வாழ்க்கையில இப்போ தான் பெருசா ஜெயிச்சிட்ட மாதிரி ஃபீல் வருது! காருக்கு மேட்சிங்கா எல்லாரும் கருப்பு உடையில்...
ஸ்கோடா ஆட்டோ இந்தியா (Skoda Auto India) நிறுவனத்தில் இருந்து தற்சமயம் அதிக எண்ணிக்கையில் விற்பனை செய்யப்படும் கார், ஸ்லாவியா (Slavia) ஆகும். ஸ்கோடாவின் செடான் ரக காரான ஸ்லாவியா, கடந்த சில வருடங்களாக ஒவ்வொரு மாதமும் சராசரியாக 2 ஆயிரத்தில் இருந்து 3 ஆயிரம் யூனிட்கள் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. அவ்வாறு ஸ்லாவியா காரை வாங்கும் கஸ்டமர்களுள் ஒருவராக பிரபல 'ஊக்கமளிக்கும் பேச்சாளர்' (Motivational Speaker) ஒருவர் ஸ்கோடா ஸ்லாவியா காரை தற்போது வாங்கி உள்ளார்.
அவரது பெயர், பிரவீன் சிராயத் (Praveen Chirayath). கேரளா (Kerala)-ஐ சேர்ந்தவரான இவர், திரிச்சூரில் ஒரு ஆங்கிலம் கற்றுக் கொடுக்கும் மையத்தை நடத்தி வருகிறார். இதுதான் பிரவீன் சிராயத்தின் பிரதானமான தொழில் என்றாலும், இது இல்லாமல் வேறு சில பிஸ்னஸ் (Business)-களையும் இவர் மேற்கொண்டு வருகிறார்.

அவற்றுள் ஒன்றுதான், ஊக்கமளிக்கும் சொற்பொழிவை நடத்துவது ஆகும். இதற்கு இன்ஸ்டாகிராம் (Instagram)-ஐ அதிகம் பயன்படுத்தி வரும் பிரவீன் சிராயத்தை இன்ஸ்டாகிராமில் மட்டும் சுமார் 1.91 லட்சத்திற்கும் அதிகமானோர் பின்பற்றுகின்றனர். இதன் மூலமாக, கேரளாவில் பெரும்பாலான மக்கள் அறியக்கூடிய நபராக பிரவீன் சிராயத் விளங்குகிறார்.
இந்த நிலையில்தான், பிரவீன் சிராயத் தனது வாழ்வின் அடுத்த கட்டமாக பிராண்ட்-நியூ ஸ்கோடா ஸ்லாவியா காரை வாங்கி உள்ளார். திரிச்சூரில் உள்ள ஸ்கோடா ஆட்டோவின் அங்கீகரிக்கப்பட்ட டீலர்ஷிப் ஷோரூமுக்கு குடும்பத்துடன் சென்று புதிய ஸ்லாவியா காரை டெலிவிரி (Delivery) பெறுவதை பிரவீன் சிராயத்தின் மனைவி டீனா பிரவீன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோ உடன் பதிவிட்டுள்ளார்.

முற்றிலும் கருப்பு நிறத்தில் ஸ்லாவியா காரை வாங்கி உள்ளதினால், அதற்கேற்ப பிரவீன் சிராயத்தின் குடும்பத்தினரும் முழுவதுமாக கருப்பு நிற உடையில் ஸ்கோடா ஷோரூமுக்கு சென்றுள்ளனர். இந்த கருப்பு நிறத்தை 'அடர் கருப்பு' (Deep Black) என ஸ்கோடா நிறுவனம் அழைக்கிறது. இது இல்லாமல், பல்வேறு கலர் ஆப்ஷன்கள் மற்றும் ட்யூயல்-டோன் கலர் ஆப்ஷன்களிலும் ஸ்லாவியா கார் விற்பனை செய்யப்படுகிறது.
பல்வேறு விதமான வேரியண்ட்களில் கிடைக்கும் ஸ்கோடா ஸ்லாவியா காரின் எக்ஸ்-ஷோரூம் விலைகள் தற்சமயம் ரூ.10.34 லட்சத்தில் இருந்து ரூ.18.34 லட்சம் வரையில் உள்ளன. ஆனால், இந்த தாழ்வான ஸ்கோடா செடான் காரை பெட்ரோல் என்ஜின் உடன் மட்டுமே வாங்க முடியும். 1 லிட்டர் டர்போ பெட்ரோல் மற்றும் 1.5 லிட்டர் டர்போ பெட்ரோல் என 2 விதமான பெட்ரோல் என்ஜின் ஆப்ஷன்களில் ஸ்லாவியா விற்பனை செய்யப்படுகிறது.

இதில், 1 லிட்டர் டர்போ பெட்ரோல் என்ஜினை 6-ஸ்பீடு மேனுவல் அல்லது டார்க் கன்வெர்டர் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் உடனும், 1 லிட்டர் டர்போ பெட்ரோல் என்ஜினை 6-ஸ்பீடு மேனுவல் அல்லது 7-ஸ்பீடு ட்யூயல்-க்ளட்ச் டி.எஸ்.ஜி ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் உடனும் வாங்கலாம். மத்திய அரசாங்கத்தின் மாசு கட்டுப்பாட்டு விதிமுறைகளினால் டீசல் என்ஜின் ஆப்ஷன் இந்த காரில் வழங்கப்படுவதில்லை.
ஸ்கோடா ஸ்லாவியாவில் முக்கியமான தொழிற்நுட்ப வசதிகளாக வயர்லெஸ் ஆண்ட்ராய்டு ஆட்டோ & ஆப்பிள் கார்ப்ளே, 521 லிட்டர்கள் கொள்ளளவில் பெரிய அளவில் பூட் ஸ்பேஸ், 6 ஏர்பேக்குகள், இபிடி உடன் ஏபிஎஸ், டிராக்ஷன் கண்ட்ரோல், எலக்ட்ரானிக் ஸ்டெபிளிட்டி புரோகிராம், ஹில் ஸ்டார்ட் அசிஸ்ட் மற்றும் ஹில் ஹோல்ட் அசிஸ்ட் உள்ளிட்டவை வழங்கப்படுகின்றன.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: தற்சமயம் இந்தியர்கள் அதிகம் வாங்கும் ஸ்கோடா காராக விளங்கும் ஸ்லாவியாவை பிரவீன் சிராயத் வாங்கி இருப்பதில் ஆச்சிரியம் ஒன்றுமில்லை. ஆனால், காரை முழுவதும் கருப்பு நிறத்தில் இவர் வாங்கி இருப்பது கவனத்தை ஈர்க்கிறது. நம் இந்திய மக்கள் மத்தியிலும் கருப்பு நிற காரை வாங்குவதற்கான ஆவல் அதிகரித்து வருவதை இதன் மூலம் அறிய முடிகிறது.


Click it and Unblock the Notifications









