நடிகர் அஜித் கூட நடிச்ச நடிகையா இது? 2 வருடத்தில் ஆளே அடையாளம் தெரியல - புது காருக்கு ஓனர்!!
நடிகர் அஜித்குமார் உடன் வலிமை படத்தில் நடித்திருந்தவர் நடிகை பேர்லே மானே (Pearle Maaney). மலையாள நடிகையான இவர் தனது கம்பீரமான உடல் தோற்றத்தினால் மலையாளத்தில் நிறைய படங்களில் நடித்துள்ளார். அத்துடன், தெலுங்கிலும் ஒரு திரைப்படத்தில் நடித்துள்ள இவர் பல்வேறு தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கிய அனுபவமிக்கவர். ஆனால், சமீப காலமாக சினிமாவில் இருந்து ஒதுங்கி குடும்ப வாழ்க்கையை கவனித்துவரும் பேர்லே மானே புதியதாக மினி (MINI) எலக்ட்ரிக் கார் ஒன்றை வாங்கியுள்ளார். அந்த காரை பற்றி தான் இந்த தொகுப்பில் பார்க்கவுள்ளோம்.
பி.எம்.டபிள்யூ குழுமத்தின் கீழ் செயல்படும் மினி நிறுவனத்தின் கார்களை அதிகளவில் வாங்குவது கேரளத்தவர்கள் தான். முன்னணி மலையாள சினிமா நட்சத்திரத்தில் இருந்து விஐபிகள், அரசியல்வாதிகள் வரையில் ஏனோ அவர்களுக்கு மினி கார்களை அவ்வளவு பிடித்துள்ளது. பெயருக்கேற்ப மினி கார்கள் அளவில் சிறியதானவை.

4- 5 நபர்களுடன் பயணிப்பதற்கு மினி கார்கள் ஏற்றவை. அளவில் சிறிய காராக இருப்பினும், மினி கார்கள் மிகவும் ஸ்டைலிஷானவை மற்றும் பவர்ஃபுல்லானவை. அதாவது, அளவில் பெரியதான பிஎம்டபிள்யூ கார்களை அளவில் சிறியதாக கொண்டுவந்தால் எப்படி இருக்குமோ அவை தான் மினி கார்கள் ஆகும். இதற்கேற்ப, மினி கார்களின் விலைகளும் அதிகமாக உள்ளன.
அத்தகைய மினி கார்களுள் ஒன்றான மினி கண்ட்ரீமேன் என்கிற எலக்ட்ரிக் காரை தான் தற்போது மலையாள நடிகை பேர்லே மானே வாங்கியுள்ளார். 2008ஆம் ஆண்டில் தொலைக்காட்சி மியூசிக் சேனல் ஒன்றில் தொகுப்பாளராக தனது பணியை துவங்கிய பேர்லே மானேவுக்கு அதன்பின் பல்வேறு தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கும் வாய்ப்பு கிடைத்தது. 2019-20 சமயங்களில் ஜீ தமிழில் கூட டேன்ஸ் ஜோடி டேன்ஸ் 3.0 நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார்.

இதற்கிடையில் திரைப்படங்களிலும் சிறு, சிறு கதாபாத்திரங்களில் நடித்துக் கொண்டிருந்த பேர்லே மானே 2022இல் வெளியான நடிகர் அஜித்குமாரின் வலிமை திரைப்படத்தில் கிறிஸ்டியானா என்கிற கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். அதன்பின், 2023ஆம் ஆண்டில் வெளிவந்த குயின் எலிசபேத் திரைப்படம் தான் நடிகை பேர்லே மானேவின் நடிப்பில் வெளிவந்த கடைசி திரைப்படம் ஆகும். இந்த 2024இல் இன்னும் எந்த படமும் திரைக்குவரவில்லை.
தற்சமயம் யூடியூப் சேனல் ஒன்றை நடத்திவரும் நடிகை பேர்லே மானே புதியதாக மினி கண்ட்ரீமேன் எலக்ட்ரிக் காரை வாங்கியுள்ளார். கணவர் மற்றும் குழந்தை உடன் குடும்பமாக ஷோரூமுக்கு சென்று காரை டெலிவிரி பெற்றுள்ளார். நடிகை பேர்லே மானே வாங்கியிருப்பது பச்சை நிறத்திலான மினி கண்ட்ரீமேன் எலக்ட்ரிக் கார் ஆகும். இது இல்லாமல், இன்னும் 5 விதமான கலர் ஆப்ஷன்களில் இந்த எலக்ட்ரிக் கார் விற்பனைக்கு கிடைக்கிறது.

இந்தியாவில் கூப்பர் எஸ் ஜேசிடபிள்யூ இன்ஸ்பிரைடு என்கிற ஒரேயொரு வேரியண்ட்டில் மட்டுமே மினி கண்ட்ரீமேன் விற்பனை செய்யப்படுகிறது. இந்த காரின் எக்ஸ்-ஷோரூம் விலை ரூ.47.75 லட்சம் ஆகும். சென்னையில் உள்ள பிஎம்டபிள்யூ நிறுவனத்தின் தொழிற்சாலையில் தான் இந்த மினி எலக்ட்ரிக் கார் உற்பத்தி செய்யப்படுகிறது. 2.0 லிட்டர் 4-சிலிண்டர் பெட்ரோல் என்ஜின் உடன் மினி கண்ட்ரீமேன் கார் விற்பனை செய்யப்படுகிறது.
அதிகப்பட்சமாக 189 பிஎச்பி மற்றும் 280 என்.எம் டார்க் திறனை வெளிப்படுத்தக்கூடிய இந்த என்ஜின் உடன் 7-ஸ்பீடு டிசிடி ஸ்போர்ட் கியர்பாக்ஸ் இணைக்கப்படுகிறது. ஸ்போர்ட் மற்றும் க்ரீன் என 2 விதமான ரைடிங் மோட்கள் இந்த காரில் கிடைக்கின்றன. கடைசியாக 2021ஆம் ஆண்டில் அப்டேட் செய்யப்பட்ட மினி கண்ட்ரீமேன் எலக்ட்ரிக் காரில் வட்ட வடிவில் எல்இடி ஹெட்லேம்ப்கள் மற்றும் 17-இன்ச் அலாய் சக்கரங்கள் வழங்கப்படுகின்றன.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: ஏற்கனவே கூறியதுதான்... கேரள மக்களுக்கு மட்டும் மினி கார்கள் என்றால் ஏன் இந்த அளவிற்கு பிடித்துள்ளது என்பது தெரியவில்லை. ஏனெனில் பொதுவாகவே மினி கார்களை யார் வாங்குவார்கள் என்று பார்த்தால், வீட்டில் ஏற்கனவே 2,3 சொகுசு கார்களை வைத்துள்ள செல்வந்தர்கள் தான் புதுமையாக இருக்கட்டும் என்பதற்காக மினி காரை வாங்குவர். மினி காரை மட்டும் வைத்துக் கொண்டு குடும்பத்தின் அனைத்து விதமான போக்குவரத்தையும் நிவர்த்தி செய்ய முடியாது.


Click it and Unblock the Notifications









