இத யாருமே எதிர்பாக்கல... மோடி அரசுக்கு பெரிய ஷாக் கொடுத்த மம்தா பானர்ஜி... என்னவென்று தெரியுமா?

பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசுக்கு, மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி ஷாக் ஒன்றை கொடுத்துள்ளார். இதுகுறித்த விரிவான தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

இத யாருமே எதிர்பாக்கல... மோடி அரசுக்கு பெரிய ஷாக் கொடுத்த மம்தா பானர்ஜி... என்னவென்று தெரியுமா?

இந்தியாவில் சாலை விபத்துக்களால் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை மிகவும் அதிகமாக உள்ளது. வாகன ஓட்டிகள் போக்குவரத்து விதிமுறைகளை முறையாக பின்பற்றாததே இதற்கு காரணம். எனவே அனைத்து வாகன ஓட்டிகளையும் போக்குவரத்து விதிகளை சரியாக கடைபிடிக்க வைக்க தேவையான நடவடிக்கைககள் தீவிரமாக எடுக்கப்பட்டு வருகின்றன.

இத யாருமே எதிர்பாக்கல... மோடி அரசுக்கு பெரிய ஷாக் கொடுத்த மம்தா பானர்ஜி... என்னவென்று தெரியுமா?

நாடாளுமன்றத்தில் சமீபத்தில் நிறைவேற்றப்பட்ட மோட்டார் வாகன சட்ட திருத்த மசோதாவை இதற்கு ஒரு உதாரணமாக சொல்லலாம். மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை துறை அமைச்சர் நிதின் கட்கரியின் தீவிர முயற்சியின் பலனாக மோட்டார் வாகன சட்ட திருத்த மசோதா லோக்சபா மற்றும் ராஜ்யசபா என நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் வெற்றிகரமாக நிறைவேற்றப்பட்டது.

இத யாருமே எதிர்பாக்கல... மோடி அரசுக்கு பெரிய ஷாக் கொடுத்த மம்தா பானர்ஜி... என்னவென்று தெரியுமா?

திருத்தப்பட்ட மோட்டார் வாகன சட்டத்தில், போக்குவரத்து விதிமுறை மீறல்களுக்கான அபராதம் பல மடங்கு உயர்த்தப்பட்டுள்ளது. குடிபோதையில் வாகனம் ஓட்டுபவர்களுக்கு முன்பு வெறும் 2 ஆயிரம் ரூபாய் மட்டுமே அபராதம் விதிக்கப்பட்டு வந்தது. ஆனால் திருத்தப்பட்ட மோட்டார் வாகன சட்டத்தில் இதற்கான அபராத தொகை 10 ஆயிரம் ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது.

இத யாருமே எதிர்பாக்கல... மோடி அரசுக்கு பெரிய ஷாக் கொடுத்த மம்தா பானர்ஜி... என்னவென்று தெரியுமா?

இதேபோல் பல்வேறு போக்குவரத்து விதிமுறை மீறல்களுக்கான அபராதமும் பல மடங்கு அதிரடியாக உயர்த்தப்பட்டுள்ளது. திருத்தப்பட்ட மோட்டார் வாகன சட்டத்தின் 63 விதிகள் வரும் செப்டம்பர் 1ம் தேதி முதல் அமலுக்கு கொண்டு வரப்படும் என சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை துறை அமைச்சர் நிதின் கட்கரி கடந்த சில நாட்களுக்கு முன்பு அறிவித்திருந்தார்.

இத யாருமே எதிர்பாக்கல... மோடி அரசுக்கு பெரிய ஷாக் கொடுத்த மம்தா பானர்ஜி... என்னவென்று தெரியுமா?

அபராத தொகைகளை பல மடங்கு உயர்த்தியிருப்பதால் வாகன ஓட்டிகள் அனைவரும் போக்குவரத்து விதிமுறைகளை முறையாக கடைபிடிப்பார்கள் எனவும், இதன் காரணமாக இந்தியாவில் சாலை விபத்துக்களின் எண்ணிக்கை குறையும் எனவும் மத்திய அரசு நம்புகிறது. எனவே மத்திய அரசின் இந்த நடவடிக்கைக்கு பலரும் வரவேற்பு தெரிவித்து வருகின்றனர்.

இத யாருமே எதிர்பாக்கல... மோடி அரசுக்கு பெரிய ஷாக் கொடுத்த மம்தா பானர்ஜி... என்னவென்று தெரியுமா?

அதே சமயம் அபராதம் உயர்த்தப்பட்டுள்ளதை காரணமாக வைத்து வாகன ஓட்டிகளிடம் போலீசார் வசூல் வேட்டையில் ஈடுபடுவதற்கான வாய்ப்புகளும் உள்ளன எனவும் ஒரு தரப்பினர் எச்சரித்து வருகின்றனர். அதுவும் முன்பை விட அபராத தொகை தற்போது பல மடங்கு உயர்த்தப்பட்டுள்ளதால், இதற்கான வாய்ப்புகள் அதிகம் என்பது அவர்களின் கருத்தாக உள்ளது.

இத யாருமே எதிர்பாக்கல... மோடி அரசுக்கு பெரிய ஷாக் கொடுத்த மம்தா பானர்ஜி... என்னவென்று தெரியுமா?

இந்த சூழலில் திருத்தப்பட்ட மோட்டார் வாகன சட்ட திருத்த மசோதா மேற்கு வங்க மாநிலத்தில் அமலுக்கு கொண்டு வரப்படாது என தற்போது அதிரடியாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேற்கு வங்க மாநிலத்தில் முதல்வர் மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் ஆட்சி நடைபெற்று வருகிறது.

இத யாருமே எதிர்பாக்கல... மோடி அரசுக்கு பெரிய ஷாக் கொடுத்த மம்தா பானர்ஜி... என்னவென்று தெரியுமா?

பாஜகவிற்கும், திரிணாமுல் காங்கிரஸ் கட்சிக்கும் ஆகவே ஆகாது என்பது அனைவருக்கும் தெரிந்த ஒரு விஷயம்தான். அதிரடி நடவடிக்கைகளுக்கு பெயர் பெற்றவரான மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, ஆரம்பத்தில் இருந்தே பிரதமர் நரேந்திர மோடியையும், மத்திய அரசையும் பல்வேறு காரணங்களுக்காக மிக கடுமையாக சாடி வருகிறார்.

இத யாருமே எதிர்பாக்கல... மோடி அரசுக்கு பெரிய ஷாக் கொடுத்த மம்தா பானர்ஜி... என்னவென்று தெரியுமா?

இந்த சூழலில்தான் மேற்கு வங்க மாநிலத்தில் திருத்தப்பட்ட மோட்டார் வாகன சட்டம் தற்போதைக்கு அமலுக்கு கொண்டு வரப்படாது என அறிவிக்கப்பட்டுள்ளது. திருத்தப்பட்ட புதிய மோட்டார் வாகன சட்டத்தை மேற்கு வங்க அரசு அமல்படுத்தாதது என அம்மாநில சட்டமன்றத்தில் அறிவிக்கப்பட்டுள்ளது. அளவு கடந்த அபராத தொகைதான் இதற்கு காரணமாக கூறப்பட்டுள்ளது.

இத யாருமே எதிர்பாக்கல... மோடி அரசுக்கு பெரிய ஷாக் கொடுத்த மம்தா பானர்ஜி... என்னவென்று தெரியுமா?

சட்டமன்றத்தில் கேள்வி ஒன்றுக்கு பதில் அளிக்கும்போது போக்குவரத்து துறை அமைச்சர் சுவெண்டு ஆதிகாரி இதுகுறித்து கூறுகையில், ''புதிய மோட்டார் வாகன சட்டம் மேற்கு வங்கத்தில் தற்போதைக்கு அமலுக்கு கொண்டு வரப்படாது. டிரைவர்கள் மீது விதிக்கும்படி பரிந்துரைக்கப்பட்டுள்ள மிகப்பெரிய அபராதத்திற்கு நாங்கள் உடன்படவில்லை.

இத யாருமே எதிர்பாக்கல... மோடி அரசுக்கு பெரிய ஷாக் கொடுத்த மம்தா பானர்ஜி... என்னவென்று தெரியுமா?

இது தொடர்பாக மத்திய அரசுடன் நாங்கள் இன்னமும் தொடர்ந்து விவாதித்து கொண்டுள்ளோம்'' என்றார். திருத்தப்பட்ட புதிய மோட்டார் வாகன சட்டத்தை அமல்படுத்த மாட்டோம் என்ற மேற்கு வங்க மாநில அரசின் அறிவிப்பு எப்படிப்பட்டது? இது அரசியல் ரீதியான போட்டியா? என்பது தொடர்பான உங்கள் கருத்துக்களை கமெண்ட் பாக்ஸில் தெரியப்படுத்துங்கள்.

Article Published On: Thursday, August 29, 2019, 18:42 [IST]
English summary
West Bengal Government Not To Implement New Motor Vehicles Act: Transport Minister Suvendu Adhikari. Read in Tamil
மேலும்... #ஆஃப் பீட் #off beat
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+