காரை வாங்கினவங்க மட்டுமல்ல கொடுத்தவங்களும் தேவதை போல இருக்காங்க.. டான்ஸுக்காக பலரின் மனதை வென்றவர்!
சமூக வலைதளங்களில் செல்வாக்கு மிக்கவர்கள் பெரும் பணக்காரர்களுக்கு இணையான ஆடம்பர கார்களை வாங்கும் நிகழ்வு இந்தியாவில் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் இருக்கின்றது. இதை உறுதிப்படுத்தும் விதமாக மலையாள சமூக வலைதளங்களில் பெருத்த செல்வாக்கைக் கொண்டவராக வலம் வரும் சைத்தானியா பிரகாஷ் ஓர் விலை உயர்ந்த சொகுசு காரை வாங்கி இருக்கின்றார். இவருக்கு இன்ஸ்டா போன்ற சமூக வலைதளங்களில் ஃபேன்கள் மிக அதிகம். இதனாலேயே அவர் இப்போது நடிகையாகவும் மாறி இருக்கின்றார்.
இந்த நிலையிலேயே சமூகத்தில் தனக்கு நிலவும் அந்தஸ்தை மேலும் அதிகப்படுத்திக் கொள்ளும் விதமாக அவர் பிஎம்டபிள்யூ நிறுவனத்தின் சொகுசு கார் மாடல் ஒன்றை வாங்கி இருக்கின்றார். இந்த காரை அவர் டெலிவரி பெறும் வீடியோவே தற்போது இணையத்தில் வெளியாகி உள்ளது. வெள்ளை நிற உடையில் தேவதைபோல் வந்து அவர் இந்த காரை டெலிவரி பெற்றிருக்கின்றார்.

அவர் மட்டுமல்ல அவருக்கு காரை டெலிவரி கொடுத்த பிஎம்டபிள்யூ ஷோரூம் நிர்வாக ஊழியரும் தேவதைப் போல் வந்து காருக்கான சாவியை நடிகையின் கையில் வழங்கினார். பிஎம்டபிள்யூ எக்ஸ்1 (BMW X1) கார் மாடலையே சைத்தானியா பிரகாஷ் வாங்கி இருக்கின்றார். சைத்தானியாவிற்கு வயது வெறும் 23 மட்டுமே ஆகின்றது.
இந்த குறைந்த வயதிலேயே அவர் மிகப் பெரிய வளர்ச்சியை எட்டி இருக்கின்றார். பாரம்பரிய நடனக் கலைக்காகவே இவர் முதலில் அறியப்பட்டார். ஸ்டார் மேஜிக் ரியாலிட்டி ஷோ, இதுவே அவர் பிரபலமடைய முக்கிய காரணமாக இருக்கின்றது. இந்த புகழ்களுக்கு வலுசேர்க்கும் விதமாக அவருக்கு சில நடன விருதுகளும் கிடைத்திருக்கின்றன.

இன்ஸ்டாகிராமில் மட்டும் இவருக்கு 1.5 மில்லியன் ஃபாலோவர்கள் இருக்கின்றனர். இவர்களில் பலர் தற்போது சைத்தானியா சொகுசு கார் வாங்கி இருப்பது வாழ்த்துக்களை தெரிவித்த வண்ணம் இருக்கின்றனர். இந்தியாவில் விற்பனைக்குக் கிடைக்கும் சற்றே விலை குறைவான பிஎம்டபிள்யூ கார் மாடலே இந்த எக்ஸ்1 ஆகும்.
இது நாட்டில் இரண்டு விதமான வேரியண்டுகளில் விற்பனைக்குக் கிடைக்கின்றது. எக்ஸ்-லைன் மற்றும் எம்-ஸ்போர்ட் ஆகியவையே அவை ஆகும். இதன் ஆரம்ப விலையே ரூ. 46 லட்சத்திற்கும் அதிகம் ஆகும். இது வெறும் எக்ஸ்-ஷோரூம் விலை மட்டுமே ஆகும். எஞ்சினைப் பொருத்த வரை பெட்ரோல் மற்றும் டீசல் என இரண்டு ஆப்ஷன்களும் இந்த காரில் வழங்கப்படுகின்றன.

136 எச்பி மற்றும் 230 என்எம் டார்க்கை வெளியேற்றும் திறன் கொண்ட 1.5 லிட்டர், 3 சிலிண்டர் பெட்ரோல் மோட்டார் மற்றும் 150 எச்பி பவர் மற்றும் 360 என்எம் டார்க்கை வெளியேற்றும் திறன் கொண்ட 2.0 லிட்டர் 4 சிலிண்டர் டீசல் மோட்டார் ஆகிய ஆப்ஷன்களே இந்த காரில் வழங்கப்படுகின்றன.
இரு மோட்டாரிலும் 7 ஸ்பீடு டூயல் கிளட் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் ஆப்ஷன் வழங்கப்படுகின்றது. இதில் பெட்ரோல் ஆப்ஷன் லிட்டர் ஒன்றிற்கு 15.03 கிமீ மைலேஜையும், டீசல் ஆப்ஷன் லிட்டர் ஒன்றிற்கு 19.23 கிமீ மைலேஜையும் வழங்கும் என்பது கவனிக்கத்தகுந்தது. சிறப்பு அம்சங்களைப் பொருத்த வரையில் 10.25 அங்குல டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்டர், 10.70 அங்குல இன்ஃபோடெயின்மென்ட் திரை, அடாஸ் மற்றும் கார் இணைப்பு உள்ளிட்டவற்றை இந்த காரில் பிஎம்டபிள்யூ வழங்கி இருக்கின்றது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: மேலே பார்த்தது போன்ற அதிக சிறப்பு வசதிகளைத் தாங்கிய காரையே மலையாள திரை உலகைச் சேர்ந்த சைத்தானியா வாங்கி இருக்கின்றார். முன்னணி நட்சத்திர நடிகர்களுக்கு இணையான பிரபலமாக இவர் தற்போது வலம் வந்துக் கொண்டிருக்கின்றார். இவரின் மீது கூடுதல் கவனத்தை கொண்டு வந்து சேர்க்கும் விதமாக இந்த கார் கொள்முதல் சம்பவம் அரங்கேறி இருக்கின்றது.


Click it and Unblock the Notifications









