டைரக்ட் பண்ணது வெறும் ஒரேயொரு படம் தான்! ரூ.12.55 லட்ச ரூபா பைக்கோட ஜம்முனு இருக்காரு
பிக்பாஸ் (Bigg Boss) மூலமாக நல்ல இமேஜை கெடுத்துக் கொண்டவர்கள் ஏராளம். அதேநேரம் சிலர், பிக்பாஸின் மூலம் தங்களது நெகட்டீவ் இமேஜை மாற்றிக் கொண்டுள்ளனர். அத்தகையவர்களுள் ஒருவர் தான் மலையாள திரைப்பட இயக்குனரான அகில் மரார் (Akhil Marar). ஆட்டோமொபைல் வாகனங்கள் மீது ஆர்வம் கொண்டவராக விளங்கும் அகில் மரார், வழக்கமான கார் & பைக்குகளை தாண்டி வித்தியாசமான கார் & பைக்குகளையும் விரும்பக்கூடியவராக உள்ளார். அதன் வெளிப்பாடாகவே, தற்போது விலையுயர்ந்த பிஎம்டபிள்யூ பைக் (BMW Bike) ஒன்றை இவர் வாங்கியுள்ளார். இதுகுறித்த கூடுதல் விபரங்களை தான் இனி இந்த தொகுப்பில் பார்க்க போகிறோம்.
பொதுவாகவே, மற்ற சினிமாக்காரர்கள் உடன் ஒப்பிடுகையில் மலையாள சினிமாக்காரர்கள் சற்று வித்தியாசமானவர்கள் என்றுதான் சொல்ல வேண்டும். புதியதாக வாங்கும் வாகனங்களை தேர்வு செய்வதிலும் மலையாள சினிமா பிரபலங்கள் சற்று மாறுப்பட்ட விருப்பங்களை கொண்டுள்ளனர். அந்த அளவிற்கு கேரளாவின் சுற்றுச்சூழலும், சாலை அமைப்புகளும் வேறுப்பட்டவைகளாக உள்ளன.

இதனாலேயே கேரளாவில் அதிகம் பேர் மஹிந்திரா தார் ராக்ஸ், மாருதி சுஸுகி ஜிம்னி போன்ற மலைச்சாலைகளில் பயன்படுத்துவதற்கு ஏற்றதான ஆஃப்-ரோடு எஸ்யூவி வாகனங்களை வாங்குவதை பார்க்க முடியும். அதேபோல், கேரள சினிமா பிரபலங்கள் மினி (MINI) கார்களை அதிகமாக வாங்குவதையும், பயன்படுத்துவதையும் பார்க்கலாம். மினி என்பது பிஎம்டபிள்யூ நிறுவனத்தின் ஓர் துணை நிறுவனமாகும்.
பெயருக்கேற்ப, மினி நிறுவனத்தில் இருந்து விற்பனை செய்யப்படும் கார்கள் எல்லாம் அளவில் சிறியதாக உருவாக்கப்படுகின்றன. அதாவது, அவற்றில் அதிகப்பட்சமாகவே 5 பேர் மட்டுமே அமர முடியும். இருப்பினும், பிஎம்டபிள்யூ கார்களுக்கு இணையாக மினி கார்களின் விலைகளும் பல இலட்ச ரூபாய்களில் உள்ளன. நாம் இந்த தொகுப்பில் பார்க்கும் மலையாள திரைப்பட இயக்குனர் அகில் மராரிடமும் மினி கார் ஒன்று உள்ளது.

மினி நிறுவனத்தின் கூப்பர் காரை ஷோரூம் மூலமாக தனது விருப்பத்திற்கேற்ப மாற்றிக் கொண்டு, கடந்த 2023ஆம் ஆண்டு நவம்பர் மாதத்தில் அகில் மாரர் வாங்கியிருந்தார். அதே ஷோரூமுக்கு தான் தற்போது பிஎம்டபிள்யூ மோட்டார்சைக்கிளை வாங்கவும் அகில் மாரர் சென்றுள்ளார். ஏனெனில், பிஎம்டபிள்யூ-இன் துணை நிறுவனம் தான் மினி என்பதால், மினி கார்களும் பிஎம்டபிள்யூ பைக்குகளும் ஒரே ஷோரூமில்தான் விற்பனை செய்யப்படுகின்றன.
கொச்சியில் உள்ள இந்த அங்கீகரிக்கப்பட்ட பிஎம்டபிள்யூ ஷோரூமுக்கு கிட்டத்தட்ட 1.5 வருடங்கள் கழித்து மனைவி உடன் அகில் மாரர் சென்றுள்ளார். 2021ஆம் ஆண்டில் 'ஒரு தத்விகா அவலோகானம்' என்கிற ஹிட் அடித்த மலையாள திரைப்படத்தை இயக்கி கவனத்தை பெற்ற இயக்குனர் அகில் மாரர், மலையாள பிக்பாஸ் சீசன்-5இன் டைட்டில் வின்னர் ஆவார். இவர் தற்போது புதியதாக வாங்கி இருப்பது, பிஎம்டபிள்யூ மோட்டார்ராட் நிறுவனத்தின் எஃப்900 எக்ஸ்.ஆர் (F900 XR) பைக் ஆகும்.

புரோ என்கிற ஒரேயொரு வேரியண்ட்டில் மட்டுமே இந்தியாவில் விற்பனைக்கு கிடைக்கும் இந்த பிஎம்டபிள்யூ பைக்கின் எக்ஸ்-ஷோரூம் விலை தற்சமயம் சுமார் ரூ.12.55 லட்சமாக உள்ளது. 219 கிலோ எடை கொண்ட இந்த பிஎம்டபிள்யூ பைக்கின் பெட்ரோல் டேங்க் கொள்ளளவு 15.5 லிட்டர்கள் ஆகும். இந்த பைக்கில் 895சிசி, லிக்யுடு-கூல்டு, இணையான-இரட்டை சிலிண்டர் என்ஜின் பொருத்தப்படுகிறது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: ரூ.12.55 லட்சத்தில் ஒரு பிராண்ட்-நியூ எஸ்யூவி காரையே வாங்கிவிட முடியும். மேலும், ரூ.12.55 லட்சம் என்பது கூட பைக்கின் எக்ஸ்-ஷோரூம் விலை மட்டுமே ஆகும். ஆன்-ரோடு விலை நிச்சயமாக சில இலட்ச ரூபாய்களை தாண்டிவிடும். பேனல்கள் அதிகமாக இல்லாத, எடை குறைவான நேக்டு-ரக பைக்கான இதனை தொலைத்தூர பயணங்களுக்கு தாராளமாக பயன்படுத்தலாம்.


Click it and Unblock the Notifications









