தயாரிச்சது மொத்தமே 5 படம் தான்! ரூ.30 லட்சத்தில் புது கார் வாங்கிய இந்த திரைப்பட தயாரிப்பாளர் யார்னு தெரியுதா?

டொயோட்டா இன்னோவா (Toyota Innova) கார்களுக்கு நம் நாட்டில் கடந்த பல வருடங்களாக நல்ல டிமாண்ட் இருந்து வருகிறது. இன்னும் சொல்லப்போனால், இந்தியாவில் இன்னோவா காரை பிடிக்காதவர்களே மிகவும் குறைவு என்றுதான் சொல்ல வேண்டும். இதன் காரணமாகவே, உலகளவில் பிரபலமான ஜப்பானிய கார் நிறுவனமான டொயோட்டா இந்தியாவில் அவ்வப்போது இன்னோவா கார்களை அப்டேட் செய்து விடுகிறது. அதேபோல், புது புது இன்னோவா கார்கள் தொடர்ச்சியாக அறிமுகம் செய்யப்பட்ட வண்ணம் உள்ளன. ஆரம்பத்தில் இன்னோவா என்று இருந்த நிலையில், அதன்பின் 'இன்னோவா கிரிஸ்ட்டா' என மாறியது.

அதனை தொடர்ந்து சில வருடங்களுக்கு முன்பு, இன்னோவா ஹைகிராஸ் கார் அறிமுகம் செய்யப்பட்டது. இன்னோவா கார்களின் ஹைப்ரீட் (Hybrid) வெர்சனாக இன்னோவா ஹைகிராஸ் உருவாக்கப்பட்டு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. அதாவது, இந்த காரில் பெட்ரோல் என்ஜினும் உள்ளது, அதேநேரம் எலக்ட்ரிக் மோட்டாரும் உள்ளது.

movie producer buys toyota innova

இத்தகைய டொயோட்டா ஹைப்ரீட் காரை தான் தற்போது ஒரு பிரபல திரைப்பட தயாரிப்பாளர் வாங்கியுள்ளார். இவரது பெயர், ஜாபி ஜார்ஜ் (Joby George) ஆகும். மலையாள சினிமா துறையில் மட்டுமே தற்போதைக்கு தயாரிப்பாளராக உள்ள ஜாபி ஜார்ஜ், முதன்முதலாக 2018ஆம் ஆண்டில் 'ஆப்ரஹாமிண்டே சந்ததிகள்' என்கிற திரைப்படத்தை தயாரித்து திரைக்கு கொண்டுவந்தார்.

அதன்பின், கொரோனா வைரஸ் பரவலினால் சற்று அமைதி காத்த ஜாபி ஜார்ஜ், அதன்பின் கடந்த 4 வருடங்களில் மட்டும் 3 மலையாள திரைப்படங்களை தயாரித்து ரசிகர்கள் மத்தியிலும், சினிமா துறையினர் மத்தியிலும் கவனிக்கத்தக்க தயாரிப்பாளராக உருவெடுத்து நிற்கிறார். இந்த நிலையில்தான், திரைப்பட தயாரிப்பாளர் ஜாபி ஜார்ஜ் புதியதாக டொயோட்டா இன்னோவா ஹைகிராஸ் காரை வாங்கி உள்ளார்.

movie producer buys toyota innova

கருப்பு நிறத்திலான டொயோட்டா இன்னோவா ஹைகிராஸ் கார் உடன் ஜாபி ஜார்ஜ் நிற்கும் படம் ஒன்று இணையத்தில் வெளியிடப்பட்டுள்ளது. இந்த படத்தில் ஷோரூமில் பொருத்தப்படும் தற்காலிக நம்பர் பிளேட் காரில் பொருத்தப்பட்டு உள்ளதை காணலாம். ஷோரூமில் இருந்து காரை டெலிவிரி பெற்று வீட்டிற்கு வந்த பின் புதிய காருடன் நின்று இந்த போட்டோவை தயாரிப்பாளர் ஜாபி ஜார்ஜ் எடுத்துக் கொண்டுள்ளார்.

டொயோட்டா இன்னோவா ஹைகிராஸ் காரை பற்றி சொல்ல வேண்டுமென்றால், ஹைப்ரீட் காராக இது மார்க்கெட்டிங் செய்யப்பட்டாலும், இந்த காரை வெறும் பெட்ரோல் என்ஜின் உடன் மட்டும் கூட வாங்கலாம். பெட்ரோல் வெர்சனில் இன்னோவா ஹைகிராஸ் காரில் 2 லிட்டர் பெட்ரோல் என்ஜின் கிடைக்கும். அதிகப்பட்சமாக 172 பிஎச்பி மற்றும் 205 என்.எம் டார்க் திறனை வெளிப்படுத்தக்கூடிய இந்த பெட்ரோல் என்ஜின் உடன் சிவிடி கியர்பாக்ஸ் இணைக்கப்படுகிறது.

movie producer buys toyota innova

அதுவே, ஹைப்ரீட் வெர்சனில் இன்னோவா ஹைகிராஸ் காரில் 2 லிட்டர் அட்கின்சன் சைக்கிள் பெட்ரோல் என்ஜின் ஆனது எலக்ட்ரிக் மோட்டார் உடன் வழங்கப்படுகிறது. இதில், எலக்ட்ரிக் மோட்டார் உடன் லித்தியம்-இரும்பு பேட்டரி பொருத்தப்படுகிறது. இந்த பெட்ரோல்- எலக்ட்ரிக் மோட்டார் பவர்டிரெயினின் மூலம் அதிகப்பட்சமாக 186 பிஎச்பி வரையிலான இயக்க ஆற்றலை பெறலாம்.

டொயோட்டா இன்னோவா ஹைகிராஸ் காரில் முக்கியமான அம்சமாக அடாஸ் (ADAS) வழங்கப்படுகிறது. இன்றைய கால மாடர்ன் கார்களில் பரவலாக வழங்கப்பட்டு வரும் அடாஸின் மூலம் டைனாமிக் க்ரூஸ் கண்ட்ரோல், லேன் டிரேஸ் அசிஸ்ட், பிளைண்ட் ஸ்பாட் மானிடரிங், மோதலுக்கு முந்தைய எச்சரிக்கை உள்ளிட்ட வசதிகளை பெறலாம்.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: பெட்ரோல் மற்றும் ஹைப்ரீட் என 2 விதமான வெர்சன்களில் டொயோட்டா இன்னோவா ஹைகிராஸ் கார் விற்பனை செய்யப்படும் நிலையில், இதில் எந்த வெர்சனில் இந்த காரை திரைப்பட தயாரிப்பாளர் ஜாபி ஜார்ஜ் வாங்கி உள்ளார் என்பது தெரியவில்லை. ஏனெனில், தனது இன்ஸ்டாகிராம் பதிவில் புகைப்படத்தை தவிர்த்து வேறு எதையும் அவர் குறிப்பிடவில்லை.

FAQs
இன்னோவா ஹைகிராஸில் வழங்கப்படும் சீட் ஆப்ஷன்கள் என்னென்ன?

7-சீட்டர் & 8-சீட்டர்

இன்னோவா ஹைகிராஸில் வழங்கப்படும் பாதுகாப்பு அம்சங்கள் என்ன?

அடாஸ், 6 ஏர்பேக்குகள், வைகல் ஸ்டெபிளிட்டி கண்ட்ரோல், ஹில் ஸ்டார்ட் அசிஸ்ட், ரிவர்ஸ் பார்க்கிங் கேமரா

டொயோட்டா இன்னோவா ஹைகிராஸ் காரின் எக்ஸ்-ஷோரூம் விலைகள் தற்சமயம் எவ்வளவாக உள்ளன?

ரூ.19.94 லட்சத்தில் இருந்து ரூ.31.34 லட்சம் வரையில்

DriveSpark Automotive

More from DriveSpark

Article Published On: Wednesday, March 26, 2025, 23:37 [IST]
English summary
Malayalam movie producer jobby george buys toyota innova hycross
மேலும்... #celebrity car #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X