது, புது வாகனங்களை வாங்குவதை பார்க்க முடிகிறது. அப்படியென்றால், கேரள சினிமா துறையை சேர்ந்தவர்களை பற்றி சொல்லவே வேண்டாம்.

vinod kovoor buys grand vitara

அந்த வகையில் தற்போது புதியதாக கார் வாங்கியிருக்கும் மலையாள நடிகர், வினோத் கோவூர் (Vinod Kovoor) ஆவார். கேரளாவின் கன்னூரில் பிறந்தவரான 55 வயதான வினோத் கோவூர், 2003ஆம் ஆண்டிலேயே சினிமாவில் நடிக்க ஆரம்பித்துவிட்டாலும் இவரது முதல் திரைப்படத்திற்கு பின் பெரிய இடைவெளி விழுந்தது. அதாவது, வினோத் கோவூரின் நடிப்பில் 2வது திரைப்படம் 2011ஆம் ஆண்டில்தான் திரைக்கு வந்தது.

அப்போதும் கூட சினிமா துறையில் வினோத் கோவூர் பெரியதாக கண்டுக்கொள்ளப்படவில்லை என்றுதான் சொல்ல வேண்டும். அதன்பின், 2012ஆம் ஆண்டில் இருந்து தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் நடிக்க ஆரம்பித்தவர் மக்கள் மத்தியில் ஓரளவுக்கு கவனத்தை பெற ஆரம்பித்தார். அப்புறம் என்ன... திரைப்பட வாய்ப்புகள் வினோத் கோவூரை தேடிவர ஆரம்பித்தன. இருப்பினும், இப்போதுவரையில் மலையாள சினிமாவை தாண்டி இவர் வெளியேவரவில்லை.

கடந்த 2024ஆம் ஆண்டில் மட்டும் இரு திரைப்படங்களில் வினோத் கோவூர் நடித்திருந்தார். மலையாள திரைப்படங்களில் காமெடி கதாபாத்திரங்களில் நடித்துக் கொண்டிந்தவர், அவ்வப்போது மாணவ, மாணவிகளுக்கு தன்னம்பிக்கை அளிக்கக்கூடிய தனது மேடை பேச்சுகளையும் வழங்கி வருகிறார். இந்த நிலையில், நடிகர் வினோத் கோவூர் புதியதாக மாருதி சுஸுகி கிராண்ட் விட்டாரா காரை வாங்கி உள்ளார்.

மனைவி உடன் ஷோரூமுக்கு சென்று, பிராண்ட்-நியூ கிராண்ட் விட்டாரா காரை டெலிவிரி பெறும்போது எடுக்கப்பட்ட போட்டோவை வினோத் கோவூர் தனது இன்ஸ்டாகிராம் (Instagram) பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இதுகுறித்த அவரது இன்ஸ்டா பதிவில், "குடும்பத்தில் புதிய விருந்தாளி வந்துள்ளார்" என கேப்ஷன் கொடுக்கப்பட்டு உள்ளது. கிராண்ட் விட்டாரா காரை பற்றி சொல்ல வேண்டுமென்றால், இந்த காரை 2022ஆம் ஆண்டில் மாருதி சுஸுகி நிறுவனம் அறிமுகம் செய்தது.

vinod kovoor buys grand vitara

தற்போதைக்கு விலையுயர்ந்த மாருதி சுஸுகி காராக விளங்கும் கிராண்ட் விட்டாரா ஆனது அதேநேரம் அதிக மைலேஜ் வழங்கும் எஸ்யூவி (SUV) ரக காராகவும் விளங்குகிறது. அதிக மைலேஜுக்கு காரணம், இந்த காரில் 1.5 லிட்டர் பெட்ரோல் என்ஜின் உடன் ஸ்ட்ராங் ஹைப்ரீட் சிஸ்டம் இணைக்கப்படுகிறது. இந்த ஹைப்ரீட் சிஸ்டத்தில் 177.6 வாட்ஸ் லித்தியம்-இரும்பு பேட்டரி பொருத்தப்படுகிறது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: மாருதி கார்கள் என்றாலே விலை குறைவானவை என்கிற பார்வை நம் மக்களிடத்தில் உள்ளது. ஆனால், அத்தகைய மாருதி கார்களிலேயே விலையுயர்ந்ததாக விளங்கும் கிராண்ட் விட்டாராவை தான் மலையாள நடிகர் வினோத் கோவூர் வாங்கி உள்ளார். அடர் கருப்பு நிறத்திலான இவரது கிராண்ட் விட்டாரா எஸ்யூவி கார் பார்ப்பதற்கே அருமையாக உள்ளது.

More from DriveSpark

Article Published On: Sunday, February 2, 2025, 11:13 [IST]
English summary
Malayalam actor vinod kovoor buys new maruti suzuki grand vitara
மேலும்... #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+