மீடியா பார்ட்னர் டிரைவ்ஸ்பார்க்! நல்ல நோக்கத்திற்காக களமிறங்கிய 72 வயது இளைஞர்! மலேஷியா பைக் பேரணி ஆச்சரியம்!

பைக் ரைடிங் மீது ஆர்வம் கொண்டவர்கள் கலந்து கொண்ட பைக் அணிவகுப்பு நிகழ்ச்சி, மலேஷியாவில் நடைபெற்றது. மாண்ட்ஃபோர்ட் பாய்ஸ் டவுன் ஒப்பன் ஹவுஸ் சேரிட்டி சார்பில், இதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. இதற்கான ஏற்பாட்டாளராக சுரேஷ் கிருஷ்ணா இருந்தார். இந்த நிகழ்வின் அதிகாரப்பூர்வ மீடியா பார்ட்னராக டிரைவ்ஸ்பார்க் இருந்தது. இந்த நிகழ்வில் ஏராளமான பைக் ரைடர்கள் கலந்து கொண்டு தங்கள் ஆர்வத்தை வெளிப்படுத்தினர். இது குறித்த விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்.

மலேஷியாவில் பைக் ரைடிங் மீது ஆர்வம் கொண்டவர்களை ஒருங்கிணைத்து ஒரு பேரணி நடத்த திட்டமிடப்பட்டது. மாண்ட்ஃபோர்ட் பாய்ஸ் டவுன் அமைப்பின் சார்பில் இந்த நிகழ்விற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்த நிலையில், கடந்த ஞாயிற்றுக்கிழமை (ஜூன் 9) இந்த நிகழ்வு நடைபெற்றது. இதில், 30க்கும் மேற்பட்ட பைக் ரைடர்கள் கலந்து கொண்டனர்.

malaysia bike ride parade

இந்த நிகழ்வில், பிஎம்டபிள்யூ ஆர்1250ஜிஎஸ், கேடிஎம் 790 டியூக், ஹார்லி டேவிட்சன் மற்றும் இந்தியன் க்ரூஸர் உள்ளிட்ட பல்வேறு பைக்குகளின் ரைடர்கள் கலந்து கொண்டனர். இவர்கள் எல்லாம் விழிப்புணர்வு ஏற்படுத்துதல் என்ற உயரிய நோக்கத்தை அடிப்படையாக கொண்டு இந்த நிகழ்வில் பங்கேற்றனர். எனவே இது சக்தி வாய்ந்த பைக்குகளின் கண்காட்சியாக மட்டுமில்லாமல், நல்ல இதயங்களை ஒருங்கிணைத்த மாபெரும் திருவிழாவாக இருந்தது.

இந்த திருவிழாவில், பலதரப்பட்ட வயதினர் கலந்து கொண்டனர். முக்கியமாக 72 வயது இளைஞர் ஒருவரும் ஆர்வமாக இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். இது பைக் ரைடிங்கிற்கு வயது ஒரு தடையல்ல என்பதை நிரூபிக்கும் வகையில் இருந்தது.

malaysia bike ride parade

மலேஷியாவில் உள்ள ஹைலேண்டர், ராங்கி பைக்கர்கள், கருடா பைக்கர்கள், ஆர்25 இந்தியன் பைக்கர்கள், போனிக்ஸ் பைக்கர்கள், இந்தியன் பைக்கர்கள் உள்ளிட்ட கிளப்களில் பைக் ஓட்டும் ரைடர்கள் இந்த திருவிழாவில் கலந்து கொண்டனர். எனவே பைக் ரைடிங் மீது ஆர்வம் கொண்டவர்களை ஒருங்கிணைக்கும் ஆன்மாவாக இந்த திருவிழா இருந்தது.

நாங்கள் ஏற்கனவே குறிப்பிட்டபடி இந்த திருவிழாவானது, வெறும் பைக்குகளின் அணிவகுப்பாக மட்டுமல்லாமல், விழிப்புணர்வை ஏற்படுத்துதல் என்ற உயரிய நோக்கம் கொண்டதாகவும், பைக் ரைடிங் சமூகங்களுக்கான பயிற்சியாகவும் அமைந்தது. இது அங்குள்ள மக்களை வெகுவாகவும் கவரும் வகையில் அரங்கேறியது.

malaysia bike ride parade

ஒரே நேரத்தில் ஒரே இடத்தில் பலதரப்பட்ட பைக் ரைடர்களை ஒருங்கிணைத்து, பல்வேறு விதமான விழிப்புணர்வுகள் மேற்கொள்ளப்பட்டது, மக்களின் கவனத்தை ஈர்த்தது. குறிப்பாக பைக்குகள் அணிவகுத்து சென்ற நேர்த்தி, மக்களை கவர்ந்தது. ஒட்டுமொத்தத்தில் பங்கேற்பாளர்கள் தங்களுடைய கருத்துக்களை, மிகப்பெரிய மக்கள் கூட்டத்திற்கு தெரிவிக்க, இந்த திருவிழா நல்லதொரு வாய்ப்பை ஏற்படுத்தி கொடுத்தது.

டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: மலேஷியாவில் இந்த வாகன திருவிழா வெற்றிகரமாக அரங்கேறியுள்ளது. இந்த திருவிழா பொழுதுபோக்கை வழங்கியதுடன் மட்டுமல்லாது, விழிப்புணர்வு ஏற்படுத்துதல் என்ற உயரிய நோக்கத்திற்காக பைக் ரைடர்கள் பலரையும் ஒருங்கிணைத்துள்ளது

More from DriveSpark

Article Published On: Tuesday, June 11, 2024, 18:58 [IST]
English summary
Malaysia bike ride parade charity carnival montfort boys town
மேலும்... #off beat #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X