14 வயதில் தந்தையை இழந்தவரை பிக்பாஸ் மொத்தமா தூக்கி விட்டுடுச்சு! ஒரு சீரியலில் கூட நடிக்கல அதற்குள் புதிய கார்

மாருதி சுஸுகி (Maruti Suzuki), இந்தியாவின் நம்பர் ஒன் கார் உற்பத்தி நிறுவனம். இந்தியாவின் மாருதி மற்றும் ஜப்பானின் சுஸுகி (Suzuki) நிறுவனங்கள் இணைந்து உருவான மாருதி சுஸுகி இந்தியாவில் ஒவ்வொரு மாதத்திலும் அசால்ட்டாக 1 லட்சத்திற்கும் அதிகமான கார்களை விற்பனை செய்துவருகிறது. இதற்கு முக்கியமான காரணமாக விளங்கும் கார்களுள் ஒன்று பலேனோ (Baleno) ஆகும். மாருதி சுஸுகியின் பிரீமியம் தரத்திலான ஹேட்ச்பேக் (Hatchback) ரக காராக பலேனோ விளங்குகிறது. அதாவது, சற்று விலைமிக்க மாருதி ஹேட்ச்பேக் கார், பலேனோ ஆகும்.

அதற்காக மிகவும் விலைமிக்க மாருதி கார் என நினைத்துவிட வேண்டாம். மாருதி சுஸுகி பலேனோவின் எக்ஸ்-ஷோரூம் விலைகள் தற்சமயம் ரூ.6.66 லட்சத்தில் இருந்து ரூ.9.88 லட்சம் வரையில் மட்டுமே உள்ளன. இவ்வளவு குறைவான விலையில், காஸ்ட்லீ லுக்கில் கிடைப்பதினாலேயே பலேனோ காரை மக்கள் பலரும் போட்டி போட்டு வாங்கி வருகின்றனர்.

bigg boss contestant buys baleno

மிடில்-கிளாஸ் மக்கள் மட்டுமின்றி, பெரும் செல்வந்தர்களும் தினசரி போக்குவரத்துக்கு பலேனோ காரை வாங்குகின்றனர். இவ்வளவு ஏன், சில சினிமா பிரபலங்கள் கூட மாருதி சுஸுகி பலேனோ காரை வாங்கியதை பார்த்து இருக்கிறோம். அந்த வரிசையில் தற்போது ஒரு பிக்பாஸ் (Bigg Boss) பிரபலம் பலேனோ காரை வாங்கி உள்ளார்.

இவரது பெயர் நந்தனா (Nandana). இப்படியொரு பெயரில் எந்த தமிழ் பிக்பாஸ் போட்டியாளரையும் கேள்விப்பட்டது இல்லையே என உங்களுக்கு தோன்றலாம். ஏனெனில், இவர் மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துக் கொண்டவர் ஆவார். கேரளாவின் திரிச்சூரை சேர்ந்தவரான நந்தனா, கடந்த 2024ஆம் ஆண்டில் நடைபெற்ற மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியின் 6வது சீசனில் வைல்டு கார்டு போட்டியாளராக கலந்துக் கொண்டார்.

bigg boss contestant buys baleno

கடந்த 2024ஆம் ஆண்டில் சரியாக இந்த மே மாதத்தில் எல்லாம் பிக்பாஸ் வீட்டிற்குள் இருந்தவர், தற்போது புதிய பலேனோ காரில் சென்றுக் கொண்டிருக்கிறார். பெரும்பாலும் டிவி சீரியல் தொடர்களில் நடிப்பவர்கள் தான் பிக்பாஸில் கலந்துக் கொள்வர். ஆனால், நந்தனா இதுவரையில் எந்தவொரு திரையிலும் நடித்தது கிடையாது. ஆனால், மாடலிங் துறையை சேர்ந்தவர்.

நடிகையாக உருவெடுக்க தொடர்ந்து முயற்சித்து வருகிறார். மாடலிங் துறையில் இருக்கும் நந்தனா, நன்றாக நடனமாட கூடியவராக உள்ளார். இதன் மூலமாக சமூக வலைத்தள பக்கங்களில் நந்தனாவை இலட்சக்கணக்கிலான மக்கள் பின்தொடர்கின்றனர். நந்தனாவின் வாழ்க்கை தற்போது ஓரளவிற்கு சீராக இருந்தாலும், சிறு வயதில் மிகவும் மோசமானதாக இருந்துள்ளது. நந்தனவாவுக்கு 14 வயது இருக்கும்போதே அவரது தந்தை காலமாகி விட்டார்.

பத்து பாத்திரம் கழுவி வருவாய் ஈட்டிய தாயின் கடின உழைப்பில் தங்கை உடன் சேர்ந்து வளர்ந்த நந்தனா, கல்லூரி படிப்பு காலத்திலேயே பகுதி நேர வேலைக்கு சென்று குடும்ப பாரத்தை தூக்கி சுமந்தார். அப்போதே நந்தனா போட்ட விதை, இப்போது பளபளக்கும் புத்தம் புதிய பலேனோ காராக முளைத்து நிற்கிறது.

புதிய காருக்கு கோயிலில் பூஜை போடுவதற்காக கொண்டுவரப்பட்ட போது எடுக்கப்பட்ட வீடியோ ஒன்றை நந்தனா தனது இன்ஸ்டாகிராம் (Instagram) பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இந்த வீடியோவில், நந்தனாவின் புதிய காரில் ஏற்கனவே வெள்ளை நிற நம்பர் பிளேட் பொருத்தப்பட்டு இருப்பதை காணலாம். பொதுவாக, சமீபத்தில் டெலிவிரி எடுக்கப்பட்ட கார்களில் ஆரம்பத்தில் தற்காலிகமாக சிவப்பு நிற நம்பர் பிளேட் பொருத்துவது வழக்கம்.

நீல நிறத்தில் பலேனோ காரை நந்தனா வாங்கியுள்ளார். 'நெக்ஸா நீலம்' (Nexa Blue) என மாருதி சுஸுகி நிறுவனம் அழைக்கும் இந்த நீல நிறத்தில்தான் பெரும்பாலானோர் பலேனோ காரை வாங்க விரும்புகின்றனர். இது இல்லாமல், பேர்ல் மிட் நைட் பிளாக், கிராண்டியர் கிரே, ஸ்ப்ளெண்டிட் சில்வர், லக்ஸ் பீஜ், ஒபுலண்ட் சிவப்பு மற்றும் ஆர்டிக் வெள்ளை உள்ளிட்ட கலர் ஆப்ஷன்களிலும் பலேனோ காரை மாருதி சுஸுகி நிறுவனம் விற்பனை செய்கிறது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் ஒவ்வொரு மாதத்திலும் ஏறக்குறைய 15 ஆயிரம் பலேனோ கார்கள் விற்பனை செய்யப்படுகின்றன. அந்த 15 ஆயிரம் பலேனோ கார் கஸ்டமர்களுள் ஒருவராக மலையாள பிக்பாஸ் பிரபலம் நந்தனா இணைந்துள்ளார். இவரது காரில் ஏற்கனவே வெள்ளை நிற நம்பர் பிளேட் பொருத்தப்பட்டுள்ளதால், இந்த காரை நந்தனா வாங்கி கிட்டத்தட்ட 1 மாத காலம் ஆகியிருக்கும் என நினைக்கிறோம்.

More from DriveSpark

Article Published On: Saturday, May 3, 2025, 7:50 [IST]
English summary
Malayalam bigg boss contestant nandana spotted with her new maruti suzuki baleno
மேலும்... #celebrity cars #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+