பிக்பாஸில் ஜெய்ச்சதற்கு அப்புறம் தான் எல்லாமே கிடைக்குது!! 4 மாதங்களில் புதுசா 2வது விலையுயர்ந்த கார்

பிக்பாஸ் (Bigg Boss) மலையாளம் 5வது சீசனின் வெற்றியாளரும், இயக்குனருமான அகில் மாறர் புதியதாக விலையுயர்ந்த மினி கூப்பர் காரை வாங்கி உள்ளார். பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியே வந்த சில மாதங்களில் அகில் இந்த மினி காரை ஷோரூம் ஒன்றில் டெலிவிரி எடுத்துள்ளார். அப்போது எடுக்கப்பட்ட படங்கள் இணையத்தில் வைரலாகி உள்ளன.

இந்தியா முழுவதும் பிரபலமான தொலைக்காட்சி பிக்பாஸ் ஆகும். தமிழ் உள்பட பல்வேறு மொழிகளில் ஒவ்வொரு வருடமும் பிக்பாஸ் தொடர் ஏறக்குறைய 100 நாட்களுக்கு விமர்சையாக நடத்தப்பட்டு வருகிறது. குறிப்பாக, இந்தியில் 10 வருடங்களுக்கும் மேலாக பிக்பாஸ் நடத்தப்பட்டு வருகிறது. தமிழில் இந்த தொலைக்காட்சி நிகழ்ச்சியை நடிகர் கமலஹாசன் தொகுத்து வழங்குவது உங்களுக்கு தெரிந்திருக்கும்.

malayalam bigg boss winner

அதேபோல், மலையாளத்தில் முன்னணி நடிகர் மோகன்லால் தொகுத்து வழங்கி வருகிறார். மலையாள பிக்பாஸின் 5வது சீசன் கடந்த ஜூலை மாத துவக்கத்தில், 99 நாட்களில் நிறைவுற்றது. இந்த சீசனின் வெற்றியாளராக மலையாள பட இயக்குனர் அகில் மாறர் அறிவிக்கப்பட்டார். இதன்பின், முன்பை விட அதிக ரசிகர்களுடன் கேரள சினிமா பட உலகில் பிரபலமாக துவங்கியுள்ளார், அகில் மாறர்.

இந்த நிலையில், பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியே வந்து சில மாதங்கள் மட்டுமே ஆன நிலையில், அகில் மாறர் புதியதாக ஓர் விலையுயர்ந்த காரை வாங்கி உள்ளார். இயக்குனர் அகில் மாறர் புதியதாக வாங்கி இருப்பது மினி கூப்பர் எஸ் கார் ஆகும். கேரளா, எர்ணாகுளத்தில் உள்ள ஷோரூம் ஒன்றில் தனது மினி கூப்பர் எஸ் காரை அகில் மாறர் டெலிவிரி எடுக்கும் வீடியோவும், படங்களும் இணையத்தில் வெளியிடப்பட்டு உள்ளன.

malayalam bigg boss winner

அகில் மாறர் வாங்கியிருக்கும் மினி கூப்பர் எஸ் கார் அவரது விருப்பத்திற்கு ஏற்ப சிறிது கஸ்டமைஸ் செய்யப்பட்டு உள்ளதாக கூறப்படுகிறது. அகில் மாறரின் புதிய மினி கூப்பர் எஸ் கார் மஞ்சள் கலந்த இளம் பச்சை நிறத்தில் உள்ளது. இந்த காரை தனது மனைவி மற்றும் குழந்தைகளுடன் குடும்பமாக வந்து அகில் மாறர் டெலிவிரி பெற்றுள்ளார்.

இந்த இளம் மலையாள இயக்குனர் வாங்கியிருக்கும் மினி கூப்பர் எஸ் கார் ஆனது 3 கதவுகளை மட்டுமே கொண்ட ஓர் ஹேட்ச்பேக் ரக கார் ஆகும். இருப்பினும், கொச்சியில் இந்த மினி காரின் எக்ஸ்-ஷோரூம் விலை சுமார் ரூ.53.33 லட்சம் ஆகும். இந்த காரை எர்ணாகுளத்தில் உள்ள இவிஎம் மோட்டார்ஸ் என்ற டீலர்ஷிப் ஷோரூமில் இருந்து அகில் மாறர் வாங்கி உள்ளார்.

malayalam bigg boss winner

உலகளவில் பிரபலமான மினி கூப்பர் கார்களின் பெட்ரோல் வேரியண்ட் தான் கூப்பர் எஸ் ஆகும். பிரிட்டிஷ் ரேசிங் பச்சை, ஐலாண்ட் நீலம், சில்லி சிவப்பு, மூன்வால்க் கிரே, ரூஃப்டாப் கிரே, வெள்ளை சில்வர் மற்றும் பெப்பர் வெள்ளை என்ற பெயிண்ட் ஆப்ஷன்களில் இந்தியாவில் இந்த கார் விற்பனைக்கு கிடைக்கிறது. இதில், பிரிட்டிஷ் ரேசிங் பச்சை நிறத்தில்தான் மினி கூப்பர் எஸ் காரை அகில் மாறர் வாங்கியுள்ளார்.

மினி கூப்பர் எஸ் காரில் பொருத்தப்படும் 2.0 லிட்டர் பெட்ரோல் என்ஜின் அதிகப்பட்சமாக 129 பிஎச்பி மற்றும் 280 என்எம் டார்க் திறன் வரையில் இயக்க ஆற்றலை காருக்கு வழங்கக்கூடியதாக உள்ளது . இந்த என்ஜின் உடன் 7-ஸ்பீடு டிசிடி கியர்பாக்ஸ் இணைக்கப்படுகிறது. 3 கதவுகள் உடன் அளவில் சிறியதாக, எடை குறைவான இந்த மினி காரில் 0-இல் இருந்து 100kmph வேகத்தை வெறும் 6.7 வினாடிகளில் எட்டிவிடலாம்.

malayalam bigg boss winner

டிரைவ்ஸ்பார்க் கருத்து: பிக்பாஸில் வெற்றி பெற்றதன் மூலம் மேலும் பிரபலமாகி உள்ள சந்தோஷத்தில் இருக்கும் இயக்குனர் அகில் மாறருக்கு டபுள் சந்தோஷமாக விலையுயர்ந்த மினி கூப்பர் கார் அவரது வீட்டிற்கு வந்துள்ளது. கேரள மக்கள் குறிப்பாக மினி கூப்பர் கார்களை அதிகளவில் வாங்குகின்றனர். அகில் மாறர் கடந்த ஆகஸ்ட் மாதத்தில்தான் வால்வோ எஸ்90 காரை வாங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.

More from DriveSpark

Article Published On: Friday, November 24, 2023, 15:09 [IST]
English summary
Malayalam bigg boss winner akhil marar takes delivery of mini cooper s
மேலும்... #ஆஃப் பீட் #off beat
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X