யூடியூப்பில் பணம் சம்பாதிப்பவருக்கு இப்படியொரு வாழ்க்கையா? இந்த எலக்ட்ரிக் காரோட விலை மட்டும் எவ்வளவு தெரியுமா

சமீப காலமாக யூடியூப் மற்றும் இன்ஸ்டாகிராம் போன்ற சமூக வலைத்தளங்கள் பலருக்கு நல்ல வருவாயை ஈட்டி கொடுக்கிறது. இதற்கு உதாரணமாக, மதன் கௌரி, இர்ஃபான், ஜிபி முத்து என சொல்லிக் கொண்டே போகலாம். இந்திய அளவில் என்று எடுத்து பார்த்தால், இன்னும் நிறைய பேர் இருக்கின்றனர். அந்த வகையில், கேரளாவில் பிரபலமான உணவு வீலாக்கர் (Food Vlogger) ஆக இருப்பவர் பாசிம் பிளேட் (Basim Plate). அதாவது, புது, புது உணவகங்களுக்கு சென்று அங்கு பரிமாறப்படும் உணவுகளை ருசித்து பார்த்து யூடியூப்பில் தனது ரிவியூவை வழங்குவதுதான் பாசிம் பிளேட்டின் முதன்மையான பணி ஆகும்.

இதன் மூலம், கேரள மக்கள் மத்தியில் பிரபலமானவராக விளங்கும் பாசிம் பிளேட் புதியதாக விலையுயர்ந்த எலக்ட்ரிக் கார் ஒன்றை வாங்கியுள்ளார். இதனை அவர் படங்களுடன் தனது இன்ஸ்டாகிராம் மற்றும் ஃபேஸ்புக் பக்கங்களில் தெரிவித்துள்ளார். பாசிம் பிளேட் வாங்கியிருப்பது விலையுயர்ந்த எலக்ட்ரிக் காரான ஹூண்டாய் ஐயோனிக் 5 ஆகும்.

food vlogger buys hyundai ioniq-5

கேரளாவின் மலப்புர மாவட்டத்தில் அமைந்துள்ள பெரிந்தல்மண்ணை நகரத்தை சேர்ந்தவரான இவரது பெயர் பாசிக் நலகந்த். உணவு திண்பண்டங்கள் மீது கொண்டிருக்கும் அதீத ஈடுப்பாட்டினால் தனது பெயரின் பின்னால் 'பிளேட்' என்கிற வார்த்தையை பாசிம் சேர்த்துக் கொண்டார். மேலும், தனது யூடியூப் சேனலுக்கும் பிளேட் என பெயர் வைத்துள்ளார். ஆங்கில வார்த்தையான பிளேட் என்பதன் தமிழ் அர்த்தம் தட்டு என்பது உங்களுக்கு தெரிந்திருக்கும்.

பாசிம் பிளேட் பேசும் மலப்புர மலையாள ஸ்டைல் பலருக்கு பிடித்துள்ளதினால், உணவு பிரியர்கள் பலரும் இவரை சமூக வலைத்தளங்களில் பின்பற்றுகின்றனர். தற்போதைய நிலவரப்படி, இன்ஸ்டாகிராமில் இவரை 10 லட்சத்திற்கும் அதிகமானோர் பின்பற்றுகின்றனர். அதேபோல், யூடியூப்பில் இவரது சேனலுக்கு 5 லட்சத்திற்கும் அதிகமான சப்ஸ்கிரைபர்கள் உள்ளனர்.

food vlogger buys hyundai ioniq-5

இந்த அளவிற்கு கேரளாவில் பிரபலமாக இருக்கும் பாசிம் பிளேட் புதியதாக வெள்ளை நிறத்தில் ஹூண்டாய் ஐயோனிக் 5 எலக்ட்ரிக் காரை வாங்கியுள்ளார். இந்த எலக்ட்ரிக் காரை பற்றி சொல்ல வேண்டுமென்றால், கொரியன் ஸ்டைலில் உருவாக்கப்படும் ஐயோனிக் 5 இந்தியாவில் ஒரேயொரு வேரியண்ட்டில் மட்டுமே விற்பனை செய்யப்படுகிறது.

இதன் எக்ஸ்-ஷோரூம் விலை தற்சமயம் ரூ.46.05 லட்சமாக உள்ளது. ஹூண்டாய் நிறுவனம் அதன் எதிர்கால எலக்ட்ரிக் கார்களை உருவாக்குவதற்காக இ-ஜி.எம்.பி என்கிற பிளாட்ஃபாரத்தை வடிவமைத்துள்ளது. இந்த புத்தம் புதிய பிளாட்ஃபாரத்தில் உருவாக்கப்பட்ட முதல் எலக்ட்ரிக் கார் ஐயோனிக் 5 ஆகும். இந்த எலக்ட்ரிக் காரின் முன்பக்கத்தில் பாராமெட்ரிக் பிக்ஸெல் எல்இடி ஹெட்லேம்ப்கள் வழங்கப்படுகின்றன.

food vlogger buys hyundai ioniq-5

அத்துடன், பறித்து இழுக்கக்கூடிய கதவு கைப்பிடிகள், 20-இன்ச் அலாய் சக்கரங்கள் உள்ளிட்டவையும் இந்த காரில் இடம்பெறுகின்றன. இவை எல்லாவற்றையும் விட முக்கியமாக, ஆக்டிவ் ஏர் ஃப்ளாப் என்கிற வசதி ஐயோனிக் 5 காரில் வழங்கப்படுகிறது. இது காரின் முன்பக்க பம்பர் வழியாக காற்றை உள்ளே அனுமதித்து, உள்ளே இருக்கும் பாகங்களை குளிர்விக்க உதவும். மேலும், ஆக்டிவ் ஏர் ஃப்ளாப் மூலமாக எதிர்காற்றினால் காரின் வேகம் குறைவதும் தடுக்கப்படுகிறது.

லெவல்-2 அடாஸ் உள்பட பல்வேறு அட்டகாசமான அம்சங்களை பெறும் ஐயோனிக் 5 எலக்ட்ரிக் காரில் 72.6kWh பேட்டரி தொகுப்பு வழங்கப்படுகிறது. இந்த பேட்டரி பொருத்தப்படும் மோட்டாரின் மூலமாக அதிகப்பட்சமாக 216 எச்பி மற்றும் 350 என்.எம் டார்க் திறன் வரையிலான இயக்க ஆற்றலை பெறலாம். இந்த காரின் பேட்டரியை முழுவதுமாக சார்ஜ் நிரப்பினால் அதிகப்பட்சமாக சுமார் 631கிமீ தொலைவிற்கு செல்லலாம் என்கிறது ஹூண்டாய் நிறுவனம்.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: 631கிமீ என்பது மிகவும் அதிகம் ஆகும். நிஜ உலகில் இந்த அளவிற்கு ரேஞ்ச் கிடைக்காது என்றாலும், உலகில் அதிக ரேஞ்சை வழங்கும் எலக்ட்ரிக் கார்களுள் ஒன்றாக ஹூண்டாய் ஐயோனிக் 5 விளங்குகிறது. இத்தகைய எலக்ட்ரிக் காரை இன்றைய கால இளம் தலைமுறையினர் தேர்வு செய்கின்றனர் என்பதில் எந்த ஆச்சிரியமும் இல்லை. ஆனால், கிட்டத்தட்ட ரூ.50 லட்சம் மதிப்புள்ள காரை யூடியூப்பில் வீடியோக்களை பதிவிடுபவர் வாங்கியுள்ளார் என்பதுதான் கொஞ்சம் ஆச்சிரியத்தை ஏற்படுத்துகிறது.

More from DriveSpark

Article Published On: Tuesday, June 11, 2024, 15:29 [IST]
English summary
Malayali food vlogger buys hyundai ioniq 5 electric car check all details here
மேலும்... #off beat #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X