ரொம்ப சிம்பிளா இருக்காங்களே... மிகவும் சாதாரணமான காரை வாங்கிய பிரபல நடிகரின் அம்மா... ரேட் எவ்ளோனு தெரியுமா?

இந்திய திரையுலகின் பல்வேறு மொழிகளிலும் மிகவும் பிரபலமான நடிகர்களில் ஒருவராக இருப்பவர் பிருத்விராஜ்.

Recommended Video

Maruti Ertiga CNG TAMIL Review | Performance, Mileage, Seats, Fuel Tank Capacity, Boot Space

இவரது அம்மா தற்போது சாதாரணமான கார் ஒன்றை வாங்கியுள்ளார். இதுகுறித்த விரிவான தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

ரொம்ப சிம்பிளா இருக்காங்களே... மிகவும் சாதாரணமான காரை வாங்கிய பிரபல நடிகரின் அம்மா... ரேட் எவ்ளோனு தெரியுமா?

இந்திய திரையுலகின் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருப்பவர் பிருத்விராஜ். மலையாளம், தமிழ் உள்பட பல்வேறு மொழி திரைப்படங்களிலும் பிருத்விராஜ் நடித்து வருகிறார். நடிகர் மட்டுமல்லாது, இயக்குனர் மற்றும் தயாரிப்பாளர் என இவருக்கு பல்வேறு முகங்கள் உள்ளன. திரைத்துறையை போல் மிகவும் விலையுயர்ந்த கார்கள் மீதும் பிருத்விராஜ் காதல் கொண்டவராக அறியப்படுகிறார்.

ரொம்ப சிம்பிளா இருக்காங்களே... மிகவும் சாதாரணமான காரை வாங்கிய பிரபல நடிகரின் அம்மா... ரேட் எவ்ளோனு தெரியுமா?

அவரிடம் உள்ள பல்வேறு கார்களே அதற்கு சாட்சி. பிருத்விராஜ் மிகவும் விலையுயர்ந்த பல்வேறு கார்களை சொந்தமாக வைத்திருக்கும் நிலையில், அவரது அம்மா மல்லிகா சுகுமாறன் (Mallika Sukumaran) தற்போது சாதாரணமான கார் ஒன்றை வாங்கியுள்ளார். மல்லிகா சுகுமாறன் வாங்கியிருப்பது, எம்ஜி ஹெக்டர் ப்ளஸ் (MG Hector Plus) கார் ஆகும்.

ரொம்ப சிம்பிளா இருக்காங்களே... மிகவும் சாதாரணமான காரை வாங்கிய பிரபல நடிகரின் அம்மா... ரேட் எவ்ளோனு தெரியுமா?

இது எஸ்யூவி ரகத்தை சேர்ந்த கார் ஆகும். பெட்ரோல் மற்றும் டீசல் என 2 வகையான இன்ஜின் ஆப்ஷன்களும் எம்ஜி ஹெக்டர் ப்ளஸ் காரில் கிடைக்கின்றன. இதில், 1.5 லிட்டர் டர்போ-பெட்ரோல் இன்ஜின் ஒன்றாகும். இந்த இன்ஜின் அதிகபட்சமாக 143 பிஎஸ் பவரையும், 250 என்எம் டார்க் திறனையும் உருவாக்க கூடியது. இந்த இன்ஜினுடன் 2 கியர் பாக்ஸ் ஆப்ஷன்கள் வழங்கப்படுகின்றன.

ரொம்ப சிம்பிளா இருக்காங்களே... மிகவும் சாதாரணமான காரை வாங்கிய பிரபல நடிகரின் அம்மா... ரேட் எவ்ளோனு தெரியுமா?

இதில், 6 ஸ்பீடு மேனுவல் கியர் பாக்ஸ் ஒன்றாகும். மற்றொன்று 8 ஸ்பீடு சிவிடி கியர் பாக்ஸ் ஆகும். இந்த 2 கியர் பாக்ஸ்களில் ஒன்றுடன் இந்த இன்ஜினை வாடிக்கையாளர்கள் தேர்வு செய்யலாம். ஆனால் எம்ஜி ஹெக்டர் ப்ளஸ் எஸ்யூவி காரின் 6 சீட்டர் வேரியண்ட்களில் மட்டுமே சிவிடி கியர் பாக்ஸ் தேர்வு வழங்கப்படுகிறது.

ரொம்ப சிம்பிளா இருக்காங்களே... மிகவும் சாதாரணமான காரை வாங்கிய பிரபல நடிகரின் அம்மா... ரேட் எவ்ளோனு தெரியுமா?

எம்ஜி ஹெக்டர் ப்ளஸ் எஸ்யூவி காரானது, 6 சீட்டர் மற்றும் 7 சீட்டர் என 2 விதமான இருக்கை ஆப்ஷன்களுடன் விற்பனை செய்யப்படுகிறது. இதில், 6 சீட்டர் வேரியண்ட்களில் மட்டுமே சிவிடி கியர் பாக்ஸ் ஆப்ஷன் கிடைக்கும். இதற்கிடையே 1.5 லிட்டர் டர்போ பெட்ரோல் இன்ஜினுடன், 48V மைல்டு ஹைப்ரிட் தொழில்நுட்பத்தையும் எம்ஜி மோட்டார்ஸ் நிறுவனம் வழங்குகிறது.

ரொம்ப சிம்பிளா இருக்காங்களே... மிகவும் சாதாரணமான காரை வாங்கிய பிரபல நடிகரின் அம்மா... ரேட் எவ்ளோனு தெரியுமா?

இந்த இன்ஜினுடன் 6 ஸ்பீடு மேனுவல் கியர் பாக்ஸ் ஆப்ஷன் மட்டுமே கிடைக்கும். இதுதவிர 2.0 லிட்டர் டீசல் இன்ஜின் ஆப்ஷனும் எம்ஜி ஹெக்டர் ப்ளஸ் காரில் வழங்கப்பட்டுள்ளது. இந்த இன்ஜின் அதிகபட்சமாக 170 பிஎஸ் பவரையும், 350 என்எம் டார்க் திறனையும் உருவாக்க கூடியது. 6 ஸ்பீடு மேனுவல் கியர் பாக்ஸ் ஆப்ஷனுடன் இந்த இன்ஜின் கிடைக்கும்.

ரொம்ப சிம்பிளா இருக்காங்களே... மிகவும் சாதாரணமான காரை வாங்கிய பிரபல நடிகரின் அம்மா... ரேட் எவ்ளோனு தெரியுமா?

எம்ஜி ஹெக்டர் ப்ளஸ் எஸ்யூவி காரில் பல்வேறு வசதிகள் வழங்கப்படுகின்றன. இதில், வயர்லெஸ் செல்போன் சார்ஜர், முன் பகுதியில் வென்டிலேட்டட் இருக்கைகள், பனரோமிக் சன்ரூஃப், மழை வந்தால் தானாக இயங்க கூடிய வைப்பர்கள், ஆம்பியண்ட் லைட்டிங், ஆப்பிள் கார்பிளே மற்றும் ஆண்ட்ராய்டு ஆட்டோ சப்போர்ட் வசதியுடன் 10.4 இன்ச் டச்ஸ்க்ரீன் இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம் போன்ற வசதிகள் முக்கியமானவை.

ரொம்ப சிம்பிளா இருக்காங்களே... மிகவும் சாதாரணமான காரை வாங்கிய பிரபல நடிகரின் அம்மா... ரேட் எவ்ளோனு தெரியுமா?

பாதுகாப்பை பொறுத்தவரையில், 6 ஏர்பேக்குகள், எலெக்ட்ரானிக் ஸ்டெபிளிட்டி ப்ரோக்ராம், முன் மற்றும் பின் பகுதியில் பார்க்கிங் சென்சார்கள், ஹில் ஹோல்டு கண்ட்ரோல், இபிடி உடன் ஏபிஎஸ், பிரேக் அஸிஸ்ட் மற்றும் ட்ராக்ஸன் கண்ட்ரோல் உள்பட ஏராளமான முக்கிய வசதிகளை எம்ஜி ஹெக்டர் ப்ளஸ் எஸ்யூவி கார் பெற்றுள்ளது.

ரொம்ப சிம்பிளா இருக்காங்களே... மிகவும் சாதாரணமான காரை வாங்கிய பிரபல நடிகரின் அம்மா... ரேட் எவ்ளோனு தெரியுமா?

இந்திய சந்தையில் டொயோட்டா இன்னோவா க்ரிஸ்ட்டா (Toyota Innova Crysta), டாடா சஃபாரி (Tata Safari), மஹிந்திரா எக்ஸ்யூவி700 (Mahindra XUV700) மற்றும் ஹூண்டாய் அல்கஸார் (Hyundai Alcazar) போன்ற கார்களுடன் எம்ஜி ஹெக்டர் ப்ளஸ் எஸ்யூவி கார் விற்பனையில் போட்டியிட்டு கொண்டுள்ளது.

ரொம்ப சிம்பிளா இருக்காங்களே... மிகவும் சாதாரணமான காரை வாங்கிய பிரபல நடிகரின் அம்மா... ரேட் எவ்ளோனு தெரியுமா?

இந்திய சந்தையில் தற்போதைய நிலையில் எம்ஜி ஹெக்டர் ப்ளஸ் காரின் ஆரம்ப விலை 16.15 லட்ச ரூபாயாக இருக்கிறது. அதே நேரத்தில் இந்த காரின் டாப் வேரியண்ட்டின் விலை 20.75 லட்ச ரூபாயாக இருக்கிறது. இவை இரண்டுமே எக்ஸ் ஷோரூம் விலையாகும். எனவே மிகவும் பிரபலமான நபராக உள்ள பிருத்விராஜின் அம்மா மல்லிகா சுகுமாறனை பொறுத்தவரையில் இது ஒரு சாதாரணமான கார்தான்.

Article Published On: Monday, August 22, 2022, 18:59 [IST]
English summary
Mallika sukumaran buys mg hector plus suv
மேலும்... #ஆஃப் பீட் #off beat
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+