அம்பானி-அதானி பயன்படுத்தும் காரை 45,000 ரூபா செலவில் வீட்டுக்கு கொண்டு வந்த இளைஞர்! இது எப்படி சாத்தியம்?

உலக அளவில் பெரும் செல்வந்தர்கள் மட்டுமே பயன்படுத்தும் காராக ரோல்ஸ் ராய்ஸ் நிறுவனத்தின் தயாரிப்புகள் இருக்கின்றன. இந்த நிறுவனத்தின் கார் மாடலை ஓர் இளைஞர் வெறும் ரூ. 45 ஆயிரம் செலவில் தன்னுடைய வீட்டிற்குக் கொண்டு வந்திருக்கின்றார். அது எப்படி சாத்தியம் என்றுதானே கேக்குறீங்க. இதுகுறித்த கூடுதல் விபரங்களை இந்த பதிவில் பார்க்கலாம், வாங்க.

பெரும் கோடீஸ்வர்களுக்கே நீண்ட நாள் கனவு வாகனமாக இருக்கின்றது ரோல்ஸ் ராய்ஸ் நிறுவனத்தின் தயாரிப்புகள். இந்த நிறுவனத்தின் தயாரிப்புகள் ஒவ்வொன்றும் பல கோடி ரூபாயைக் கொண்டிருக்கின்ற சூழலில் கேரள மாநிலத்தைச் சேர்ந்த ஓர் இளைஞர் அசால்டாக வெறும் ரூ. 45 ஆயிரம் செலவில் ரோல்ஸ் ராய்ஸ் காரை தன்னுடைய வீட்டிற்கு எடுத்து வந்திருக்கின்றார்.

Maruti 800 converted into rolls royce

இது எப்படி சாத்தியம் என்று தானே கேக்குறீங்க. சாத்தியம் இல்லாததையே அந்த இளைஞர் சாத்தியமாக்கி இருக்கின்றார். மாடிஃபிகேஷன் வாயிலாகவே அதனை அவர் சாத்தியப்படுத்தி இருக்கின்றார். அந்த நபர் மிகவும் சாதாரணமான கார் மாடல்களில் ஒன்றான மாருதி சுஸுகி 800 மாடலைக் கொண்டே தனக்கான ரோல்ஸ் ராய்ஸ் காரை உருவாக்கி இருக்கின்றது.

தான் இந்த காரை உருவாக்கிய விதம் குறித்த வீடியோவையும் அவர் வெளியிட்டு இருக்கின்றார். இந்த வீடியோ வாயிலாகவே அவர் மிகவும் விலை குறைவான ரோல்ஸ் ராய்ஸ் காரை உருவாக்கி இருப்பது இந்த உலகிற்கு தெரிய வந்திருக்கின்றது. மேலும், பலரை ஆச்சரியமடையவும் அந்த வீடியோ செய்திருக்கின்றது.

மிகவும் நேர்த்தியாக ரோல்ஸ் ராய்ஸ் காரின் உருவத்தை அந்த இளைஞர் மாருதி சுஸுகி 800-க்கு கொடுத்திருக்கின்றார். குறிப்பாக, ரோல்ஸ் ராய்ஸ் காரின் முகப்பு பகுதிக்கு பெரும் கவர்ச்சியை சேர்க்கும் வகையில் இடம் பெற்றிருக்கும் 'ஸ்பிரிட் ஆஃப் எக்ஸ்டசி' (Spirit of Ecstasy')-யைக் கூட இந்த காரில் அவர் வழங்கி இருக்கின்றார்.

இது அந்த காருக்கு கூடுதல் சிறப்பு சேர்க்கும் வகையில் அமைந்திருக்கின்றது. இதனை சிறுவர்களுக்கான விளையாட்டு பொருட்களில் இருந்து பெறப்பட்டு காரில் பொருத்தியிருக்கின்றார். மேலும், சாதாரணமான மாருதி 800 காரை மிகவும் அரிய வகை காராக மாற்றுவதற்காக அந்த காரில் பல்வேறு மாற்றங்களை அவர் செய்திருக்கின்றார்.

Maruti 800 converted into rolls royce

குறிப்பாக, காரின் உட் மற்றும் வெளிப்புறத்தில் மிகப் பெரிய மாற்றங்களை அவர் செய்திருக்கின்றார். இந்த மாற்றங்களினாலேயே அந்த காரின் வெளிப்புறம் ரோல்ஸ் ராய்ஸ் காரை போல மாறி இருக்கின்றது. அதேவேளையில், பிஎம்டபிள்யூ காரில் காணப்படும் சில சொகுசு அம்சங்களையும் இந்த காரின் உட்பக்கத்தில் அவர் சேர்த்திருக்கின்றார்.

இதற்காக முன்னதாக 800 காரில் வழங்கப்பட்டு இருந்த பல்வேறு பாகங்களை அவர் அகற்றி இருக்கின்றார். இந்த நிலையிலேயே ரோல்ஸ் ராய்ஸ் காரை போல மாற்றுவதற்கான பாகங்கள் அனைத்தையும் அவரே அவருடைய கைப்பட உருவாக்கி இருக்கின்றார். மெட்டல் ஷீட்களைக் கொண்டு வெளிப்புற பேனல்கள் உருவாக்கப்பட்டு இருக்கின்றது.

Maruti 800 converted into rolls royce

இதுதவிர, ஹெட்லைட் மற்றும் இன்டிகேட்டர் உள்ளிட்டவையும் ரோல்ஸ் ராய்ஸ் காரை பிரதிபலிக்கும் வகையிலேயே அவர் சேர்த்திருக்கின்றார். இந்த அனைத்து மாற்றங்களையும் மேற்கொள்ள அவருக்கு வெறும் ரூ. 45 ஆயிரம் மட்டுமே செலவாகியதாகக் கூறப்படுகின்றது. இவ்வளவு குறைவான செலவில் அவர் ரோல்ஸ் ராய்ஸ் பிரதிபலிப்பை உருவாக்கியது உண்மையில் மிகப் பெரிய ஆச்சரியமான செயல் என கார் ஆர்வலர்கள் பலர் அந்த நபரை பாராட்டி வருகின்றனர்.

கேரளாவைச் சேர்ந்த ஹதிஃப் என்பவரே இந்த காரை உருவாக்கியவர் ஆவார். அவர் இதுபோன்று தனித்துவமான தோற்றம் கொண்ட கார்களை உருவாக்குவது முதல் முறையல்ல. இதற்கு முன்னதாகவும் இதுபோன்ற கார்களை அவர் வடிவமைத்திருக்கின்றார். சமீபத்தில்கூட மோட்டார்சைக்கிளின் எஞ்ஜினைக் கொண்டு ஜீப் நிறுவன காரை அவர் தயார் செய்திருந்தார் என்பது குறிப்பிடத்தகுந்தது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: இளைஞர் தயார் செய்திருக்கும் இந்த கார் அச்சு அசல் ரோல்ஸ் ராய்ஸ் காரை போல் இருக்கின்றது என்று கூறிவிட முடியாது. அதேவேளையில், அந்த காரை மிக சிறப்பாக அது பிரதிபலிக்கும் வகையில் இருக்கின்றது. சொல்லப் போனால் 45 ஆயிரம் ரூபாய் செலவில் இவ்வாறு காரை மாடிஃபை செய்ய முடியும் என்பதே பலருக்கு ஆச்சரியமாக அமைந்திருக்கின்றது.

More from DriveSpark

Article Published On: Monday, October 2, 2023, 19:32 [IST]
English summary
Malayali youth converted maruti 800 into rolls royce here is more details
மேலும்... #ஆஃப் பீட் #off beat
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+