பல லட்ச ரூபாயை செலவிட்டு சீன பிராண்டு காரை வாங்கிய மியூசிக் டைரக்டர்! எல்லா பெரிய ஆளுங்களும் வாங்கராங்க!
பிஒய்டி (BYD), சீனாவை தாயகமாகக் கொண்டு இயங்கி வரும் மின்சார வாகன (EV) உற்பத்தி நிறுவனம் இதுவாகும். இந்தியாவில் எலெக்ட்ரிக் பேருந்து உற்பத்தியாளராகக் கால்தடம் பதித்த இந்த நிறுவனம் இப்போது எலெக்ட்ரிக் கார் (eCar)களையும் விற்பனைக்கு வழங்கி வருகின்றது. இந்திய பணக்காரர்களை குறி வைத்தே இந்த பிராண்டு செயல்பட்டு வருகின்றது. இந்தியாவில் இந்த நிறுவனம் இப்போது மூன்று எலெக்ட்ரிக் கார் மாடல்களை மட்டுமே விற்பனைக்கு வழங்கிக் கொண்டிருக்கின்றது. இ-மேக்ஸ்7 (eMax7), அட்டோ 3 (Atto 3) மற்றும் சீல் (Seal) ஆகியவையே அவை ஆகும்.
இந்த மூன்றும் காஸ்ட்லியான மின்சார கார்கள் ஆகும். ஆகையால், பணக்காரர்கள் மற்றும் பிரபலங்கள் மத்தியில் மட்டுமே இந்த நிறுவனத்தின் தயாரிப்புகளுக்கு நல்ல டிமாண்ட் நிலவிக் கொண்டிருக்கின்றது. மிக முக்கியமாக ஆடம்பர கார்களை அதிகம் நேசிக்கும் இந்தியாவின் பெரும் பணக்காரர்கள் மற்றும் வசதிப் படைத்த பிரபலங்களே இந்த நிறுவனத்தின் வாடிக்கையாளர்களாக உள்ளனர்.

இதை உறுதிப்படுத்தக் கூடிய ஓர் சம்பவமே தற்போது அரங்கேறியிருக்கின்றது. மலையாள திரை உலகைச் சேர்ந்த புகழ்பெற்ற மியூசிக் டைரக்டர் இந்த நிறுவனத்தின் எலெக்ட்ரிக் கார் மாடலை வாங்கி இருக்கின்றார். பிஜிபல், இவரே அவர் ஆவார். பிஒய்டி அட்டோ 3 கார் மாடலையே அவர் வாங்கி இருக்கின்றார். இந்த காரை அவர் குடும்பத்துடன் சென்று டெலிவரி பெறும் படமே தற்போது வெளியாகி இருக்கின்றது.
மலையாள திரையுலகில் பல்வேறு விருதுகளை வென்ற மியூசிக் டைரக்டர்களில் இவரும் ஒருவர் ஆவார். இவர் சீன நிறுவனத்தின் விலை உயர்ந்த காரை வாங்கி இருப்பது ஆச்சரியத்தை ஏற்படுத்தும் வகையில் அமைந்திருக்கின்றது. பிஒய்டி அட்டோ 3 ஓர் எஸ்யூவி ரக எலெக்ட்ரிக் கார் மாடல் ஆகும். இதன் ஆரம்ப விலையே ரூ. 24.99 லட்சம் ஆகும். மேலும், இது வெறும் எக்ஸ்-ஷோரூம் விலை மட்டுமே என்பது கவனிக்கத்தகுந்தது.
இந்த காரில் ஓர் முழு சார்ஜில் 521 கிமீ தூரம் வரை பயணிக்க முடியும். இது அதிக ஆற்றலை வெளியேற்றக் கூடியதாகவும் காட்சியளிக்கின்றது. அந்தவகையில், இந்த காருக்கு பூஜ்ஜியத்தில் இருந்து மணிக்கு 100 கிமீ வேகத்தை எட்ட வெறும் 7.3 செகண்டுகளே போதுமானதாகக் காட்சியளிக்கின்றது.
இந்த காரை தன்னுடைய இ-பிளாட்பாரம் 3.0-வைக் கொண்டே நிறுவனம் வடிவமைத்திருக்கின்றது. ஆகையால், ஆற்றல் மற்றும் பிரீமியம் அம்சங்களைத் தாங்கியிருப்பது என அனைத்திலும் தலைசிறந்த மின்சார கார் மாடலாகக் காட்சியளிக்கின்றது. மிகவும் கவர்ச்சியான லுக்கைக் கொண்ட கார் மாடலாகவும் அட்டோ 3 காட்சியளிக்கின்றது.

அந்தவகையில், இதன் அழகில் முக்கிய பங்கினை முகப் பகுதி வகிக்கின்றது. படிகம் மாதிரியான லுக்கைக் கொண்ட எல்இடி ஹெட்லைட், முழுமையாக அடைக்கப்பட்டதைப் போன்ற கிரில், பிஒய்டி எனும் பேட்ஜைத் தாங்கிய பெரிய குரோம் பட்டை, பெரிய காற்றை வாங்கும் துளைகள் உள்ளிட்டவையே இந்த காரின் முன்பக்கத்திற்கு அதிக அழகைச் சேர்க்கின்றன.
இதுபோல இன்னும் பல கவர்ச்சி வேலைகளை காரின் பக்கவாட்டு பகுதி மற்றும் பின் பக்கங்களில் நம்மால் காண முடிகின்றது. இதில் மயங்கியே மலையாள இசையமைப்பாளர் பிஒய்டி அட்டோ 3 எஸ்யூவி எலெக்ட்ரிக் காரை வாங்கி இருக்கின்றார். இந்த காரில் நவீன அட்வான்ஸ்டு அம்சங்கள் மிகவும் தாராளமாக இடம் பெற்றிருக்கும் என்பது கவனிக்கத்தகுந்தது.
தேவைக்கு ஏற்ப திருப்பிக் கொள்ளும் வசதிக் கொண்ட 12.8 அங்குல திரை, வயர்லெஸ் செல்போன் சார்ஜிங் கருவி, 360 டிகிரி பார்வை திறன் கொண்ட கேமிரா, ஒரே டச்சில் இயங்கும் வசதிக் கொண்ட எலெக்ட்ரானிக் கன்ட்ரோல் டெயில்கேட், என்எஃப்சி கார்டு வகை கார் சாவி உள்ளிட்ட வசதிகளையே இந்த கார் கொண்டிருக்கின்றது. இந்த அம்சங்களும் பெரும் பணக்காரர்கள் பிஒய்டி எலெக்ட்ரிக் கார்கள் பக்கம் கவரக் காரணமாக இருக்கின்றது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் ஆடி, பென்ஸ் மற்றும் பிஎம்டபிள்யூ போன்ற ஆடம்பர கார்களைப் பயன்படுத்தி வருவோர் மத்தியிலேயே பிஒய்டி-க்கு நல்ல வரவேற்புக் கிடைத்துக் கொண்டிருக்கின்றது. இதற்கு சான்றாகவே மலையாள திரையுலகைச் சேர்ந்த இசை இயக்குநர் அட்டோ 3 எலெக்ட்ரிக் காரை வாங்கிய நிகழ்வு அரங்கேறி இருக்கின்றது.


Click it and Unblock the Notifications








